25.09.2012.By.Rajah.கனடாவுடன் இணைந்து
வெளிநாடுகளில் கூட்டு தூதரகங்களை அமைக்க பிரிட்டன் திட்டமிட்டுள்ளது.
இன்று கனடா தலைநகர் ஒட்டாவாவில், அந்நாட்டு வெளிவிவகாரத்துறை அமைச்சர் ஜான்
பெயர்ட்டை சந்திக்க உள்ள பிரிட்டனின் வெளிவிவிகாரத்துறை அமைச்சர் வில்லியம் ஹேக்
இந்த புதிய திட்டம் குறித்து விவாதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இனிவரும் காலங்களில் இந்த கூட்டு உடன்படிக்கையில் அவுஸ்திரேலியாவும், நியூசிலாந்தும் இணையலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வில்லியம் ஹேக் கூறுகையில், இந்த உடன்படிக்கையின் மூலம் வெளிநாடுகளில் குறைந்த செலவில் கூடுதல் பலன்களை பெற முடியும் என்றார். மேலும் இதன் மூலம் எம் மக்களின் வியாபாரத்திற்கும், எமது மக்களுக்கும் வாய்ப்புகள் அதிகளவு கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளார். கடந்தாண்டு கனேடிய நாடாளுமன்றத்தில் பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூன் பேசுகையில், கனடாவும், பிரிட்டனும் இரு வேறு நாடுகளாக இருந்தாலும், ஒரே மகாராணியின் கீழ் ஒண்றினைந்தவர்கள் என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. பிரிட்டனோ, கனடாவோ தற்போது வெளிநாட்டு தூதரகங்களை வைத்திருக்காத நாடுகளில் இந்த கூட்டு நடவடிக்கையை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது |
செவ்வாய், 25 செப்டம்பர், 2012
கனடாவும், பிரிட்டனும் இணைந்து கூட்டு தூதரகங்களை அமைக்க திட்டம்
செவ்வாய், செப்டம்பர் 25, 2012
செய்திகள்