பிரான்ஸ் நாட்டை உலுக்கியுள்ள தீவிரவாத தாக்குதல் ஒரு புறம் இருக்க. அங்கே சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதி ஒருவரின் பாஸ்போட்டை எடுத்து ஆராய்ந்துள்ள பிரெஞ்சுப் பொலிசார் அதிர்ந்து போய்
உள்ளார்கள்.
குறித்த தீவிரவாதியின் பின் புலத்தையும் நண்பர்கள் , மற்றும் உறவினர்கள் என்று பலரை பிரெஞ்சுப் பொலிசார் ஆராய்ந்துள்ளார்கள். இதனூடாக திடுக்கிடும் தகவல்கள் பல வெளியாகியுள்ளது. குறித்த நபரின் உறவினர்கள் சிலர், மற்றும் நண்பர்கள் சிலர் ஏற்கனவே ஐரோப்பாவுக்குள் வந்துள்ளார்கள் என்பது தெரியவந்துள்ளது.
இதனை பிரெஞ்சு அரசு பிரித்தானிய அரசுக்கும் அறிவித்துள்ளது. இதனை அடுத்து சற்று முன்னர் பிரித்தானியாவில் டேவிட் கமரூன் அவர்கள் அதி உச்ச பாதுகாப்பு அதிகாரிகள், புலனாய்வு அதிகாரிகளை அழைத்து “கோபிரா” கூட்டத்தை கூட்டியுள்ளார். லண்டனில் தாக்குதல் நடத்த என ஏற்கனவே சிலர் புகுந்துவிட்டதாக கருதப்படுகிறது.
அது எங்கே அல்லது எபொழுது என்று தான் தெரியவில்லை என்கிறார்கள். நிச்சயம் லண்டனில் ஒரு கூட்டத்தில் இதுபோன்ற தாக்குதல் நடைபெறும் என்று அடித்துக் கூறப்படுகிறது.