வங்காள தேசத்தில் இருந்து சிங்கப்பூருக்கு அரியவகை கருப்பு ஆமைகளை இறக்குமதி செய்த இந்தியருக்கு
அந்நாட்டு நீதிமன்றம் 16 மாத சிறை தண்டனை விதித்துள்ளது. இந்தியரான ஜெய்ஸ்வால் அருண் ஹரிஷ் சந்திரா (42) என்பவர் சிங்கப்பூரில் ஜவுளி இறக்குமதி தொழில் செய்து வருகிறார்.
இந்த இறக்குமதி உரிமத்தை பயன்படுத்தி வங்காள தேசத்தில் இருந்து குட்டைகளில் வாழும் அரிய வகை கருப்பு ஆமைகளை உரிய அனுமதி இன்றி இவர் கள்ளத்தனமாக சிங்கப்பூருக்கு
இறக்குமதி செய்துள்ளார். சங்கி விமான நிலையத்தில் சுமார் 190 ஆமைகள் கொண்ட 3 துணி பைகளை கண்டுபிடித்த சுங்கத்துறை அதிகாரிகள், அருண் ஹரிஷ் சந்திராவை கைது செய்தனர்.