siruppiddy nilavarai.com

Footer Widget 1

வெள்ளி, 21 டிசம்பர், 2012

மதம் மாற மறுத்த காதலி. மனமுடைந்த இந்திய டாக்டர்


இங்கிலாந்து வெள்ளைக்காரகாதலியைதிருமணம் செய்து கொள்ளபெற்றோர்எதிர்ப்புதெரிவித்ததால், கர்நாடகத்தைசேர்ந்தடாக்டர்தற்கொலைசெய்து கொண்டார்.
கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்தவர் டாக்டர் மது ஹொன்னய்யா (33). மயக்கவியல் நிபுணர். இவர் இங்கிலாந்தின் லிவர்பூல் மருத்துவமனையில் கடந்த 2008ம் ஆண்டு பணிபுரிந்தார். அங்கு உடன் பணிபுரிந்த டாக்டர் எம்மா ரைட்டன் (32) என்ற வெள்ளைக்கார பெண்ணை காதலித்தார். இதற்கிடையில் ஆஸ்திரேலியாவில் வேலை கிடைத்து எம்மா சென்று விட்டார். எனினும் இருவரும் அடிக்கடி தொடர்பு கொண்டு பேசி வந்தனர்.
சில மாதங்கள் கழித்து இங்கிலாந்துக்கே வந்துவிட்டார் எம்மா. இருவரும் கடந்த 2010ம் ஆண்டு நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். இந்த விஷயத்தை பெற்றோரிடம் மது தெரிவிக்கவில்லை. இந்நிலையில் மகனை பார்க்க மதுவின் பெற்றோர் இங்கிலாந்து வந்தனர். அப்போது, மகன் வெள்ளைக்கார பெண்ணை காதலிப்பதும் இருவருக்கும் நிச்சயதார்த்தம் முடிந்ததும் தெரிந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.

தங்கள் ஜாதியில் அல்லது பிறந்து வளர்ந்த பெங்களூரில் இருந்து ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று மகனிடம் வலியுறுத்தினர். பெற்றோரை சமாதானப்படுத்த மது எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. கடைசியாக எம்மாவை இந்து மதத்துக்கு மாற்றி திருமணம் செய்து கொள்கிறேன் என்று மது கூறினார். இதுகுறித்து காதலியிடம் பேசினார். ஆனால், இந்து மதத்துக்கு மாற எம்மா மறுத்துவிட்டார். இதையடுத்து இருவரும் பிரிந்தனர்.
இதனால் சோகம் அடைந்த மது, ஸ்வான்சீயில் உள்ள சிங்கிள்டான் மருத்துவமனைக்கு மாறினார். கடந்த 7 மாதங்களாக மிகவும் மனம் நொறுங்கிய நிலையில் இருந்த மது, தான் தங்கியிருந்த அபார்ட்மென்டில் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகள் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
எனினும் மது எப்போது தற்கொலை செய்து கொண்டார் என்பது பற்றிய விவரங்களை வெளியிடவில்லை. கர்நாடக மாநிலம் சிர்சாவை சேர்ந்த நர்ஸ் ஜெசிந்தா, லண்டனில் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி அடங்குவதற்குள், பெங்களூரை சேர்ந்த டாக்டர் மது தற்கொலை செய்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

0 comments:

கருத்துரையிடுக