siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

செவ்வாய், 25 செப்டம்பர், 2012

கருந்துளசியின் மருத்துவ நன்மைகள்



26.09.2012.By.Rajah
                                  
                                       :
:
 

எந்த ஆணுக்கு உள்ளது கருப்பை!.அ.வெண்ணிலா

 
25.09.2012.By.Rajah.நிலவைப் பற்றி எழுதாத கவிஞர்களே இல்லை என்று சொல்லலாம். அப்படியிருக்க; ஒரு கவிஞரின்பெயரேஅ.வெண்ணிலா என்கிற அந்தக் கவிஞரின் பெயரைக் காணும்போதெல்லாம் ஓ! நிலவுக்கே இனிசியல் இருக்கே என்றுதான் நினைக்கத் தோன்றும். அந்த வெண்ணிலாவுக்கு பத்து வருடங்களுக்கு முன்பு திருமணம். கவிஞர் மு.முருகேஷின் கரம் பிடித்த அவருக்கு இப்போது மூன்று நிலாக்கள். (பெண்ணுக்கு நிலா, ஆணுக்கு சூரியன் என்பதுதானே பொதுவில் இருக்கு )



கவிஞர் என்ற ஒற்றை அடையாளம் மட்டுமல்ல சிறுகதை ஆசிரியர், நாவலாசிரியர், கட்டுரை ஆசிரியர் என்ற பன்முகங்கள் கொண்டவர் வெண்ணிலா. மிக முக்கியமாக பாடம் புகட்டும் ஆசிரியர் என்கிற முகமும் இருக்கிறது.

வசித்து வரும் வந்தவாசியிலிருந்து அவர் தொலைபேசி வாயிலாக தனது வாழ்வை வாசித்தார். இதோ - சென்னையில் பதிவான வெண்ணிலாவின் வெளிச்சம்.


நவீன இலக்கியத்தளம் விட்டு இடம்பெயரும் எண்ணமில்லையா?

வாசிக்கத் தெரிந்த நாள் முதல் அப்பா வாசிக்கச்சொன்னவற்றை மட்டுமே வாசித்தேன். பதின் மூன்று வயசுக்கு பிறகு புத்தகபிரியை ஆனேன். கிடைத்ததை எல்லாம் வாசித்தேன். இருபது வயசுக்கு பின் எனது பார்வை நவீன இலக்கியம் பக்கம் திரும்பியது. இதுதான் என்று முடிவெடுத்தேன். அதன்பிறகு நவீன இலக்கியத்தின் மீதான ஆர்வம்தான் எனக்குள் இருக்கிறது. அது குறித்துதான் எனது தேடலும் இருக்குது. எப்போதும் என்னை நவீன இலக்கியவாதி என்று வெளிப்படுத்திக்கொள்ளவே விருப்பம்.


அதிகம் படிக்கும் பழக்கம் இருக்கு. ஆனால் அதிகம் படைப்பதில்லையே ஏன்?

அப்பா திராவிடர் கழகத்தில் இருந்ததால் பெரியார் புத்தகங்களை நிறைய வாசிக்கச் சொல்வார். வாசித்து முடித்த பிறகு அந்த புத்தகம் குறித்து கேள்விகள் கேட்பார். நான் பதில் சொல்வேன். அந்த கேள்வி பதில் பொழுதுகளே நல்ல விவாதமாக அமையும். வாசிப்பது அது குறித்து விவாதிப்பது என்று இருந்துவிட்டேன். நாமும் படைக்கவேண்டும் என்ற எண்ணமெல்லாம் கிடையாது.நான் சின்ன வயதில் இருந்தே கவிதை எழுதத்தொடங்கி விட்டேன் என்று எல்லோரும் சொல்லும் பதிலை என்னால் சொல்லமுடியாது. ஏன் தெரியுமா? நான் எழுதத்தொடங்கியதே இருபத்து ஏழு வயதில்தான்.



