பெசன்ட் நகர்: மக்களின் தேவைகளை இறைவன் பூர்த்தி செய்ததற்காகவும், எதிர்காலத்தில் சிறந்த வாழ்க்கை அமைத்துக் கொடுக்கவுள்ளதற்காகவும், நன்றி சொல்லும் விதமாகவே, விழாக்களை கொண்டாடுகிறோம், என்று, பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி ஆலய பங்குத்தந்தை பிரான்சிஸ் மைக்கேல் தெரிவித்தார். பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தின், 40ம் ஆண்டு திருவிழா கோலாகலமாக நடந்து வருகிறது. நடக்கவுள்ள விழாக்கள் மற்றும் திருவிழாக்கள் நடத்துவதன் முக்கியத்துவம் குறித்து, ஆலயத்தின் பங்குத்தந்தை பிரான்சிஸ் மைக்கேல் கூறியதாவது: திருவிழா என்பது அனைத்து மதத்தினராலும் கொண்டாடப்படுகிறது. மக்களின் தேவைகளை இறைவன் பூர்த்தி செய்ததற்காகவும், எதிர்காலத்தில் சிறந்த வாழ்க்கை அமைத்து கொடுக்கவுள்ளதற்காகவும் நன்றி கூறும் விதமாக, திருவிழாக்களை கொண்டாடுகிறோம். வேளாங்கண்ணி கோவிலில், திருவிழா, ஒன்பது நாட்கள் நடக்கிறது. முதல் நாள், கொடியேற்றுவதையே விழாவாக கொண்டாடுகிறோம். இரண்டாம் நாள் துறவற விழா நடக்கிறது. மூன்றாம் நாள் குடும்ப மக்கள் துறவறத்தில் உள்ளவர்களை போல சேவை செய்பவர்களை வாழ்த்தும் தினமாகும். நான்காம் நாள் முதல் தேதி சனிக்கிழமை நோயுற்றோருக்காக ஜெபிக்கப்படும் விழாவாகும். இதில் பங்கேற்கும் சுகவீனமுற்றோர் நலம் பெருவதாக நம்பிக்கை உண்டு. ஒவ்வொரு மாதமும் முதல் சனிக்கிழமை நோயுற்றோருக்கு இங்கு ஜெபிக்கப்படுகிறது. அன்று மாலை அனைவருக்கும், இறைவனின் அருள் பெற்ற எண்ணெய் தடவி ஜெபிக்கப்படுகிறது.
ஐந்தாம் நாள் ஏசு கிறிஸ்துவின் தேவ கருணையை விளக்குவதாக அமைகிறது. அன்று, ஏசு ரத்தம் சிந்தி காத்தார் என்பதற்காக, ரத்த தான முகாம் நடத்தப்படுகிறது. இந்தாண்டு நூற்றுக்கணக்கானோர் ரத்த தானம் செய்வார்கள் என எதிர்பார்க்கிறோம். ஆறாம் நாள் விழா உழைப்பாளர்கள் விழா. அவர்களை பாராட்டும் விழாவாகவே நடத்தப்படுகிறது. திருவிழாவின் ஏழாம் நாள் இளைஞர்கள் விழாவாக நடத்தப்படுகிறது. எட்டாம் நாள் ஆசிரியர் தின விழா நடத்தப்படுகிறது. ஆசிரியர்களின் சேவையை பாராட்டி, கவுரவித்து மேலும், அவர்கள் சிறந்த சேவையாற்ற வேண்டும் என, இறைவனிடம் ஜெபிக்கப்படுகிறது. ஒன்பதாம் நாள் குடும்ப விழா நடத்தப்படுகிறது. இந்தாண்டு திருமணமாகி வெள்ளி விழா மற்றும் பொன் விழா கண்டவர்களை மேடைக்கு அழைத்து, பல்லாண்டு நோய் நொடியின்றி வாழ்வதற்காக இறைவனிடம் ஜெபிக்கப்படுகிறது. விழாவின் இறுதி நாள் மக்களுக்கு உதவி செய்யும் மாதாவை வணங்குவதோடு, அவருக்கு விசவாத்தை காட்டுவதற்காக சிறப்பு தேரில் மாதாவின் பவனி வரச்செய்து, வழிபாடு நடத்தப்படுகிறது. அடுத்த நாள் ஆரோக்கிய அன்னையில் பிறப்பு விழா. இதை ஒட்டியே இந்த ஓன்பது நாள் விழா நடத்தப்படுகிறது. இவ்வாறு, பங்குத்தந்தை பிரான்சிஸ் மைக்கேல் தெரிவித்தார்.
மாதா சபை விழா: பெசன்ட்நகர் அன்னை வேளாங்கண்ணி ஆலய விழாவின் மூன்றாம் நாளான நேற்று மரியாயின் சேனை, மாதா சபை விழாவில் நேற்று காலை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் திருப்பலிகள் அரங்கேறின. மாலை வெள்ளி விழா அருட்பணியாளர்கள் பீட்டர் தும்மா, தனிஸ்லாஸ், ஜோசப் மாணிக்கம் ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர். விழாவை மறைமாவட்ட மரியாயின் சேனை, மாதா சபை, பிரன்சிஸ்கன் பொது நிலையினர் சிறப்பித்தனர். விழாவில் விசுவாசம் என்ற தலைப்பில் ஆயர் பேசியதாவது:பல புதுமைகளை ஆண்டவர் இயேசு செய்தார். அவர் பிசாசை ஓட்ட சென்றபோது, அவைகள், "நீர் வல்லமை மிக்க மகன் என்பது எங்களுக்கு தெரியும், என்றன. அவைகள் செயலற்ற விசுவாசம் கொண்டவை. யாருடைய வாழ்க்கையில் நல்ல செயல் வரவில்லையோ அது இறந்து போன விசுவாசமாக கருதப்படும். இவ்வாறு அவர் கூறினார்