01.09. 2012, BY.rajah. |
ஒரு ஜவுளிக்கடையின் புடவை விளம்பரத்தில் தோன்ற வித்யா பாலனுக்கு ரூ.5 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளது. |
பாலிவுட் நடிகைகள் ஐஸ்வர்யா ராய், கரீனா, கத்ரீனா போன்றவர்கள் படங்களில்
வாங்கும் சம்பளத்தை விட, விளம்பரங்களில் நடிக்க வாங்கும் சம்பளம் மிக அதிகம். இவர்களுக்கு சளைத்தவரல்ல வித்யாபாலனும். அதுவும் தி டர்ட்டி பிக்சர் படம் வெளியாகி வெற்றிகளைக் குவித்த பிறகு, அவர் வாங்கும் சம்பளம் ஏகத்துக்கும் அதிகரித்து விட்டது. விளம்பர வாய்ப்புகள் வாசலில் க்யூவில் நிற்கின்றன. இவற்றில் புடவை தயாரிப்பு நிறுவனம் ஒன்றின் விளம்பரத்தில் நடிக்க அவர் ஒப்புக் கொண்டுள்ளார். இதற்காக வித்யாபாலனுக்கு ரூ.5 கோடி சம்பளம் பேசி, அட்வான்ஸ் கொடுத்துள்ளனர். அவர் செய்ய வேண்டியதெல்லாம், குறிப்பிட்ட சேலையின் விளம்பரங்களில் நடிப்பதோடு, தான் போகும் நிகழ்ச்சிகளுக்கும் அந்த பிராண்ட் புடவையை அணிந்து செல்ல வேண்டுமாம் |
சனி, 1 செப்டம்பர், 2012
விளம்பரத்திற்காக ரூ.5 கோடி வாங்கிய வித்யாபாலன்
சனி, செப்டம்பர் 01, 2012
செய்திகள்