மீண்டும் ஒரு காதல் கதை. ஆனால் கிராமமும் இல்லை, நகரமும் இல்லை. இது கொஞ்சம் புதுமைதான். சென்னை புறநகர்தான் படத்தின் களம். |
படத்தின் கதாநாயகன் அட்டக்கத்தி தினேஷ். பிளஸ் 2 ஆங்கிலத்தில் மறுபடி மறுபடி
பெயிலாகி டுட்டோரியல் காலேஜில் படிக்கிறார். கதாநாயகி நந்திதாவிடம் காதலை சொல்லப் போகிற நேரத்தில் அவர் அண்ணா என்று சொல்லி விடுகிறார். திரும்பவும் முயற்சித்து பக்கத்து வீட்டு பெண்ணுக்கு காதல் அம்பு வீசி அங்கேயும் அவருக்கு “பல்ப்”. இப்படி ஒவ்வொரு பெண்ணிடமும் தோல்வியை சந்திக்கும் தினேஷ், அவன் படிக்கும் காலேஜில் முன்பு அவனை அண்ணா என்று சொன்ன நந்திதாவும் சேர்கிறாள். அதன்பிறகு ஏற்படும் சந்தர்ப்பங்களில் நந்திதா தன்னை விரும்புகிறாளோ என்ற எண்ணம் தினேஷூக்கு ஏற்பட மறுபடியும் நந்திதா மீது காதல். இந்த காதல் கைகூடியதா? இல்லை ஒவ்வொரு பெண்ணாக கடந்ததா? என்பது மீதிக்கதை. வருகிற பெண்களில் ஸ்வேதாவுக்கே நடிக்க நிறைய வாய்ப்பு. அதை அவர் அழகாகவும் செய்திருக்கிறார். கிராமம், நகரம் கலந்த நடுத்தர குடும்பத்து முகம். படத்தில் அட்டக்கத்திக்கு அடுத்து கலக்குவது தினேஷின் அப்பா. இவரு பெரிய அட்டக்கத்தி. தினம் இரவு தண்ணி போட்டுட்டு வீர வசனம் பேசுவது, அடுத்த இரவு காட்சி வரும் முன்னே நமக்கு சிரிப்பை வரவழைத்து விடுகிறது. சென்னையில் புறநகர் பகுதி குப்பைமேடுகளைகூட ரசிக்கும் படியாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் பிரமோத் வர்மா. பஸ்ஸில் புட்போர்டு அடிக்கும் காட்சிகளை படம் பிடித்த கோணங்கள் ஒவ்வொன்றும் ரசிக்க வைப்பவை. முதல் படத்திலேயே ஹீரோவுக்குனு இருக்கிற டெம்பிளேட்டுகளை உடைத்து படமாக்கியதற்காக இயக்குனர் ரஞ்சித்தை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம். காதலைச் சொல்லப்போகும் நேரத்தில் மற்றொரு பெண்ணைப் பார்த்து நிலை தடுமாறுவது, பின் யோசிப்பது என்பது மாதிரியான சராசரி மனித இயல்புகளை கதாபாத்திரமாக்கி முழு படத்தையும் இயக்கியிருப்பது, அதற்கு கச்சிதமான திரைக்கதையமைத்திருப்பது பாராட்டப்பட வேண்டியது. நடிகர்: தினேஷ். நடிகை: நந்திதா. இயக்குனர்: ரஞ்சித். இசை: சந்தோஷ் நாராயணன். ஒளிப்பதிவு: பி.கே.வர்மா. |
This is default featured slide 1 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 2 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 3 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 4 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 5 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
திங்கள், 20 ஆகஸ்ட், 2012
அட்டகத்தி திரைவிமர்சனம்
திங்கள், ஆகஸ்ட் 20, 2012
காணொளி
புற்றுநோய் பாதித்த குழந்தைகளுடன் ஓணம் கொண்டாடிய ஜெயராம்
திங்கள், ஆகஸ்ட் 20, 2012
தகவல்கள்
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுடன் மலையாள நடிகர் ஜெயராம் ஓணம் கொண்டாடினார். |
திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் புற்றுநோய்
