siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

சனி, 1 செப்டம்பர், 2012

கொக்குவில் பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் வாள்வெட்டு: கவலைக்கிடமான நிலையில் ஒருவர் வைத்தியசாலையில்!

.     01.09.2012.BYrajah. யாழ். கொக்குவில் பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் இடம் பெற்ற வாள்வீச்சு சம்பவத்தில் நால்வர் படுகாயமடைந்துள்ளதோடு ஒருவர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் இன்று இரவு 9 மணியளவில் இடம் பெற்றுள்ளது. இதன் போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு குழுவினரே தாக்குதல் மேற்கொண்டதாகத் தெரியவருகின்றது. இதன்போது சம்பவ இடத்திற்கு இராணுவத்தினர் வருகைதந்ததைத்...

நீலாவணை களப்பிலிருந்து இரு இளைஞர்களின் சடலங்கள் மீட்பு

01.09.2012.BY.rajah.மட்டக்களப்பு நீலாவணை பிரதேசத்தில் உள்ள களப்பு ஒன்றில் இருந்து இன்று மாலை இரு இளைஞர்கள் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர்கள் கல்முனை பிரதேசத்தை சேர்ந்த வினோ (22 வயது ) மற்றும் ஏட்டின் ( 22 வயது) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் களப்பில் நண்பர்களுடன் குளித்து கொண்டு இருக்கும் போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவத்தால் கல்முனை எங்கும் கவலையில் ஆழ்ந்துள்ளது....

யாழில் கப்பம் கோரி இருவர் கடத்தல்; காவற்றுறையினரால் மீட்பு, சந்தேக நபர் இருவர் கைது

01.09.2012.BYrajah.யாழ் நகரை அண்டிய பகுதி ஒன்றில் கப்பம் கோரி தாயையும் அவரது இரண்டு வயது மகனையும் கடத்திய இருவர் யாழ். காவற்றுறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.நேற்றுமுன்தினம் யாழ்ப்பாணம் பற்றிக்ஸ் கல்லூரி வீதி அருகாமையில் வைத்தே இருவரும் கடத்தப்பட்டதாகவும் பணத்திற்காகவே இக் கடத்தல் இடம்பெற்றுள்ளதாகவும் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதென யாழ். பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் எரிக் பெரேரா தெரிவித்துள்ளார்.இவ்விடயம் தொடர்பாக யாழ். பொலிஸ்...

வவுனியா மாவட்டத்தில் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளுக்கு முச்சக்கர வண்டிகள் வழங்க ஏற்பாடு

01.09.2012.BYrajah. புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகத்துடன் இணைக்கப்பட்ட வவுனியா மாவட்டத்தில் உள்ள முன்னாள் போராளிகள் 25 பேருக்கு புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு எலயன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து முச்சக்கரவண்டிகள் வழங்கப்படவுள்ளன இதற்கான கலந்துரையாடல் கடந்த 29ஆம் திகதி வவுனியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இதன் போது வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் போராளிகளுக்கு முச்சக்கர வண்டிகளை வழங்குவதற்கான நடைமுறைகள் குறித்து...

இலங்கை இராணுவத்திற்கு தேவையானவற்றை சீனா தொடர்ந்தும் வழங்கும்; சீன பாதுகாப்பு அமைச்சர்

01.09-2012.BY.rajah. இலங்கைப் படையினருக்குத் தேவையான பாதுகாப்பு மற்றும் உதவித் திட்டங்களை தொடர்ந்தும் வழங்குவதற்கும் இவ்வாறான செயற்பாடுகளினால் இரு தரப்பு உறவுகளும் தொடர வேண்டும் என சீனா பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் லியாங் குவாங்லீ தெரிவித்துள்ளார். அதன்படி குறைந்த செலவிலான இராணுவ உதவித் திட்டங்கள், ஆளளி பயிற்சிகளை விஸ்தரித்தல், கடற்சார் பாதுகாப்பு ஒத்துழைப்புகளை விஸ்ரித்தல், பயங்கரவாத ஒழிப்பு நிபுணத்துவத்தை பகிர்ந்துகொள்ளல் என்பனவற்றிற்கும்...

அச்சுவேலியில் பெறுமதி மிக்க பொருட்கள் மாயம்; பொலிஸார் தெரிவிப்பு

01.09.2012.BY.rajah. யாழ். அச்சுவேலி தோப்பு பகுதியில் பூட்டியிருந்த வீட்டை உடைத்து பெறுமதியான பொருட்களும் பணமும் கொள்ளையடிக்கப்பட்டமை தொடர்பில் முறைப்பாடு ஒன்று கிடைக்கப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்துள்ளர். நேற்றுய தினம் அச்சுவேலி தோப்பு இராச வீதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்துத் தெரிய வருவதாவது நேற்றுக்காலை வீட்டில் இருந்த அனைவரும் செல்வச்சந்நிதி ஆலயத்தின் தீர்த்தத் திருவிழாவிற்குச் சென்ற...