எழுதத்தொடங்கிய பிறகும் சில பதிவுகள்தான் செய்திருக்கிறேன். ‘நீரில் அலையும் முகம்’, ’ஆதியில் சொற்கள் இருந்தன’கனவை போலொரு மரணம்’ என்று மூன்று கவிதை தொகுப்புகளும் ‘பட்டுப்பூச்சிகளை தொலைத்த ஒரு பொழுதில்’ என்ற சிறுகதை தொகுப்பு மற்றும் ‘கனவிருந்த கூடு’என்ற காதல் கடிதங்களின் தொகுப்பும் பெண் எழுத்தாளர்களின் வாழ்க்கை பற்றிய ஆவணத்தொகுப்பாக’மீதமிருக்கும் சொற்கள்’ ஆகியவைதான் எனது பதிவுகள்.


நிறைய படிக்க வேண்டும் நிறைவான படைப்புகளை தரவேண்டும் என்று விரும்புகிறேன். இதுதான் நான் அதிகம் எழுதாமல் இருப்பதற்கான காரணம்.


தலைப்பில்லா கவிதைகளே எழுதிவருகிறீர்களே; தலையாய காரணம் என்ன?

கவிதைகளை ஒரு வட்டத்துக்குள் வைக்க விருப்பமில்லை. இஷ்டத்திற்கு இருக்க வேண்டும் என்பதால்தான் தலைப்பு வைப்பதில்லை. இஷ்டத்திற்கு என்று சொன்னது - சுதந்திரம்!. அப்புறம் முக்கியமான ஒன்று... தலைப்புகள், இது குறித்துதான் என்பதை உணர்த்திவிடுகிறது. எது குறித்து என்கிற தேடல் இருக்க வேண்டும். அந்த தேடலில் ஒரு சுவாரஸ்யம் இருக்கும். அது எனக்கு பிடிக்கும். அதனால்தான் அப்படி எழுதுகிறேன்.மற்றவர்களுக்கும் இது பிடிக்கும் என்று நம்புகிறேன்.



ஒரு உறைக்குள் இரு வாள் என்பது மாதிரி ஒரு வீட்டுக்குள் இரு கவிஞர்கள் இருக்கிறீர்கள். உரசல்கள் வருவதற்கு சந்தர்ப்பங்கள் அமைந்திடுமே?



இருவரும் கவிஞர்கள் என்பதாலும் காதல்திருமணம் என்பதாலும் நல்ல புரிதல் இருக்கு. மற்றபடி இலக்கியம் குறித்தான சூடான விவாதம் அடிக்கடி நிகழும். விவாதத்தில் ஆவி பறக்கும். எனது எல்லாக் கவிதைகளையும் அவர் பாராட்டியிருக்கிறார். அவரின் சில கவிதைகளை மட்டுமே நான் பாராட்டியிருக்கிறேன். ஹைக்கூ கவிதைகளை அவர்(மு.முருகேஷ்) எழுதிக்குவிக்கிறார். எனக்கு அவற்றில் விருப்பமில்லை. அப்படியிருந்தும் பதினைந்து ஹைக்கூ கவிதைகள் எழுதியிருக்கிறேன்.


காதலித்தால் கவிதை வரும் என்பார்கள். கவிதை எழுதினாலும் காதல் வரும் என்பார்கள். நீங்க சொல்லுங்க. கவிதை வந்ததும் காதல் வந்ததா? காதல் வந்ததும் கவிதை வந்ததா?

காதல் என்னை காதல் கடிதங்கள்தான் எழுதவைத்தது. திருமணம்தான் என்னை கவிதை எழுத வைத்தது. எனது முதல் தொகுப்பே காதல் கடிதங்களின் தொகுப்புதான். ’கனவிருந்த கூடு’ எனும் அத்தொகுப்பில் இருக்கும் கடிதங்கள் அனைத்தும் ஆறு மாதங்களாக நான் அவருக்கு எழுதிய காதல் கடிதங்களே. இத்தொகுப்பையும் திருமணத்திற்கு பிறகே வெளியிட்டேன்.



தோழர்களுடன் இணைந்து ‘பூங்குயில்’ சிற்றிதழ் நடத்தினேன். அது சம்பந்தமான விழாக்களுக்கு அடிக்கடி அவர் வருவார். ஆரம்பத்தில் இலக்கியங்கள் பற்றிய விவாதமாகத்தான் இருந்தது எங்கள் பேச்சு. பின்பு காதலானது. 1991 முதல் 97 வரை நண்பர்களாக இருந்தோம். அப்புறம் ஆறுமாதம் காதலர்கள். அதன்பிறகுதான் திருமணம் பற்றிய முடிவுக்கு வந்தோம்.



