siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

விஞ்ஞானம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விஞ்ஞானம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 6 ஜூன், 2016

விஞ்ஞானிகள் பன்றியின் உடலுக்குள் மனித உறுப்புகளை உருவாக்கும் ஆராய்ச்சி!

மனித உறுப்புகளை பன்றியின் உடலுக்குள் உருவாக்கும் ஆராய்ச்சிகள் அமெரிக்காவில் தொடங்கியுள்ளன. மனிதக் குருத்தணுக்களை பன்றிகளின் கருக்களில் ஊசி மூலம் செலுத்தி சிமேரா என்றழைக்கப்படும் மனித-பன்றி கருக்களை உருவாக்கியிருக்கின்றனர் அவ்விஞ்ஞானிகள
உலகெங்கிலும் மாற்று உறுப்பு சிகிச்சைக்கு உறுப்புகள்
 போதிய அளவு கிடைக்காத பற்றாக்குறையைப் போக்கும் நோக்கில் இந்த முயற்சி நடக்கிறது.
கலிபோர்னியா பல்கலக்கழக ஆராய்ச்சியாளர்கள் குழு ஒன்று இந்த கருக்கள் பொதுவாக சாதாரண பன்றிக் கருக்களைப் போலத்தான் இருக்கும் ஆனால் அவற்றின் உறுப்புகளில் ஒன்று மனித செல்களால் உருவாக்கப்பட்டிருக்கும் என்று கூறுகிறது.
ஆனால் இந்த மனித-பன்றி சிமேராக்களால் ஆனா கருக்கள், 28 நாட்கள் வரை வளர அனுமதிக்கப்பட்டு பின்னர் அந்த கரு கலைக்கப்பட்டு, திசுக்கள் பரிசோதனைக்கு எடுத்துச் செல்லப்படும்.
இந்த தொழில்நுட்பம் சர்ச்சைக்குரிய ஒன்று, ஏனெனில், இந்த மனித செல்கள் பன்றியின் மூளைக்குள் சென்றுவிடக்கூடிய வாய்ப்பு இருப்பதாக சில வல்லுநர்கள் அஞ்சுகிறார்கள். இதனால் விளையும் அற ஒழுக்கம் சார்ந்த தாக்கங்கள் குறித்தும் கவலைகள்
 நிலவுகின்றன
இங்குஅழுத்தவும் நவற்கிரி.கொம் செய்திகள் >>>


சனி, 9 பிப்ரவரி, 2013

செயற்கை மனிதனை உருவாக்கி விஞ்ஞானிகள்

 
ரத்தம், உடல் உறுப்புகள் கொண்ட செயற்கை மனிதனை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை உலகில் மனிதன் எத்தனையோ புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கியபோதும் மனிதனை கடவுளால் மட்டுமே படைக்க முடியும் என்ற நியதியையும் மாற்றி, செயற்கை மனிதனையும் தயாரித்து சாதனை படைத்து இருக்கிறார்கள். பிரிட்டனில் உள்ள 18 நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழக நிபுணர்கள் இணைந்து செயற்கை மனிதனை படைத்துள்ளனர். ரத்தம், சிறுநீரகங்கள், கணையம், கல்லீரல், கை, கால், கண்கள் போன்றவை அனைத்தும் செயற்கை முறையில் உருவாக்கப்பட்டது. கண்கள், இதயம், நுரையீரல்கள் போன்ற உறுப்புகள் கணனி சிப்களுடன் இணைக்கப்பட்டு இதன்மூலம் அவை இயக்கப்படுகின்றன. இந்த செயற்கை மனிதனை உருவாக்க ரூ.5.5 கோடி செலவிடப்பட்டுள்ளது. இந்த செயற்கை மனிதன் லண்டனில் உள்ள அறிவியல் அருங்காட்சியத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டு இருக்கிறான். வருகிற மார்ச் 11ம் திகதி வரை அவனை பொதுமக்கள் பார்த்து மகிழலாம். செயற்கை மனிதனின் சிறுநீரகங்கள், கணையம், கல்லீரல் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்திலும், செயற்கை நுரையீரல்கள், ஸ்வாகாணொளி,சீன் பல்கலைக்கழகத்திலும் உருவாக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது,[]

திங்கள், 3 செப்டம்பர், 2012

செத்த பிணத்தை மீண்டும் எழுப்பலாம் : அதிர்ச்சி தகவல்!!