பாதித்த குழந்தைகளுக்கான பாதுகாப்பு மையம் செயல்பட்டு வருகிறது. மேலும் புத்தாடைகளும் வழங்கி அவர்களுடன் கொஞ்சி விளையாடினார். சில குழந்தைகளுடன் மருத்துவமனை வளாகத்தில் உள்ள மரத்தில் கட்டப்பட்ட ஊஞ்சலில் ஆடி மகிழ்ச்சி தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், புற்றுநோய் என்பது அணு அணுவாக மனித உயிர்களை சாகடிக்கும் கொடிய நோய் ஆகும். இதன் மூல காரணத்தை கண்டுபிடிக்க வேண்டும். பிரபலங்கள் முதல் சிறு குழந்தைகள் வரை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு நடை பிணங்களாக வாழ்வது பரிதாபத்துக்குரியதாகும். புற்றுநோய் பாதிப்பு குறித்து பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொள்ள உள்ளேன். திருவனந்தபுரம் புற்றுநோய் பாதுகாப்பு மையத்தில் தங்கி உள்ள குழந்தைகளுடன் ஓணம் கொண்டாடினேன். எந்த பாவமும் அறியாத அக்குழந்தைகளின் வாழ்நாள் எண்ணப்படுகிறது என்கின்றபோது கவலை நம்மை குடிக்கொள்கிறது என்று கூறினார். மேலும், ஜெயராம் “அன்புள்ள கமல்” படத்தில் புற்று நோயால் பாதிக்கப்பட்டவராக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. |
தமிழர் எதிர்பார்க்கும் தீர்வினை வழங்க அமெரிக்கா ஆதரவு தெரிவிக்க வேண்டும்: அமெரிக்க அதிகாரிகளிடம் பா.உ சிறீதரன்
திங்கள், ஆகஸ்ட் 20, 2012
இணைய செய்தி
யாழ்ப்பாணத்திற்காக விஜயத்தை மேற்கொண்டு நேற்று யாழ்.வந்த அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அதிகாரிகளை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் மற்றும் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் முக்கியஸ்தர்களும் சந்தித்துப் கலந்துரையாடியுள்ளனர்.
யாழ். நகரிலுள்ள விடுதியொன்றில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன்போது சமகால விடயங்கள் தொடர்பில் இருதரப்பு அமெரிக்க அதிகரிகளிடம் எடுத்துக் கூறியுள்ளனர்.
குறிப்பாக வடகிழக்கில் இடம்பெறும் இராணுவ ஆக்கிரமிப்புக்கள், சிங்கள குடியேற்றங்கள், குறித்து எடுத்துக்காட்டப்பட்டுள்ளதுடன், அவற்றை உடனடியாக நிறுத்துவதற்கு சர்வதேச சமூகம் தமது நிலைப்பாட்டை தமிழர்களுக்குத் தெளிவு படுத்தவேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கின்றது.
மேலும், இனப்பிரச்சினைக்குத் தீர்வு விடயத்தில் முதலில் தமிழ்த் தேசத்திற்கான அங்கீகாரத்தை சர்வதேசம் வழங்கவேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி வலியுறுத்திக் கேட்டிருக்கின்றது.
மேலும் இந்தச் சந்திப்புக் குறித்து பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவிக்கையில்,
யுத்தத்தின் பின்னரும் தொடரும் இராணுவ ஆக்கிரமிப்புக்கள் குறித்து எமது தரப்பிலிருந்து தெளிவான ஆதாரங்களுடன் எடுத்துக் காட்டியுள்ளோம்.
அதேபோல் யுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்த தரப்புக்கள் இந்தநாட்டில் இனப்பிரச்சினைக்கு தமிழர் எதிர்பார்க்கும் தீர்வினை வழங்குவதற்காகவும் ஆதரவு தெரிவிக்க வேண்டிய கடமையுள்ளதை சுட்டிக்காட்டினோம்.
அந்த வகையில் இந்தச் சந்திப்பு தமிழர் தரப்பு நிலைப்பாட்டை எடுத்துச் சொல்வதற்கான ஒரு சந்திப்பாக அமைந்திருந்தது எனத் தெரிவித்தார்.