என்னதான் நானும் அவரும் ஆறு வருடங்கள் பழகியிருந்தாலும் கல்யாணம் என்று முடிவெடுத்துவிட்ட பிறகு எனக்குள் ஒரு வித கலக்கம். ஒரே பயம். அந்த பயம்தான் என்னை கவிதை எழுத வைத்தது. அடுத்த ஆண்டும் வசந்தம் ஆர்ப்பாட்டமாய் வரும்..என்று தொடங்கும் அந்தக்கவிதை.



ஒரு பெண்ணுக்கு திருமணத்துக்கு முன்பு வரை தந்தையின் பெயரே இனிசியல். திருமணத்திற்கு பிறகு கணவரின் பெயரே இனிசியல் என்பது தமிழ்வழக்கம். இதில் ஏன் முரண்பட்டீர்கள்?



திருமணத்துக்கு பிறகு ஆணின் பெயரில் எந்த மாற்றமும் இல்லை. பெண்ணின் பெயரில் மட்டும் ஏன் மாற்றமிருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்? தந்தை பெயர்தான் இனிஷியலாக இருக்க வேண்டும் என்பதும் ஆணாதிக்கம். தாய்,தந்தை பெயர்தான் பெயருக்கு முன்னால் இருக்கவேண்டும்.



அ.வெண்ணிலா என்று அடையாளப்பட்டுவிட்டதால் அப்படியே விட்டுவிட்டேன். ஆனால் என் மூன்று குழந்தைகளுக்கும் மு.வெ.கவின்மொழி, மு.வெ. அன்புபாரதி, மு.வெ.நிலாபாரதி என்று பெயர் வைத்துள்ளேன். அன்புபாரதியும் நிலாபாரதியும் இரட்டையர்கள்.


இனிசியல் குறித்து பேசியதால் நினைவுக்கு வந்தது. ஆண்கள் - பெண் பெயரில் எழுதக்கூடாது என்று சொல்லிவருகிறீர்களே?

சமீப காலத்தில் பெண்களின் குரலும், தலித்துகளின் குரலும், திருநங்கைகளின் குரலும், விளிம்புநிலை மக்களின் குரலும் தனித்த அடையாளங்களைக் கொண்டவை. வரலாற்றை மீள்பார்வை செய்பவை. வரலாற்றுக்கு எதார்த்த நிலையை தருபவை. இதில் பால் வேறுபட்டு புணைப் பெயரை சூடுதல் வரலாற்று திரிபை உண்டாக்கும்.


தமிழ் பெண் சிறுகதை எழுத்தாளர்களின் வரலாற்றை ஆவணமாக்க வேண்டும் என்ற முயற்சியில் இறங்கினேன். 1927 முதல் 2000 வரையிலான கால கட்டங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண் எழுத்தாளர்கள் பட்டியலை தயார் செய்து கொண்டு எழுத்தாளர் வல்லிக்கண்ணன் அவர்களை சந்தித்தேன்.



இவர் தன் மனைவி பெயரில் எழுதியவர், இவர் தன் தாயின் பெயரில் எழுதியவர் என்று பல பெயர்களை அடித்துவிட்டார் அவர். வல்லிக்கண்ணன் போன்ற அனுபவமிக்க எழுத்தாளரின் அந்த வழிகாட்டுதல் இல்லாதிருந்தால் என் தொகுப்பில் பிழை நேர்ந்திருக்கும்.



