siruppiddy nilavarai.com

Footer Widget 1

வெள்ளி, 21 டிசம்பர், 2012

சிகிச்சைக்கு வந்த சிறுமிகளிடம் சில்மிஷம் செய்த 70 வயது

  டாக்டருக்கு 11 வருடம் சிறை.          
இங்கிலாந்தின் டோன்காஸ்டர் நகரில் கிளினிக் நடத்தி வந்தவர் டாக்டர் கவுசல் இஸ்லாம் (70). சிகிச்சைக்கு வரும் இளம்பெண்கள், சிறுமிகளை சோதனை என்ற பெயரில் ஆடைகளை களைவார். பரிசோதனை செய்வது போல கண்ட இடங்களில் கைவைப்பார். கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக வக்கிர புத்தியுடன் அவர் செய்துவந்த இந்த மோசடி செயல் கடந்த 2010ம் ஆண்டு மார்ச் மாதம் போலீசில் ஒரு பெண் கொடுத்த புகாரால் அம்பலமானது. அவரால் பாதிக்கப்பட்ட மேலும் பல பெண்கள் அடுத்தடுத்து புகார் கொடுக்க, விவகாரம் விஸ்வரூபமானது.

டாக்டர் பணி செய்ய லாயக்கு இல்லாதவர் என்று கூறி அவரை இங்கிலாந்து மெடிக்கல் கவுன்சில் சஸ்பெண்ட் செய்தது. ஷெப்பீல்டு கிரவுன் கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்தது. பாதிக்கப்பட்ட பெண்கள் சாட்சியம் அளிக்கும்போது கதறி அழுதனர். ‘கடவுளுக்கும் மேலாக டாக்டர்கள் மீது மக்கள் மரியாதையும் பக்தியும் வைத்திருக்கிறார்கள். அதை குலைக்கும் வகையில் கவுசல் இஸ்லாம் நடந்தது மன்னிக்க முடியாத குற்றம்’ என்று கூறி கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதி சைமன் லாலர், அவருக்கு 11 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார். தங்களுக்கு நடந்த கொடுமை பற்றி போலீசில் புகார் அளித்த பெண்களின் தைரியத்தையும் நீதிபதி பாராட்டினார்.

0 comments:

கருத்துரையிடுக