குறிப்பாக வடகிழக்கில் இடம்பெறும் இராணுவ ஆக்கிரமிப்புக்கள், சிங்கள குடியேற்றங்கள், குறித்து எடுத்துக்காட்டப்பட்டுள்ளதுடன், அவற்றை உடனடியாக நிறுத்துவதற்கு சர்வதேச சமூகம் தமது நிலைப்பாட்டை தமிழர்களுக்குத் தெளிவு படுத்தவேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கின்றது.
மேலும், இனப்பிரச்சினைக்குத் தீர்வு விடயத்தில் முதலில் தமிழ்த் தேசத்திற்கான அங்கீகாரத்தை சர்வதேசம் வழங்கவேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி வலியுறுத்திக் கேட்டிருக்கின்றது.
மேலும் இந்தச் சந்திப்புக் குறித்து பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவிக்கையில்,
யுத்தத்தின் பின்னரும் தொடரும் இராணுவ ஆக்கிரமிப்புக்கள் குறித்து எமது தரப்பிலிருந்து தெளிவான ஆதாரங்களுடன் எடுத்துக் காட்டியுள்ளோம்.
அதேபோல் யுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்த தரப்புக்கள் இந்தநாட்டில் இனப்பிரச்சினைக்கு தமிழர் எதிர்பார்க்கும் தீர்வினை வழங்குவதற்காகவும் ஆதரவு தெரிவிக்க வேண்டிய கடமையுள்ளதை சுட்டிக்காட்டினோம்.
அந்த வகையில் இந்தச் சந்திப்பு தமிழர் தரப்பு நிலைப்பாட்டை எடுத்துச் சொல்வதற்கான ஒரு சந்திப்பாக அமைந்திருந்தது எனத் தெரிவித்தார்.
எங்கட ஊரைப் பார்க்க வேண்டும் போல உள்ளது” – Vijay Tv இல் கலங்கிய கண்களுடன் கனடா தமிழ்ப்பெண் சரிகா (வீடியோ இணைப்பு)
திங்கள், ஆகஸ்ட் 20, 2012
காணொளி
20.08.2012..
தென்னிந்திய தொலைக்காட்சியான விஜய் டீவியில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஏடெல் சூப்பர் சிங்கர் – 3 நிகழ்ச்சியில் கனடா தமிழ்ப் பெண்ணும் பங்குபற்றி எல்லோர் மனதையும் கொள்ளைகொண்டுள்ளார்.
பல மாதங்களாக விஜய் டீவியில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் சூப்பர் சிங்கர் பாட்டுப்போட்டியில் ஈழப்பெண் கனடாவில் இருந்து குடும்பமாக சென்று கலந்துகொண்டுள்ளார்.
அவர் தனது பாட்டு திறமையால் மட்டுமல்ல, ஊரையும் நினைவுகூர்ந்து, தமிழர்களின் இன்னல்களை கூறி, எல்லோர் மனதிலும் இடம்பிடித்துள்ளதோடு, ஈழப்பாடல்களையும் பாடி அசத்தியுள்ளார்.
சரிகா தனது திறமையால் சூப்பர் சிங்கர் போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள்.
Video – Click To Watch
தென்னிந்திய தொலைக்காட்சியான விஜய் டீவியில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஏடெல் சூப்பர் சிங்கர் – 3 நிகழ்ச்சியில் கனடா தமிழ்ப் பெண்ணும் பங்குபற்றி எல்லோர் மனதையும் கொள்ளைகொண்டுள்ளார்.
பல மாதங்களாக விஜய் டீவியில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் சூப்பர் சிங்கர் பாட்டுப்போட்டியில் ஈழப்பெண் கனடாவில் இருந்து குடும்பமாக சென்று கலந்துகொண்டுள்ளார்.
அவர் தனது பாட்டு திறமையால் மட்டுமல்ல, ஊரையும் நினைவுகூர்ந்து, தமிழர்களின் இன்னல்களை கூறி, எல்லோர் மனதிலும் இடம்பிடித்துள்ளதோடு, ஈழப்பாடல்களையும் பாடி அசத்தியுள்ளார்.
சரிகா தனது திறமையால் சூப்பர் சிங்கர் போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள்.