ஆய்வு செய்துதானே ஆவணப்படுத்த வேண்டும். பின்பு எப்படி வரலாற்று திரிபு ஆகும் என்று கேட்கலாம். சில எழுத்தாளர்களுக்கு குறிப்புகள் இருக்கு. பல எழுத்தாளர்கள் பற்றிய குறிப்புகளே இல்லை. இருபத்து ஏழுகளில் எழுதிய எழுத்தாளர்களின் படைப்புகளையே மிகுந்த சிரத்தையுடன் தேடவேண்டியிருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். பெயர் தேர்வும், புனைபெயரும் படைப்பாளியின் சுதந்திரம்தான். ஆனால், கறுப்பின எழுத்து, தலித் எழுத்து என்று சிலவற்றிற்கு தனித்த அடையாளம் இருக்கு. பெயர் மாற்றி எழுதுவதால் அடையாளங்கள் வேறுவிதமாக அர்த்தத்தை தந்து விடுகின்றன.

இன்றைக்கு ஒடுக்கப்பட்ட, கீழ்நிலைக்குத் தள்ளப்பட்ட பால்வேறுபாட்டை/இன வேறுபாட்டை அடையாளப்படுத்தும் குரல்களும் ஒலிக்கத் துவங்கியுள்ள காலத்தில் எழுதுபவன் சுயம் பற்றிய அடையாளமும் தேவைப்படுகிறது. பொதுவான இலக்கியம் படைப்பவர்கள் வரலாற்று திரிபு ஏற்பட காரணமாக இருக்கக்கூடாது.


பெண் சிறுகதை எழுத்தாளர்களின் வரலாற்றை ஆவணப்படுத்தும் எண்ணம் எப்படி வந்தது?

பெயர் சொல்லும் பிள்ளை என்பது போல் எழுத்தாளர்களின் பெயர் சொல்லும் கதைகளும் இருக்கின்றன. சில படைப்புகள் படைப்பாளியைப்பற்றி அறிய ஆவலைத்தூண்டும். சிறுகதைகளை அதிகம் படிக்கும் நான் அச்சிறுகதைகளின் ஆசிரியர்கள் பற்றிய முழு விபரங்களை அறிய விரும்பினேன். அதற்கான முயற்சியில் இறங்கினேன். இந்த தேடல் எல்லோருக்கும் பயன்படும் விதத்தில் அமையும் என்கிற நம்பிக்கை இருந்ததால் தேடலை தீவிரப்படுத்தினேன். மூன்று வருட தேடலுக்கு பிறகுதான் ‘மீதமிருக்கும் சொற்கள்’ உருவானது.

எழுத்தாளர் அனுத்தமாவுக்கு இப்போது 90வயசு. சரியாக பேச முடியாத நிலையில் இருந்தார். சிரமப்பட்டுத்தான் அவரும் பேசினார்; நானும் குறிப்புகளை சேகரித்தேன். மூப்பின் காரணமாக சரியாக பேசமுடியாத நிலையிலும் காது கேளாத நிலையிலும் சுயநினைவு சரியாக இல்லாத நிலையிலும் இருந்தார் கிருத்திகா. அவரது உறவினர்களின் உதவியுடன் அவரை கொஞ்சம் கொஞ்சம் பேச வைத்தேன். இந்த தொகுப்பில் இருக்கும் பலர் இப்போது உயிருடன் இல்லை. இந்நூல் வருவதற்கு உதவிய வல்லிக்கண்ணன், சிட்டி முதலான பெரும் படைப்பாளிகள் இந்நூல் வெளிவந்தபோது உயிருடன் இல்லை. மனசுக்கு கஷ்டமாக இருந்தது.

முதுபெரும் எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன் இப்போது முதியோர் இல்லத்தில் இருக்கிறாரே; சந்தித்தீர்களா?

‘மீதமிருக்கும் சொற்கள்’-க்காக அவருடன் தொலைபேசியில் தான் பேசினேன். இப்போது அவர் விச்ராந்தி முதியோர் இல்லத்தில் இருப்பதாக கேள்விப்பட்டேன். பிள்ளைகள் இல்லாததால் கணவர் இறந்தபிறகு ( 2002ல்) சொந்தத்தை நம்பி இருந்திருக்கிறார். இருந்ததை எல்லாம் சொந்தங்கள் பிடிங்கிக்கொண்டதால் இந்த என்பத்து மூன்று வயதில் இப்படிப்பட்ட நிலைக்கு வந்திருக்கிறார்.