உணவுமின்றி 9 நாள்களாகக் கடலில் தத்தளித்த 43 இலங்கையர்கள் மீட்பு; ஆஸ்திரேலியா நோக்கிச் செல்கையில் துயரம்

01.09.2012.BY.rajah.ஆஸ்திரேலியா நோக்கிச் சென்று கொண்டிருந்த போது படகு இயந்திரம் பழுதடைந்ததால் 9 நாள்களாக உணவும் இன்றிக் கடலில் தத்தளித்த 43 இலங்கையர்களைத் தாங்கள் மீட்டுள்ளதாக இந்தோனேஷிய அதிகாரிகள் அறிவித்துள்ளனர். பட்டினியால் வாடி வதங்கி, சாகக் கிடந்த நிலையில் அவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளார்கள் என்று அந்த அதிகாரிகள் கூறுகின்றனர். இலங்கையில் இருந்து புறப்பட்ட இவர்களின் படகு இந்தோனேஷியாவுக்கு அருகில் பயணித்துக் கொண்டிருக்கையில்...

பிரபாகரன் வீட்டு பங்கருக்குள் வீழ்ந்த சிங்களப் பெண் சாவு

01.09.2012.BY.rajah.தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் வீட்டை பார்வையிடச் சென்ற சிங்களப் பெண்ணொருவர் காயங்களுடன் யாழ்.போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பயனின்றி நேற்று உயிரிழந்தார். ஜேபி சிறியலதா (வயது56) என்ற பெரும்பான்மையினப் பெண்ணே உயிரிழந்தவராவார். கடந்த 25 ஆம் திகதி முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பில் உள்ள தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் வீட்டை குறித்த...

தன்னை ரசிக்கும் ரசிகர்கள் கோவையில் அதிகம் இருக்கிறார்கள்: சினேகா

01.09.2012.BY.rajah. தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் தனக்கு பிடிக்கும் என்றும் தன்னை ரசிக்கும் ரசிகர்கள் இங்கு அதிகமிருப்பதாகவும் நடிகை சினேகா கூறியுள்ளார். நடிகை சினேகா நடித்துள்ள விடியல், ஹரிதாஸ் படங்கள் திரைக்கு காத்திருக்கின்றன. தற்போது கார்த்தி நடிக்கும் பிரியாணி படத்திலும் சினேகா நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் நடிகை சினேகா படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் இதர நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வருகின்றார். கோயம்புத்தூரில்...

நடிகர் கவுண்டமணியின் தாயார் காலமானார்

01.09.2012.BY.rajah. உடல் நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்த நகைச்சுவை நடிகர் கவுண்டமணியின் தாயார் காளியம்மாள் (87), நேற்று காலமானார். திரையுலகின் புகழ்பெற்ற நகைச்சுவை நடிகரான கவுண்டமணியின் தாயார் தமிழ்நாட்டின் உடுமலைப்பேட்டையில் தனது மகளுடன் வசித்து வந்தார். கடந்த மாதம் மாடிப் படியில் ஏறும்போது தவறி விழுந்ததில் படுகாயமடைந்தார். குறிப்பாக அவருடைய காலில் காயம் ஏற்பட்டது. அதற்காக வீட்டில் இருந்தவாறே சிகிச்சை மேற்கொண்டு வந்தநிலையில்...

விளம்பரத்திற்காக ரூ.5 கோடி வாங்கிய வித்யாபாலன்

01.09. 2012, BY.rajah. ஒரு ஜவுளிக்கடையின் புடவை விளம்பரத்தில் தோன்ற வித்யா பாலனுக்கு ரூ.5 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளது. பாலிவுட் நடிகைகள் ஐஸ்வர்யா ராய், கரீனா, கத்ரீனா போன்றவர்கள் படங்களில் வாங்கும் சம்பளத்தை விட, விளம்பரங்களில் நடிக்க வாங்கும் சம்பளம் மிக அதிகம். இவர்களுக்கு சளைத்தவரல்ல வித்யாபாலனும். அதுவும் தி டர்ட்டி பிக்சர் படம் வெளியாகி வெற்றிகளைக் குவித்த பிறகு, அவர் வாங்கும் சம்பளம் ஏகத்துக்கும் அதிகரித்து விட்டது....