Video – Click To Watch
எங்கட ஊரைப் பார்க்க வேண்டும் போல உள்ளது
பழைய நினய்வுகள் முன்பு பார்க்க தவறியவர்க்கு ஓர் அரிய வாய்ப்பு
எனக்கு விரைவில் திருமணம் | ஸ்ரேயா
திங்கள், ஆகஸ்ட் 20, 2012
தகவல்கள்

பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளையே திருமணம் செய்து கொள்வேன். திருமணத்துக்கு நான் சம்மதித்து விட்டதால் ஸ்ரேயாவுக்கு சினிமா வாய்ப்பு போய்விட்டது. அதனால்தான் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறார் என்று வதந்திகள் பரவக்கூடும்.
சினிமாவுக்கும், திருமணத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தயவு செய்து இதனை புரிந்து கொள்ளவேண்டும். மனதுக்கு பிடித்தவர் கிடைத்தால் காதலிக்கலாம் என்று நினைத்து இருந்தேன். ஆனால் அப்படி யாரையும் இதுவரை நான் சந்திக்கவில்லை. எனவேதான் பெற்றோர் பார்க்கிறார்கள்.
எனக்கு கணவராக வருபவர் ஆரோக்கியமானவராக இருக்க வேண்டும். சினிமாவை பற்றி நன்றாக புரிந்து தெளிவடைந்தவராக இருக்க வேண்டும். எனக்கு நல்ல நண்பராக இருக்க வேண்டும். எல்லா விஷயங்களையும் ஒளிவு மறைவு இல்லாமல் என்னோடு பகிர்ந்து கொள்ள வேண்டும்.
திருமணத்துக்கு பிறகு நிறைய பேர் விவாகரத்து செய்து பிரிகிறார்கள். அப்படி விவாகரத்து செய்வது எனக்கு பிடிக்காது. திருமணத்துக்கு முன்பு கணவராக வரப்போகிறவர் எப்படிப்பட்டவர் என்று முழுமையாக ஆராய்ந்து பார்க்க வேண்டும். அவரது குணநலன், பழக்க வழக்கங்கள் எல்லாவற்றையும் தெரிந்து கொண்டு பிறகு கழுத்தை நீட்ட வேண்டும். திருமணமானபின் எக்காரணத்தை கொண்டும் விவாகரத்து செய்யக்கூடாது. இவ்வாறு ஸ்ரேயா கூறினார்
20 கோடிக்கு ஐஸ்வர்யாவை விளம்பரத்திற்கு புக் செய்த கல்யாண் ஜுவல்லர்ஸ்!
திங்கள், ஆகஸ்ட் 20, 2012
தகவல்கள்

சுஷ்மிதா சென் படங்களில் நடிக்கவில்லை. விளம்பரப் படங்களில் மட்டுமே வருகிறார். ஆனால் ஐஸோ படம், விளம்பரம் என்று வரும் வாய்ப்பையெல்லாம் பயன்படுத்திக் கொள்கிறார். பிரசவத்திற்கு பிறகு தற்போது மெதுவாக பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள ஆரம்பித்துள்ளார். விரைவில் இந்தி படமொன்றில் நடிக்கப்போகிறார் என்றும் கூறப்படுகின்றது.
இந்நிலையில் தான் ஐஸுக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. 2 ஆண்டு ஒப்பந்தத்திற்கு ஐஸுக்கு கிடைக்கும் சம்பளம் கொஞ்ச, நஞ்சமல்ல ரூ.20 கோடி ஆகும். வருடத்திற்கு ரூ.10 கோடி சம்பளம்
குஷ்புவின் அரிய கண்டுபிடிப்பு!
திங்கள், ஆகஸ்ட் 20, 2012
தகவல்கள்

அம்மையார் ஒழுங்காக சீரியல் வேலையையும் கட்சி வேலையும் பார்த்தால் தப்பில்லை. ஆனால் தேவையில்லாமல் போகிற இடங்களில் ‘ தமிழருவி மணியன் ரேஞ்சுக்கு பேசி விடுவதல் செம கடுப்பில் இருக்கிறார்களாம் வைகோ, திருமாவளவன், சீமான் போன்றவர்கள். அப்படி என்னதான் பேசிவிட்டார் என்றால்,
“இன்றைய இளைய தலைமுறைகளிடம் தமிழ்மொழி உணர்வு குறைந்துவிட்டது” என்று சொல்லியிருக்கிறார் நேற்று! தமிழ் மொழிக்காகவே தன் கட்சியை அர்பணித்திருப்பதாக சொல்லுகிற திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் நடைபெற்ற கலைமாமணி விருது விழாவின் தொகுப்புரையை குஷ்புவிற்கே அளித்திருந்தனர்.