இருபத்தைந்தில் திருச்சி முசிறியில் பிறந்த இவர் ஐம்பதுக்கும் மேற்பட்ட நாவல்கள், நூற்றுக்கும் அதிகமான சிறுகதைகள், கட்டுரைகள் எழுதியிருக்கிறார். உப்பள மக்களின் வாழ்க்கை பற்றி எழுதிய ‘ வேருக்கு நீர்’ படைப்புக்காக சாகித்ய அகாதமி விருது பெற்றார். அவருக்கா இந்த நிலமை என்று நினைக்கும் போது கஷ்டமாக இருக்கு. அவரை சந்திக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அது வெறும் அனுதாபம் குறித்த சந்திப்பாக இருக்கக்கூடாது. அர்த்தமுள்ள சந்திப்பாக இருக்கவேண்டும் என்று நினைக்கிறேன். மீதமிருக்கும் சொற்களில் அவரை வைத்துவிட்டாலும் இன்னும் அவரைப்பற்றிய பதிவுகள் ஏதும் பண்ணனும் என்று விரும்புகிறேன்.

தேவதாசிகளின் போராளி ராமாமிர்தத்தின் போராட்டங்கள் குறித்தும் வரலாற்றில் அவருக்கு உரிய அங்கீகாரம் அளிக்கப்படவில்லை என நீங்க எழுதியிருப்பதும் முக்கியமான பதிவு. ராமாமிர்தம் பற்றி அறிய முற்பட்டது எப்படி?

மதிபெற்ற மைனர் அல்லது தாசிகளின் மோசவலை என்று மூவலூர் ஆ.ராமாமிர்தம் எழுதிய நாவலை படித்தேன். அந்த நாவல் கிட்டத்தட்ட சுயசரிதை போன்று தன் வாழ்வை அடிப்படையாகக்கொண்டு அவர் எழுதியிருக்கிறார். இந்த நாவலே அவரைப் பற்றி, தேவதாசிகளும் ராமாமிர்தத்தின் போராட்டங்களும் என்ற கட்டுரை எழுத வைத்தது. தேவதாசிப்பெண்களிடையே விழிப்புணர்வை உண்டாக்குவதற்காக அவர்களையே உறுப்பினர்களாக கொண்ட நாகபாசத்தார் சங்கம் என்ற அமைப்பை உருவாக்கினார். இந்த சங்கமே இசை வேளாளர் சங்கம் என பெயர் மாற்றப்பட்டு இசை வேளாளர் மாநாடு, தேவதாசிகள் மாநாடு போன்றவற்றை நடத்தியுள்ளது.

தமிழகத்தில் இசை வேளாளர் சமூகத்தை சேர்ந்த பெண்களே தேவதாசிகளாக்கப்பட்டுள்ளனர். பொட்டு கட்டுதல், சுமங்கலி சடங்கு முதலான சடங்குகளின் மூலம் ஒரு பெண் தேவதாசியாக்கப்பட்டிருக்கிறாள்.


கோயிலில் நாட்டியப்பெண்ணாகவும் தெய்வத்தின் முன்னால் இசைப்பாடல் இசைப்பவளாகவும் பூஜைக்கு தேவையான பணிகளை செய்பவளாகவும் தேவதாசிப்பெண்களின் முக்கியப்பணிகள் இருந்துள்ளன.

தேவதாசிப்பெண்களை இம்முறையில் இருந்து விடுவித்து அவர்களை திருமண வாழ்க்கைக்குள்

மேலை நாட்டுக் கானல் நீர் ...!

