siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

வெள்ளி, 21 டிசம்பர், 2012

சோமாலியாவில் அகதிகள் படகு கவிழ்ந்தது: 55 பேர் பலி

சோமாலியாவிற்கு அருகிலுள்ள கடலில் படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 55 பேர் மூழ்கியுள்ளதாக அகதிகளுக்கான ஐ.நா முகமை தெரிவித்துள்ளது. வட -கிழக்கு சோமாலியாவின் போஸாஸ்ஸோ துறைமுகத்திலிருந்து புறப்பட்ட படகே இவ்வாறு கவிழ்ந்ததாகவும், இப்படகில் அதிகளவான பயணிகள் பயணித்ததே விபத்திற்கு காரணம் எனவும் அகதிகளுக்கான ஐ.நா முகமையாளர் தெரிவித்துள்ளார். இப்படகில் சோமாலியா மற்றும் எத்தியோப்பியா நாட்டை சேர்ந்தவர்கள் பயணித்து இருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது. மேலும்...

பிரான்ஸால் அல்ஜீரியா அனுபவித்த கொடுமைகள் அதிகம்

. பிரெஞ்ச் காலனிப்பகுதியாக இருந்த போது அல்ஜீரியா பல்வேறு துன்பங்களை சந்தித்ததாக ஜனாதிபதி பிராங்கோய்ஸ் ஹோலண்டே ஒப்புக் கொண்டுள்ளார். பிரான்ஸ், அல்ஜீரியா இடையிலான பொருளதார உறவுகளை ஊக்குவிக்கும் நோக்கில், பிரான்ஸ் ஜனாதிபதி பிராங்கோய்ஸ் ஹோலண்டே அல்ஜீரியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு அல்ஜியர்ஸ்ஸில் உள்ள நாடாளுமன்றத்தில் பேசுகையில், அல்ஜீரிய மக்கள் 132 வருடங்களாக கொடுமையான, நியாயமற்ற ஆட்சி முறையில் இருந்துள்ளனர். அப்போது பல்வேறு வகையான...

பிரிந்த தந்தையை சந்திக்க சூட்கேசுக்குள் மறைந்து சென்ற சிறுவன்.

.   இத்தாலியில் பிடிபட்டான் ஆப்கானிஸ்தானிலிருந்து, சூட்கேசில் அடைத்து, எடுத்து வரப்பட்ட சிறுவன், இத்தாலி, நாட்டில் மீட்கப்பட்டான். இத்தாலி, எல்லையோர காவல் படையினர், கடந்த வாரம், தங்கள் நாட்டு எல்லையில் நுழைந்த, அலி ஷெகர், 35, என்ற நபரை சோதனை இட்டனர். அப்போது அவர், ஒரு சூட்கேசை பத்திரமாக வைத்திருந்தார். சந்தேகமடைந்த காவலர்கள், அந்த சூட்கேசை திறந்து பார்த்த போது, 5 வயது பையன், சுருட்டியபடி படுத்திருந்தான். இது குறித்து...

பயங்கர ஆயுதங்களால் தாக்கி தப்பிக்க முயன்ற மெக்சிகோ கைதிகள்

       21 பேர் சுட்டுக்கொலை.நாட்டின் கோமேஸ் பலாசியோ நகரில் உள்ள சிறையில் ஏற்பட்ட கலவரத்தில் 21 பேர் கொல்லப்பட்டனர். சிறையிலிருந்து தப்பிக்க கைதிகள் முயன்றபோது கைதிகளுக்கும் சிறைக் காவலர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது கைதிகள் தங்களிடமிருந்த ஆயுதங்களைக் கொண்டு காவலர்கள் மீது தாக்கினர். அப்போது பதிலுக்கு காவலர்களும் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த மோதலில் கைதிகள் தரப்பில் 12 பேரும் காவலர்கள் தரப்பில்...