03.09.2012.BY.rajah.ஒரே ஒரு பெரிய சைஸ் ஊசியைப் போட்டால், செத்துப்போன பிணம் 10 நிமிடங்களில் எழுந்து விடும். அடுத்த அரை மணி நேரத்தில் சாப்பிடத் தொடங்கி “இப்ப நான் எங்கிருக்கேன்ப? என்று பேச ஆரம்பித்து வாக்கிங் கிளம்பி விடும்.
அதன் பிறகு மீண்டும் 60 வயசுக்கு ஆயுட் காலம் இது புதிய ஹாலிவுட் படக்கதை அல்ல! உலகம் முழுக்க சோடாப்புட்டி கண்ணாடியை மாட்டிக் கொண்டு 100க்கணக்கான விஞ்ஞானிகள் இரவு, பகலாக பிணங்களுடன் தலையை பிய்த்துக் கொண்டிருக்கிற சர்வமகா நிஜம்!
மனித உடலில் எது ஊன மடைந்தாலும் செயற்கை கருவி, பைபாஸ் சர்ஜரி வரை சரி செய்து விட முடிகிறது. விலங்குகளின் குளோனிங், டெஸ்ட் டிïப் பேபி என பிறப்பின் ரகசியத்தைக் கூட நம்மவர்கள் கண்டு பிடித்து விட்டார்கள். ஆனால், ஆதாம்-ஏவாள் காலம் முதல், உயிர் பிரிவதை மட்டும் ஒருவராலும் கண்டு பிடிக்க முடியவில்லை. ஒரு வேளை, அப்படி கண்டு பிடித்து விட்டால்…ப வெரி சிம்பிள்! “இப்பத்தான் உங்களை நினைச்சேன். ஆயுசு ஆயிரம் சார் என்று சொல்ல வேண்டியதிருக்கும்ப
உலக விஞ்ஞானிகள் நடத்தி வரும் பகீர் ஆராய்ச்சி களை ஹார்ட் அட்டாக் வராத வகையில் சர்வ ஜாக்கிரதையாக மேலும் படிக்க ஆரம்பியுங்கள். அமெரிக்காவைச் சேர்ந்த பிலிக்கர் என்பவரது புகைப் படங்கள் தாம் உலகம் முழுக்க உள்ள விஞ்ஞானிகளை மரணத்தை வெல்ல முடியும் என்று உஷார் படுத்தியது. ஏராளமான விலங்குகளின் ஆவி பிரிவதை கடைசி நொடிகளில் கிளிக் செய்து வைத்திருக்கிறார் பிலிக்கர் இவரது கூட்டாளியான விஞ்ஞானி பி.டபுள்ï போத்தா “கண்ணுக்குத் தெரியும் இந்த ஆவியை ஒரு டெஸ்ட் டிïப்பில் பிடித்து விட்டால் போதும். அக்குவேறு, ஆணி வேறாக ஆராய்ச்சி செய்து மரண ரகசியத்தை கண்டு பிடித்து விடுவோம் என்கிறார்.
வாஷிங்டன், டகோமாவில் உள்ள ஐ.ஏ.என்.டி.எஸ் எனப்படும் இன்டர்நேஷனல் “அசோசியேகன் பார் நியர் டெத் ஸ்டடீஸ் என்ற அமைப்பு மரணங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்து வருகிறது. டாக்டர் ஜெப் தலைமையில் பலர் இதன் உறுப்பினர்களாக இருக்கி றார்கள். இவர்களுக்கு வேலைப யாராவது சாகப் போவதாக கேள்விப்பட்டால் அவருடன் கடைசி வரை இருந்து, கண்காணித்து, ஆராய்ச்சி செய்வது தான்!வயிற்றுவலி முதல் ஹார்ட் அட்டாக் வரை மருந்து கண்டுபிடித்த நாம் மூளைச்சாவுக்கும் மருந்து கண்டுபிடிப்பது அவசியம் என்கிறார்கள் இவர்கள்.