25.09.2012.By.Rajah.எள்ளளவு தமிழ் - கொள்ளையளவு ஆங்கிலம் - அதுவே தங்கிலீஷ் எனும் தமிங்கிலம் ; காட்சி ஊடக கடல்களில் அதிகம் ஆளும் இந்தத் திமிங்கிலம்...! மொழியின் நலிவு - மொழிக் கலப்பில் துவக்கம் ; - ஓர் இனத்தின் அழிவு - மொழியின் நலிவினில் துவக்கம்...! மொழியில் மட்டுமா கலப்பு - இன்று அனைத்திலும் மேலை நாட்டுக் கலப்பு ; உணவில் கலப்பு - நோயின் பிறப்பு ; பண்பாட்டில் கலப்பு - சமூக சீரழிவின் தொகுப்பு ; - இவையே இன்றைய தீரா அருவருப்பு...! பிறமொழிகளின் ஆளுமைக்கு காரணம் - அவை வருமானம் தரும் மொழிகளாம் ; வருமானம் தரும் - ஆனால் அவை தன்மானம் தருமா...? அதைப் பற்றி - இங்கு யாருக்கு கவலை...!? வருமானம் தரும் மொழி... - அது ஒரு புறம் இருக்கட்டும் ; ஆயினும் - இந்த நாறிய மேலை நாட்டு - நாகரிகம் என்ன தரும்...?! நடையில், உடையில் பழகும் பண்பில், பாசத்தில் - சிறந்த நட்பில் - அழகிய காதலில் - இனிய உறவில் - அட அன்பில் கூட - நாம் அன்னியப்பட்டுப் போனோம் - நம் பழம்பெரும் உயர் பண்பாடு மறந்து ! கவின்மிகு - நம் பண்பாட்டுச் சோலை ; ஏன்...? - இந்த மேலைக் கானல் நீர் - பாய்ச்சும் வேலை...! பாரதி போல்... தேவநேய பாவாணர் போல்... பன்மொழிப் புலமை வேண்டும் - பன்னாட்டுக் கலைகள் யாவும் - பழகிடல் வேண்டும் - அவை நம் மொழியின் , நம் பண்பாட்டின் புகழினை எந்நாட்டிலும் பேசிடுவதற்கே...! நம் - அண்டை கன்னடத்தில் ஓர் அரும் நிகழ்வு... கோடிக்கணக்கான மதிப்பில் - வேளாண் துறை திட்டம் - அதன் கருத்துரு ஆங்கிலத்தில் எழுதியவர்களுக்கு - 1000 ரூபாய் தண்டம் விதித்தது - உத்தர கன்னட மாவட்ட நிர்வாகம் ; கன்னட மொழி புறக்கணிக்கப்பட்டதால்...! இங்கும் ஒரு நிகழ்வு அதே நேரத்தில்... ஓசூருக்கு அருகில், ஒரு தனியார் பொறியியல் கல்லூரி மாணவன் - தம் தாய் மொழித் தமிழில் பேசியதற்கு - தண்டம் விதித்தது கல்லூரி நிர்வாகம் ; இது போல் - இங்கு நாள்தோறும் நிகழ்வுகள் ஆயிரம்...! மனவேதனையுடன்... கடுந்தவம் தானிருந்து கடவுளிடம் வரம் கேட்டேன் ! தனித் தமிழுக்கு ‘பாதுகாப்பு’ தா என்று...! என்ன... தனித் தமிழுக்கு 'பாதுகாப்பா...?’ இவ்வரம் தர எம்மால் இயலாது - வேறு வரம் கேள் என்றே - புன்னகைத்து சென்று விட்டான் - எம் செந்தமிழ்க் கடவுள்...! ஏதும் விளங்காமல் வீடுவந்தேன் ; கேட்ட வரமே பிழை என்று - பிறகே உணர்ந்தேன்...! ‘பாது’ என்பதே - ‘காப்பு’ எனும் பொருள் தரும் - வடமொழிச் சொல்லே ! தமிழ் மொழியின் ஊடே இருந்து - குழி பறிக்கும் - இம் மொழிக் கலப்பினை - நலமில்லா நாறிய மேலை நாகரிகக் கலப்பினை - அடியோடு களையெடுக்க ; -மீண்டும் தவம் இருக்கிறேன் - பிழையில்லா வரம் கேட்க.