மேடையில் தமிழ் உணர்வும், பகுத்தறிவும் பொங்கி வழிகிற அதன் தலைவர்களுக்கு முன், ‘பெரியார் கொள்கை’ என்று சொல்வதற்கு பதில் ‘பெரியார் கொள்ளை’ என்று பேசியவர்தான் நமது குஷ்பு!
தமிழ் சரியாக பேச வராத தன்னை, முக்கியமான தமிழ் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக, நடத்துனராக நியமித்து, அதில் தவறாக பேசிய பிறகும் தனக்கு கட்சியில் முக்கிய பதவியும் தந்த தன் கட்சியின் தமிழ் உணர்வை கிண்டல் செய்கிறாரோ என்னவோ?!
இப்படியே போனால் திமுகவில் கலைஞருக்கு அடுத்த இடத்தில் குஷ்பூ வந்தாலும் ஆச்சர்யமில்லை என்று காதைக் கடிக்கிறார்கள் திமுக வட்டாரத்தில்!
பணிப்பெண் கீதிகா ஷர்மா தற்கொலை விவகாரத்தில் கோபால் காந்தா சரண் (வீடியோ இணைப்பு)
திங்கள், ஆகஸ்ட் 20, 2012
செய்திகள் காணொளி

இதையடுத்து கடந்த 10 நாட்களாக தலைமறைவாகியிருந்த கோபால் காந்தா, இன்று அதிகாலை நான்கு மணியளவில் பாரத் நாகர் காவற்துறை நிலையத்தில் தானாக முன்வந்து சரணடைந்தார். எனினும் அவரது ஜாமின் மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. சரண்டைந்த நிலையில் காந்தா நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் காவற்துறையினரின் விசாரணைக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கவுள்ளதாக தெரிவித்தார்.
இதே வழக்கில் , MDLR ஏர் லைன்ஸிம் மற்றுமொரு பணியாளர் அருணா சத்தா என்பவரும் காவற்துறையினரால் முன்னர் கைது செய்யப்பட்டிருந்தார்.
கீதிகா ஷர்மா தனது இறுதிக்கடிதத்தில், கோபால் காந்தா ஒரு நயவஞ்சகன். அனைத்து பெண்களுடன் இரகசிய தொடர்பு வைத்திருப்பவர். அவரை நம்பியதே என் வாழ்நாளில் நான் செய்த மிகப்பெரிய பாவம். நன விலகிய போதும் காந்தாவும், சத்தாவும் தன்னையும் தனது குடும்பத்தினரையும் மீண்டும் அவர்களது சொந்த நிறுவனத்தில் இணைந்து கொள்ளுமாறு வற்புறுத்தினர் என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் காதாவை தேடி, ஹரியானா ,கோவா, சிலுகுரி, மேற்கு வங்கத்தில் காவற்துறையினரின் ரெய்டு நடவடிக்கை தொடங்கியது. இந்நிலையில் அவரது சகோதரர் கோவிந்த் காந்தாவும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை கோபால் காந்தா தற்போது சரணடைந்துள்ளது தொடர்பில், கீதா சர்மாவின் சகோதரர் அங்கித் தெரிவிக்கையில் ‘இது ஒரு திட்டமிட்ட சரணடைவு. அவர் தலைமறைவாகியிருந்த 12 நாட்களில், தனக்கும் கீதிகா சர்மாவுக்கும் இருந்த சகல தொடர்புகளுக்கான சாட்சியங்களையும் அழித்திருப்பார் என நான் அச்சப்படுகிறேன்.
கீதிகா ஷர்மாவின் பேஸ்புக் அக்கவுண்ட் தற்போது Deactivated ஆகியுள்ளது. காந்தாவே இந்த வேலையை செய்திருப்பார். இது தொடர்பில் டிசிபியிடம் முறையிட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.
