..நியூசிலாந்தில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.நியூசிலாந்தின் டாமரூனியில் இருந்து தென்மேற்கில் சுமார் 25 கிலோமீற்றர் தொலைவில் குறித்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
சுமார் 165 கிலோமீற்றர் பூமிக்கு அடியில் குறித் நிலநடுக்கம் 6.2 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளது.
இவ்வாறு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் நியூசிலாந்தின் தலைநகர் வெலிங்டன் பகுதி சுமார் 30 வினாடிகள் வரை அதிர்ந்ததாகவும் நாட்டின் பாராளுமன்ற நடவடிக்கைகள் இதன் காரணமாக ஒத்திவைக்கப்பட்டதாகவும் நியூசிலாந்து ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை நியூசிலாந்தின் வடக்கு தீவு மற்றும் தெற்கு தீவு என நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நில அதிர்வு உணரப்பட்டுள்ள போதிலும் இதனால் எவ்விதானமான உயிர்ச்சேதங்களும் ஏற்படவில்லை.
குறித்த நிலநடுக்கத்தால் அப்பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.