siruppiddy nilavarai.com

Footer Widget 1

செவ்வாய், 21 ஆகஸ்ட், 2012

யாழ்ப்பாணத்தின் படைக்குறைப்பில் திருப்தியில்லை: அமெரிக்க அதிகாரிகளிடம் யாழ். ஆயர் எடுத்துரைப்பு

செவ்வாய்க்கிழமை, 21 ஓகஸ்ட் 2012,யாழ். மாவட்டத்தில் படைக்குறைப்பு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள போதும், படைக்குறைப்பில் திருப்தியில்லையென யாழ். ஆயர் அதிவண. தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த இலங்கைக்கான அமெரிக்க தூதுவராலய இரண்டாம் நிலை அதிகாரியான வில்லியம்ஸ் கைன் ஸ்ரைனிடமே ஆயர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இச்சந்திப்பு தெடர்பாக ஆயர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்ககையில்,
மீளக்குடியமர்வுகள் சரியான முறையில் மேற்கொள்ளப்படவில்லை. மீள்குடியமர்வில் அதிகளவான குறைபாடுகள் உண்டு. மக்களுக்கு தேவையான வீடு, மலசல கூடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் போதுமானதாக செய்யப்படவில்லை.
தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை அரசாங்கம் இன்னமும் முன்வைக்கவில்லை. வடமாகாண தேர்தலை அரசாங்கம் இன்னமும் நடாத்தவில்லை.
ஒருவேளை வடமாகாணத்திற்கான தேர்தலை அரசாங்கம் நடாத்தினால் மக்கள் தம்முடன் இல்லையென்பதை உலகம் அறிந்து விடும் என அச்சம் கொள்கின்றது.
அபிவிருத்திப் பணிகள் உரியாவாறு மக்களைச் சென்றடைவதில்லை. இதனாலேயே மக்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் இடைவெளி காணப்படுகின்றது. அங்காங்கே பொது மக்களது காணிகளை ஆக்கிரமித்து படைமுகாம் அமைக்கப்படுகின்றது.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் பல்வேறு குறைபாடுகள் உள்ளபோதும் அரசாங்கம் அவற்றை அமுல்படுத்த வேண்டும். இவ்வாறு அமுல்படுத்தினால் அது மக்களுக்கு உதவியாக இருக்கும் என்றார்.
நேற்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த இக்குழுவினர் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் உள்ளிட்ட பலரைச் சந்தித்துக் கலந்துரையாடினார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.