01.09.2012.BY.rajah. |
தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் தனக்கு பிடிக்கும் என்றும் தன்னை ரசிக்கும் ரசிகர்கள் இங்கு அதிகமிருப்பதாகவும் நடிகை சினேகா கூறியுள்ளார். |
நடிகை சினேகா நடித்துள்ள விடியல், ஹரிதாஸ் படங்கள் திரைக்கு
காத்திருக்கின்றன. தற்போது கார்த்தி நடிக்கும் பிரியாணி படத்திலும் சினேகா நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் நடிகை சினேகா படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் இதர நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வருகின்றார். கோயம்புத்தூரில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சினேகா, அங்குள்ள ரசிகர்களை புகழ்ந்து பேசினார். கோவை மக்கள் சினிமா ரசனை உள்ளவர்கள் என்றும் தன்னை ரசிக்கக்கூடிய ரசிகர்கள் இங்கு அதிகம் இருக்கிறார்கள் எனவும் குறிப்பிட்டார். கோவை ரசிகர்களின் அன்பு தனக்கு எப்போதும் உண்டு எனவும் பேசினார் |
சனி, 1 செப்டம்பர், 2012
தன்னை ரசிக்கும் ரசிகர்கள் கோவையில் அதிகம் இருக்கிறார்கள்: சினேகா
சனி, செப்டம்பர் 01, 2012
செய்திகள்