சொர்க்கத்திற்கு செல்ல ஆசையா? இதை பாருங்கள்{காணொளி}

 

25.09.2012.By.Rajah.{காணொளி}

 

மெய்சிலிர்க்க வைக்கின்றது இவரின் தன்னம்பிக்கை

25.09.2012.By.Rajah.[காணொளி, புகைப்படங்கள்]





 

கனடாவும், பிரிட்டனும் இணைந்து கூட்டு தூதரகங்களை அமைக்க திட்டம்

25.09.2012.By.Rajah.கனடாவுடன் இணைந்து வெளிநாடுகளில் கூட்டு தூதரகங்களை அமைக்க பிரிட்டன் திட்டமிட்டுள்ளது. இன்று கனடா தலைநகர் ஒட்டாவாவில், அந்நாட்டு வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜான் பெயர்ட்டை சந்திக்க உள்ள பிரிட்டனின் வெளிவிவிகாரத்துறை அமைச்சர் வில்லியம் ஹேக் இந்த புதிய திட்டம் குறித்து விவாதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இனிவரும் காலங்களில் இந்த கூட்டு உடன்படிக்கையில் அவுஸ்திரேலியாவும், நியூசிலாந்தும் இணையலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வில்லியம் ஹேக் கூறுகையில், இந்த உடன்படிக்கையின் மூலம் வெளிநாடுகளில் குறைந்த செலவில் கூடுதல் பலன்களை பெற முடியும் என்றார்.
மேலும் இதன் மூலம் எம் மக்களின் வியாபாரத்திற்கும், எமது மக்களுக்கும் வாய்ப்புகள் அதிகளவு கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
கடந்தாண்டு கனேடிய நாடாளுமன்றத்தில் பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூன் பேசுகையில், கனடாவும், பிரிட்டனும் இரு வேறு நாடுகளாக இருந்தாலும், ஒரே மகாராணியின் கீழ் ஒண்றினைந்தவர்கள் என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
பிரிட்டனோ, கனடாவோ தற்போது வெளிநாட்டு தூதரகங்களை வைத்திருக்காத நாடுகளில் இந்த கூட்டு நடவடிக்கையை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது

யாழ்ப்பாணத்தில் புற்று நோயாளிகளின் எண்ணிக்கை உயர்வு

 
 
செவ்வாய்க்கிழமை, 25 செப்ரெம்பர் 2012யாழ்ப்பாணத்தில் புற்று நோயாளிகளின் எண்ணிக்கையில் உயர்வு ஏற்பட்டுள்ளதாகவும் வருடாந்தம் சுமார் ஐயாயிரம் புற்று நோயாளிகள் பதிவு செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் புற்று நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கும் நோக்கில் தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு அருகாமையில் 260 மில்லியன் ரூபா செலவில் புற்று நோய் வைத்திசாலையொன்று அமைக்கப்பட உள்ளது.
யாழ்ப்பாண புற்று நோயாளிகள் தற்போது மஹரகம புற்று நோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. மஹரகமவிற்கு சென்று சிகிச்சை பெற்றுக் கொள்வதில் நோயாளிகள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
இதேவேளை, இலங்கையில் வருடாந்தம் 20, 000 பேர் புற்று நோயினால் உயிரிழப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

யாழ்.குடாநாட்டில் 24 மெகாவோட் மின்சாரம்!


25.09.2012.By.Rajah.வருகின்ற ஆண்டு ஜனவரி மாதமளவில் 24 மெகாவோட் (அதிக வழு) மின்சாரத்தினை யாழ்.குடாநாடிற்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சினை ஆதாரங்காட்டி லங்கா பிஸ்னஸ் இணையம் இன்று செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கென நான்கு பில்லியன் ரூபா செலவுடனான மின்சார உற்பத்தி நிலையமொன்று சுன்ணாகத்தில் ஏலவே வடிவமைக்கபட்டுள்ளது. இதன் அடுத்த படியாக கடந்த ஞாயிறன்று, 8.6 மெகாவோட் மின்பிறப்பாக்கிகள் மூன்று இறக்குமதி செய்யப்பட்டு அவை கப்பல் மூலம் யாழ். குடாநாட்டிற்கு எடுத்து வரப்பட்டுள்ளதாக லங்கா பிஸ்னஸ் இணையம் தெரிவித்துள்ளது. தற்போது குடாநாட்டின் 72 சதவீதமான பகுதிகள் மின்சார வசதியினைப் பெற்றுள்ள நிலையில், மேற்படி புதிய மின் பிறப்பாக்கிகள் மூலம் தொடர்ச்சியாக மின்சாரம் வழங்க எதிர் பார்க்கப்படுகின்றது

உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி வீதத்தில் ஓர் சரிவு


 


25.09.2012.By.Rajah.இலங்கையில் இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி வீதமானது ஆறு புள்ளி நான்கு சதவீதம் எனக் காணப்பட்டதாக குடிசன மதிப்பு புள்ளிவிபரத் தினைக்களம் இன்று தெரிவித்துள்ளது.