அதென்ன ஜனனி அய்யர்? இயக்குனர் ஆவேசம்

 Saturday, 01 September 2012, BY.rajah. சாதி அடையாளங்களை பெயரோடு சுமந்து திரியும் வழக்கம் தற்போது பெண்களிடம் அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக பிரபலமாக உள்ள பல பெண்கள் தங்கள் பெயரோடு அய்யர், ரெட்டி, பிள்ளை, நாயுடு என போட்டுக் கொள்வதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். நடிக்க சான்ஸ் கேட்டு வரும் போது, பெயரையோ, அதனுடன் ஒட்டியிருக்கும் சாதி அடையாளத்தையோ மாற்றக்கூடாது என்று கண்டிப்பாகக் கூறுகிறார்கள். இதனை எந்த இயக்குநரும் கண்டிப்பதில்லை....

பாகிஸ்தானின் இந்து கோவில்களை சீரமைக்கக்கோரி லாகூர் கோர்ட்டில் மனு!

01.09.2012.BY.rajah.லாகூர்: பாகிஸ்தானின், பஞ்சாப் மாகாணத்தில் உள்ள இந்து கோவில்களை சீரமைக்க, அரசுக்கு உத்தரவிடக்கோரி மனு செய்யப்பட்டுள்ளது.இந்திய-பாகிஸ்தான் பிரிவினைக்கு பிறகு, ஏராளமான இந்து கோவில்கள், பாகிஸ்தானில் பராமரிக்கப்படாமல் உள்ளன. மாபியா கும்பல்கள் கோவில் நிலங்களை ஆக்ரமித்துள்ளன. இந்தியாவில் இருந்த, பாபர் மசூதி இடிப்பு சம்பவத்துக்கு பிறகு, பாகிஸ்தானில் பெரும்பாலான கோவில்கள், தரைமட்டமாக்கப்பட்டு விட்டன. மீதமுள்ள கோவில்கள், சிதிலமடைந்து...

வேளாங்கண்ணி ஆலய விழாவின் நோக்கம் என்ன? பங்குத்தந்தை விளக்கம்!

01.09-2012.BY.rajah. பெசன்ட் நகர்: மக்களின் தேவைகளை இறைவன் பூர்த்தி செய்ததற்காகவும், எதிர்காலத்தில் சிறந்த வாழ்க்கை அமைத்துக் கொடுக்கவுள்ளதற்காகவும், நன்றி சொல்லும் விதமாகவே, விழாக்களை கொண்டாடுகிறோம், என்று, பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி ஆலய பங்குத்தந்தை பிரான்சிஸ் மைக்கேல் தெரிவித்தார். பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தின், 40ம் ஆண்டு திருவிழா கோலாகலமாக நடந்து வருகிறது. நடக்கவுள்ள விழாக்கள் மற்றும் திருவிழாக்கள் நடத்துவதன் முக்கியத்துவம்...

களுத்துறை சிறைச்சாலை பின்புறம் போதைப்பொருள், சட்டவிரோத பொருட்கள் பொலிஸாரால் மீட்பு

1.09.2012.BY.rajah. களுத்துறை மாவட்ட சிறைச்சாலையின் மதிலுக்குப் பின்புறமாக சுமார் 5இலட்சம் ரூபா பெறுமதியான போதைப்பொருட்களும் சட்டவிரோத பொருட்களும் உள்ளடங்கிய பொதியொன்று நேற்று அதிகாலை 04.30மணியளவில் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.கைப்பற்றப்பட்ட பொதியினுள் கஞ்சா 560 பைக்கெற்றுகள், கோலிப் சிகரட் பைக்கெற் தலா01 , 06 பாபுல் பைக்கெற்றுகள் ,போத்தலிலே மறைத்து வைக்கப்பட்ட நிலையில் பெரிய கஞ்சா பைக்கெற் 28 ,03 கையடக்கத் தொலைபேசிகள்(செருப்புக்களிலே...

9 வது திருமண நாள் வாழ்த்து நேமி செல்வி

31.08.2012.BY.rajah 9 வது திருமண நாள் வாழ்த்து . திரு திருமதி.நேமி செல்வி சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் சுவிசை வசிப்பிடமாகவும்கொண்ட திரு திருமதி நேமிநாதன் (நேமி) ,திருவருட்ச்செல்வி(செல்வி ) தம்பதியினர் தமது 9 வது திருமண நாளை இன்று காணுகின்றனர் .  இவர்களை இவர்களது பிள்ளைகள் அபி (அபிநயன் ) சைந்தவி. மற்றும் இவர்களது அப்பா. அம்மா. உற்றார் .உறவினர்கள், நண்பர்கள், ஆகியோர் சிறுப்பிட்டி ஞான வைரவர் மற்றும் தெல்லிப்பளை துர்க்காதேவி துணைகொண்டு...