கீதிகா ஷர்மா விமானப்பணிப்பெண்ணாக இருந்த போது கோபால் காந்தா அவருடனும் அவரது குடும்பத்துடனும் நெருங்கிப்பழகியிருந்ததுடன், கீதிகாவுடன் தனிப்படட் முறையில் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததாக முன்னர் தகவல் வெளிவந்தது. அவரது மாத சம்பளம் ரூ.60,000 ஆக இருந்ததாகவும், இது கோபால் காந்தாவுக்கான பாலியல் சேவைக்காக அவருக்கு வழங்கப்பட்ட சம்பளமெனவும் அவரது சகபணியாளர்களிடமிருந்தான தகவல் வெளியாகியிருந்தது. எப்போதும் வேலை முடிந்து சில மணி நேரங்கள் கோபால் காந்தாவின் தனிப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக கீதிகா சென்றுவிடுவார் என அவரது சக பணியாளர்களும் தெரிவித்துள்ளனர். ஒரு கட்டத்தில் கீதிகா கருக்கலைப்பு செய்து கொண்டதாகவும் தகவல வெளியாகியிருந்தது.
ஹரியானாவின் சட்டசபை உறுப்பினரான கோபால் காதா முன்னர் ஹரியானா வீடமைப்பு துறை அமைச்சர்காவும் கடமையாற்றியவர். MDLR ஏர்லைன்ஸ் எனும் அவரது சொந்த நிறுவனத்தில் கீதிகா ஷர்மா பணிபுரிந்து வந்தார்.
வீடியோ இணைப்பு
ஸ்ரீதேவிக்காக இலவசமாக நடித்த அஜித்
திங்கள், ஆகஸ்ட் 20, 2012
தகவல்கள்
கொலிவுட், பாலிவுட் அனைத்திலும் முன்னணி நடிகையாக திகழ்ந்த நடிகை ஸ்ரீதேவி 26 வருடங்களுக்கு பின்பு ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ என்ற இந்தி படத்தில் மீண்டும் நடித்துள்ளார். |
இப்படம் தமிழ், தெலுங்கிலும் வெளியாகிறது. ஆங்கிலம் தெரியாத ஒரு குடும்பத்
தலைவியின் அவஸ்தைகளே படத்தின் கதை. மும்பையில் படப்பிடிப்புக்காக பிரத்யேக அரங்கு அமைக்கப்பட்டன. இதில் நடிப்பதற்கு அஜித்துக்கு கணிசமான தொகை சம்பளமாக கொடுக்க தயாரிப்பாளர் முன்வந்தார். மும்பை வந்து செல்வதற்கான விமான செலவுகள் ஓட்டலில் தங்கும் செலவு போன்றவற்றையும் ஏற்க முடிவு செய்து இருந்தனர். சமீபத்தில் மும்பை சென்று படப்பிடிப்பை அஜித் முடித்து கொடுத்தார். ஆனால் ஸ்ரீதேவியுடன் நடிக்க அவர் சம்பளம் எதுவும் வாங்கவில்லை. விமானம் மற்றும் ஓட்டல் செலவுகளையும் தானே கவனித்து கொண்டார். அஜீத் நடவடிக்கைகளை படப்பிடிப்பு குழுவினர் வியந்து பாராட்டினர். ஸ்ரீதேவியின் கணவரும் தயாரிப்பாளருமான போனிகபூர் இதுபற்றி கூறுகையில், அஜித் அற்புதமான மனிதர். பெரிய நடிகராக இருந்தும் எளிமையாக நடந்து கொண்டார் என்றார். |
ஆண்களுக்கான கருத்தடை மாத்திரைகள் கண்டுபிடிப்பு
திங்கள், ஆகஸ்ட் 20, 2012
இணைய செய்தி

கருத்தடை மாத்திரைகள் பெண்களுக்கு நிறைய உள்ளன. ஆனால், ஆண்களுக்கு, காண்டத்தைத் தவிர வேறு கருத்தடை சாதனங்கள் பிரபலமாகவில்லை.
இதற்கிடையே, அமெரிக்க விஞ்ஞானிகள், ஆண்களுக்கான கருத்தடை மாத்திரைகளைக் கண்டுபிடித்துள்ளனர். பல்வேறு மூலக்கூறுகளுடன் உருவாக்கப்பட்டுள்ள, "ஜெக்யூ1' என்ற பெயரிலான இந்த மாத்திரை, எலிகளுக்குக் கொடுத்து பரிசோதிக்கப்பட்டதில் அவை மலட்டுத்தன்மையுடன் காணப்பட்டன.