இதுவே, இந்த ஆண்டின் முதலாவது காலாண்டில் 7.9 சதவீதமாகவும், முன்னைய ஆண்டின் இரண்டாவது காலாண்டில் 8.1 சதவீதம் என உயர்வாக வளர்ச்சி கண்டிருந்தது.

இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில், விவசாயம் (9.1%) மற்றும் சேவைத் (4.5%) துறைகள் சுமாராகவே வளர்ச்சி கண்டிருந்தன. இலங்கையில் தொடரும் வரட்சி நிலைமைகளினால் விவசாயம் மற்றும் நீர் மின் உற்பத்திகள் பாதிப்படைந்துள்ளன.

மறுகையில், மேற்கு உலகில் தொடரும் பொருளாதார மந்த நிலைமைகளினால் இலங்கையின் சேவைத் துறை சோர்வடைந்துள்ளதாக பொருளியலாளர்கள் தெரிவிக்கின்றனர்

மகனின் திருமண மொய் பணத்தை ஆதரவற்ற குழந்தைகளுக்கு பிரித்து கொடுத்த தந்தை

25.09.2012.By.Rajah.தர்மபுரி நகரில் உள்ள அப்பாவு நகர் பகுதியை சேர்நதவர் நாகராஜன் (வயது-66). இவர் சிறிய அளவில் ஒரு தீப்பெட்டி தொழிற்சாலை நடத்தி வருகிறார். சேவை மனப்பான்மை கொண்ட இவர் மாவட்ட கண்தான மைய துணைத்தலைவராகவும் உள்ளார். மாதம் தோறும் இவரது வருவாயில், ஒரு பகுதியை ஆதரவற்றவர்களுக்கு கொடுத்து வருகிறார். இவரது இல்லத்தில் நடக்கும் திருமணம், உள்ளிட்ட சுப காரியங்களுக்கு, அன்பளிப்பு மற்றும் செய்முறைகளையும் விரும்பாத இவர், அழைப்பிதழ்களில் அன்பளிப்பை தவிர்க்கவும் என்ற வேண்டுகோளை தவறாது அச்சிட்டு வந்தார். இந்நிலையில், நாகராஜனின் மகன் ஜெகநாதன், மஞ்சுபிரியா திருமணம், கடந்த, 12-ம் தேதி கோவையில் நடந்தது. திருமண வரவேற்பு நேற்று முன்தினம் தர்மபுரியில், நடந்தது. இதற்காக உறவினர் மற்றும் நண்பர்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டது. அந்த அழைப்பிதழில், "அன்பளிப்பை தவிர்க்கவும், உங்கள் ஆசீர்வாதம் மட்டும் போதும் அன்பளிப்பை தவிர்க்க முடியாதவர்கள், சேவை பணிக்கு வழங்கலாம்' இதற்காக மண்டபத்தில், தனியாக ஒரு பெட்டி அமைக்கப்படும், அதில் நீங்கள் உங்களின் அன்பளிப்புகளை போடலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் மாலை, தர்மபுரியில், வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில், ஆதரவற்றோர் சேவை பணிக்காக இரண்டு பெரிய பெட்டிகள் மணமேடை மேல் வைக்கப்பட்டிருந்தது. வரவேற்பில் கலந்து கொண்ட பலர் தாங்கள் கொடுக்க விரும்பிய தொகையை இந்த பெட்டியில் போட்டனர். இதில் 32 ஆயிரத்து, 360 ரூபாய் சேர்ந்தது. "இந்த தொகையை தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆதரவற்ற இல்லங்களுக்கும் பிரித்து வழங்கப்படும். மணமக்களுக்கு வந்த அன்பளிப்பு பொருட்களையும் அதனுடன் சேர்த்து வழங்கப்படும்,'' என, மணமகனின் தந்தை நாகராஜன் தெரிவித்தார்.