அயர்லாந்தின் புதிய கருக்கலைப்பு சட்டத்திற்கு கத்தோலிக்க

 பேராயர்கள் எதிர்ப்பு.           மகப்பேற்றின் போது தாயின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்ற நிலைமை வரும் போது அவர் கருக்கலைப்பு செய்வதை சட்டரீதியானதாக்குவோம் என்று அயர்லாந்து அரசாங்கம் அறிவித்துள்ளது. சவிதா ஹலப்பனவர் என்ற இந்திய வம்சாவளிப் பெண் ஒருவர் மரணமடைந்த ஏழாவது வாரத்தில் இந்த நகர்வு வருகிறது. 31 வயதான சவீதா 17 வார கர்ப்பிணியாக இருந்தபோது கல்வே மருத்துவமனையில் கருச்சிதைவு...

மதம் மாற மறுத்த காதலி. மனமுடைந்த இந்திய டாக்டர்

இங்கிலாந்து வெள்ளைக்காரகாதலியைதிருமணம் செய்து கொள்ளபெற்றோர்எதிர்ப்புதெரிவித்ததால், கர்நாடகத்தைசேர்ந்தடாக்டர்தற்கொலைசெய்து கொண்டார். கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்தவர் டாக்டர் மது ஹொன்னய்யா (33). மயக்கவியல் நிபுணர். இவர் இங்கிலாந்தின் லிவர்பூல் மருத்துவமனையில் கடந்த 2008ம் ஆண்டு பணிபுரிந்தார். அங்கு உடன் பணிபுரிந்த டாக்டர் எம்மா ரைட்டன் (32) என்ற வெள்ளைக்கார பெண்ணை காதலித்தார். இதற்கிடையில் ஆஸ்திரேலியாவில் வேலை கிடைத்து எம்மா சென்று...

சிகிச்சைக்கு வந்த சிறுமிகளிடம் சில்மிஷம் செய்த 70 வயது

  டாக்டருக்கு 11 வருடம் சிறை.           இங்கிலாந்தின் டோன்காஸ்டர் நகரில் கிளினிக் நடத்தி வந்தவர் டாக்டர் கவுசல் இஸ்லாம் (70). சிகிச்சைக்கு வரும் இளம்பெண்கள், சிறுமிகளை சோதனை என்ற பெயரில் ஆடைகளை களைவார். பரிசோதனை செய்வது போல கண்ட இடங்களில் கைவைப்பார். கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக வக்கிர புத்தியுடன் அவர் செய்துவந்த இந்த மோசடி செயல் கடந்த 2010ம் ஆண்டு மார்ச் மாதம் போலீசில் ஒரு பெண் கொடுத்த...

விபத்தில் இறந்தவர்களை மனித குளோனிங் மூலம் உயிர்ப்பிக்கலாம்

. இங்கிலாந்து விஞ்ஞானி நம்பிக்கை.           ஒரு மனிதனை அச்சு அசலாக மீண்டும் உருவாக்கும் மனித குளோனிங் தொழில் நுட்பமுறை இன்னும் 50 வருடங்களில் சாத்தியமாகும் என விஞ்ஞானிகள் தெரிவித்தனர். மருத்துவ அறிவியலில் நவீன கண்டு பிடிப்பான குளோனிங் முறை, உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இங்கிலாந்தை சேர்ந்த மருத்துவ விஞ்ஞானி சர்ஜான் கர்டன் 1950-ல் தவளையை குளோனிங் முறையில் உருவாக்கினார்....

கூட்டமைப்பின் உண்ணாவிரத போராட்டத்தை கலைக்கும் முயற்சி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உண்ணாவிரத போராட்டத்தை முன்னிட்டு தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள மேடை இனம் தெரியாத நபர்களினால் சேதப்படுத்தப்பட்டுள்ளது. யாழ். நகரில் அமைந்துள்ள தந்தை செல்வா சதுக்கத்தில் இன்றைய தினம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உண்ணாவிரத போராட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்காக நேற்றைய தினம் தற்காலிக பந்தல் ஒன்றினை அமைந்தது   எனினும் நேற்றிரவு இனந்தெரியாத நபர்களினால் அவ் தற்காலிகமாக அமைக்கப்பட்ட மேடை சேதப்படுத்தப்பட்டுள்ளது...