யாழ். அச்சுவேலி தோப்பு பகுதியில் பூட்டியிருந்த
வீட்டை உடைத்து பெறுமதியான பொருட்களும் பணமும் கொள்ளையடிக்கப்பட்டமை தொடர்பில்
முறைப்பாடு ஒன்று கிடைக்கப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்துள்ளர்.
நேற்றுய தினம் அச்சுவேலி தோப்பு இராச வீதியில் இச்சம்பவம்
இடம்பெற்றுள்ளது.
சம்பவம் குறித்துத் தெரிய வருவதாவது
நேற்றுக்காலை வீட்டில் இருந்த அனைவரும்
செல்வச்சந்நிதி ஆலயத்தின் தீர்த்தத் திருவிழாவிற்குச் சென்ற சமயம் வீட்டினுள்
புகுந்த கொள்ளையர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இதில் 2 இலட்சம் ரூபாவிற்கு மேற்பட்ட பெறுமதி
மிக்க பொருட்களும் 26 ஆயிரம் ரூபா பணமும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில்
முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதையடுத்து அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றனர்