01.09-2012.BY.rajah.
இலங்கைப் படையினருக்குத் தேவையான பாதுகாப்பு
மற்றும் உதவித் திட்டங்களை தொடர்ந்தும் வழங்குவதற்கும் இவ்வாறான செயற்பாடுகளினால்
இரு தரப்பு உறவுகளும் தொடர வேண்டும் என சீனா பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் லியாங்
குவாங்லீ தெரிவித்துள்ளார்.
அதன்படி குறைந்த செலவிலான இராணுவ உதவித்
திட்டங்கள், ஆளளி பயிற்சிகளை விஸ்தரித்தல், கடற்சார் பாதுகாப்பு ஒத்துழைப்புகளை
விஸ்ரித்தல், பயங்கரவாத ஒழிப்பு நிபுணத்துவத்தை பகிர்ந்துகொள்ளல் என்பனவற்றிற்கும்
இணக்கம் காணப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் சீன பாதுகாப்பு அமைச்சருக்கும்
பாதுகாப்புச் செயலருக்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெற்றது. இந்தச் சந்திப்பின்
போதே இவ்வாறான முடிவுகள் எட்டப்பட்டுள்ளன.
யுத்தத்திற்குப் பின்னரான காலத்தில் இலங்கை
அரசாங்கம் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் பயங்கரவாதத்தை தோற்கடித்தன் பின்னர்
அடைந்துள்ள வெற்றிகள் குறித்து சீன தூதுக்குழுவினருக்கு பாதுகாப்பு செயலாளர்
கோட்டாபய ராஜபக்ஷ விளக்கமளித்தார்.
இடம்பெயர்ந்தோரில் 98 வீதமானோர்
மீள்குடியேற்றப்பட்டுள்ளதாகவும் ஏறத்தாழ அனைத்து முன்னாள் போராளிகளும் முறையான
புனர்வாழ்வின் பின்னர் சமூகத்துடன் ஒன்றிணைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
அத்துடன் வடபகுதியில் அபிவிருத்திப் பணிகள்
துரிதகதியில் மேற்கொள்ளப்படு வருவதாகவும் நாட்டின்மொத்த வளர்ச்சி வீதம் 7.5 ஆக
உள்ளநிலையில் வடபகுதியின் வளர்ச்சி வீதம் 25 சதவீதமாக இருப்பதாகவும் பாதுகாப்புச்
செயலர் தெரிவித்தார்.
சந்திப்பில் பாதுகாப்புச் செயலாளரின்
வேண்டுகோளுக்கிணங்க, படையினரிகளிடத்தில் விளையாட்டுத்துறையை அபிவிருத்தி
செய்வதற்கான உதவிகளை வழங்குவதற்கும் சீன பாதுகாப்பு அமைச்சர் குவாங்லீ
உறுதியளித்துள்ளார்.
பாதுகாப்புப் படையினருக்கான கல்லூரியில்
கட்டிடமொன்றை நிர்மாணிப்பதற்கும் உதவிகளை மேற்கொள்வதாக சீன பாதுகாப்பு அமைச்சர்
உறுதியளித்து ஒப்பந்தம் ஒன்றும் கைச்சாத்திடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.