இது குறித்து, இந்த மாத்திரையை உருவாக்கியுள்ள விஞ்ஞானி ஜேம்ஸ் பிராட்னர் குறிப்பிடுகையில், "இம்மாத்திரையை உட்கொண்டால், விந்தணு உற்பத்தி கணிசமாகக் குறைந்து விடும். இருக்கக்கூடிய விந்தணுக்களின் நகரும் தன்மையும் தடைப்படும். இதனால், கருத்தரிப்பு நடப்பதற்கு வாய்ப்பில்லை. சோதனைக் கட்டத்தில் உள்ள இந்த மாத்திரை, விரைவில் விற்பனைக்கு வர வாய்ப்புள்ளது' எனத் தெரிவித்துள்ளார்
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி பெண் பலி
திங்கள், ஆகஸ்ட் 20, 2012
இணைய செய்தி
வாதுவ பகுதியில் பெண்ணொருவர் இனந்தெரியாதவரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி
உயிரிழந்துள்ளார்.
இன்று முற்பகல் 11 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் 47 வயதுடைய டோன குப்தா இந்ராணி என்பவரே பலியாகியுள்ளார்.
சைக்கிளில் வந்த சந்தேகநபர் துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது
இன்று முற்பகல் 11 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் 47 வயதுடைய டோன குப்தா இந்ராணி என்பவரே பலியாகியுள்ளார்.
சைக்கிளில் வந்த சந்தேகநபர் துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது
வெள்ளவத்தை சம்பவம்: விசேட பொலிஸ் குழு நியமனம்
திங்கள், ஆகஸ்ட் 20, 2012
இணைய செய்தி

வெள்ளவத்தை இராமகிருஷ்ணா டெரஸ் வீதியில் நேற்றுமுன்தினம் வீடொன்றில் இருந்து மூவர் சடலங்களாக மீட்கப்பட்டனர்.
இதனையடுத்து மகன் பிரகாஷ் குமாரசாமி கொட்டகலை டெலிகிளார் தோட்டத்திலுள்ள தனது வீட்டுக்கு கடந்த 16 ஆம் திகதி வந்து சென்றதாக தோட்ட மக்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து பத்தனை பொலிஸார் இந்தக் குறிப்பிட்ட தோட்டத்துக்கு சனிக்கிழமை சென்று உயிரிழந்தவர்களின் வீட்டினை அவதானித்த போது வீட்டின் முன்கதவிலுள்ள பூட்டு உடைக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளது. அத்துடன் அந்தக்கதவு உட்புறமாகப் பூட்டப்பட்டிருந்ததையும் பொலிஸார் அவதானித்துள்ளனர்.
வீட்டினுள் சென்ற பொலிஸார் வீட்டிலுள்ள அறையொன்றில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதனுள்ளிருந்த பொருட்கள் சிதறடிக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளதையும் அவதானித்துள்ளனர்.
இதனையடுத்து சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள விசேட பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது
பருத்தித்துறை படகுத்துறை மீண்டும் மீனவர் பாவனைக்கு ஒப்படைப்பு
திங்கள், ஆகஸ்ட் 20, 2012
புகைப்படங்கள்

நீண்டகாலமாக யுத்தத்தின் கோரத்தினால் சிதைவடைந்துபோயிருந்த குறித்த படகுத்துறை அண்மையில் திருத்தப்பட்டு நேற்று காலை மீனவர்கள் பாவனைக்காக ஒப்படைக்கப்பட்டது.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ். மாவட்ட கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க ஆகியோரின் தலைமையில் இந்நிகழ்வு நேற்று காலை இடம்பெற்றது.
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ். மாவட்ட கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க ஆகியோரின் தலைமையில் இந்நிகழ்வு நேற்று காலை இடம்பெற்றது.
உடலின் சமநிலையை அதிகரிக்கும் ரெட் வைன்
திங்கள், ஆகஸ்ட் 20, 2012
மருத்துவ செய்திகள்

புதிய சாதனை படைக்கவுள்ள விண்டோஸ் 7
திங்கள், ஆகஸ்ட் 20, 2012
தகவல்கள்

[ ஞாயிற்றுக்கிழமை, 19 ஓகஸ்ட் 2012, 11:36.41 மு.ப GMT ]
உலகளவில் விண்டோஸ் எக்ஸ்பி இயங்குதளத்தை விட, விண்டோஸ் 7 இயங்குதளத்தை தான் பயன்படுத்துபவர்கள் தான் அதிகம் என்பது சமீபத்திய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
விண்டோஸ் எக்ஸ்பி 42.8% பங்கினைக் கொண்டு மாதந்தோறும் 1% இழந்து வருகிறது.
விண்டோஸ் 7, 42.2% பங்கினைக் கொண்டு மாதந்தோறும் 1% உயர்ந்து வருகிறது.
விண்டோஸ் விஸ்டா, ஏறத்தாழ மொத்தமாகத் தன் பங்கினை இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
மிக உறுதியான இயங்குதளமாக விண்டோஸ் 7 வடிவமைக்கப்பட்டுள்ளதே இதற்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
மேலும் நம்பிக்கையுடன் செயல்படும் தன்மை கொண்டது, பாதுகாப்பானது மற்றும் நாம் விரும்பி இயக்கும் அப்ளிகேஷன் புரோகிராம்களுடன் இணைந்து இயங்குதல் போன்றவையும் காரணங்களாக தெரிவிக்கப்படுகிறது.
2020 ஆம் ஆண்டு வரை விண்டோஸ் 7 இயக்கத்திற்கு மைக்ரோசாப்ட் சப்போர்ட் தரும் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர்
பட்டுப் போன்ற கூந்தலுக்கு
திங்கள், ஆகஸ்ட் 20, 2012
தகவல்கள்
கவலை வந்தால் கூந்தல் உதிரும், அதேப்போல் கூந்தல் உதிர்ந்தால் மனக்கவலை வரும். இவ்வாறு கவலையும், கூந்தலும் ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்புடையது.
வடக்கில் கடும் வரட்சி: நன்னீர் மீன்பிடித் தொழில் பாதிப்பு
திங்கள், ஆகஸ்ட் 20, 2012
இணைய செய்தி

அந்த சங்கத்தின் உறுப்பினரொருவர் கருத்துவெளியிடுகையில், தமது வாழ்வாதார தொழிலான நன்னீர் மீன்பிடித்தொழில் வரட்சி காரணமாக பாதிப்படைந்துள்ளதாக குறிப்பிட்டார்.
எதிர்வரும் காலங்களில் மழை பொழிந்தாலும் குளங்களில் உள்ள மீன்கள் அழிவடைந்தயினால் தமது தொழிலினை உடனடியாக மேற்கொள்ள முடியாத நிலை இருக்கும் என அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த நிலையில் தாம் மாற்றுத்தொழில் ஒன்றினை மேற்கொள்வதற்கு ஏற்பாடுகளையோ அல்லது வாழ்வாதார உதவிகளையேனும் பெற்றுத் தருவதற்கு அரச அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் அந்த உறுப்பினர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதனிடையே. வடபிராந்தில் அதிக வரட்சி காரணமாக காட்டுப் பகுதிகள் தீக்கிரையாகி அழிவடைந்து வருகின்றது.இதன்காரணமாக அங்குள்ள ஏனைய வழங்களும் பாதிப்படைவதாக அச்சம் வெளியிடப்பட்டுள்ளது
எதிர்வரும் காலங்களில் மழை பொழிந்தாலும் குளங்களில் உள்ள மீன்கள் அழிவடைந்தயினால் தமது தொழிலினை உடனடியாக மேற்கொள்ள முடியாத நிலை இருக்கும் என அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த நிலையில் தாம் மாற்றுத்தொழில் ஒன்றினை மேற்கொள்வதற்கு ஏற்பாடுகளையோ அல்லது வாழ்வாதார உதவிகளையேனும் பெற்றுத் தருவதற்கு அரச அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் அந்த உறுப்பினர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதனிடையே. வடபிராந்தில் அதிக வரட்சி காரணமாக காட்டுப் பகுதிகள் தீக்கிரையாகி அழிவடைந்து வருகின்றது.இதன்காரணமாக அங்குள்ள ஏனைய வழங்களும் பாதிப்படைவதாக அச்சம் வெளியிடப்பட்டுள்ளது
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)