சாவுபஎன்பது ஒருசாதா ரண நிகழ்வு. தேவையில்லா மல் இதன் மீது நமக்கு பீதி ஏற்பட்டு விட்டதுபமரணத் திற்கு முன்னதாக முது மைக்கு மருந்து கண்டு பிடிக்க வேண்டும் என்பது இவர்களது கருத்து. இங்கிலாந்தைச் சேர்ந்த டாக்டர் மிக்கேல் சபோம் நான் மரணத்துக்கு மருந்து கண்டு புடிச்சுட்டேன் என்று கத்துகிறார்! ஒருவரது மரணம் எப்போது தள்ளிப் போனதோ, அப்போதே மரணத்தை வென்று விட்டதாகத்தான் அர்த்தம். வேண்டுமானால் இது தொடக்கமாக இருக் கலாம் என்கிற அவர் பாம் ரெனால்ட்ஸ் என்கிற சாகக் கிடக்கிற பெண்மணிக்கு உயிர் பாலித்தவர்.
இருதயமும், மூளையும் முற்றிலும் செயலிழந்து பெரிய, பெரிய டாக்டர்களால் கைவிடப்பட்டு, உடல் டெம்ப ரேச்சர் 60 டிகிரிக்கும் குறை வான பாம் ரெனால்ட்சை தனது நவீன அறுவைசிகிச்சை மூலம் உயிர் பிழைக்க வைத்தி ருக்கிறார் மிக்கேல். முழுவதுமாக மரணித்துப் போன எனது மூளையில் முதன் முதலாக ஒரு சின்ன சத்தத்தைக் கேட்டேன். புர்ர்ர்ர்… என்ற அந்த சத்தம் தான் மெல்ல எனக்கு உயிர் கொடுத்தது. சர்வ நிச்சயமாக நான் மரணத்தை உணர்ந்து திரும்பியிருக்கிறேன் என்கிறார் பாம் ரெனால்ட்ஸ்.
இவர்களைப் போலவே கெவின் வில்லியம்ஸ், பெத்தார்ட்ஸ் பெட்டி, ஆன்டர்சன் ஜார்ஜ், சிட்டிசன் ஹெரால்டு, டர்ட் சார்லஸ், என உலகம் முழுவதும் ஏகப் பட்ட விஞ்ஞானிகள் நீண்ட காலமாக ஆராய்ச்சி செய்து வருகிறார்கள். உயிர் பிரியும் போது வலிக்குமாப வலிக்காது என்கிறார்கள் இவர்கள் ஒட்டு மொத்தமாக! உடல் உபாதை களால் ஏற்படுவது தான் வலியே தவிர, மரணத்துக்கு வலி கிடையாது என்கிறார் கள். செத்துப்போன உடலை ரோபோ போல் நவீனபபஎந் திரங்கள் மூலம் இயங்க வைக்க முடியுமாபபஎன்ற நம்பிக்கையில்பகடந்தப18 ஆண்டுகளாகபபநூதன தயாரிப்புகள் மூலம் போராடிக் கொண்டிருக்கி றார் டாக்டர் பி.எம்.எச். அத்வதார் என்பவர்.
இதெல்லாம் நடக்கிற விஷயமா டாக்டர்பஎன்றால், “எதையும் கண்டுபிடிக்கப்படு வதற்கு முன்னால் நம்புவது கஷ்டம் தான் ரெயில், விமானம், செல்போன்களை எல்லாம் நீங்கள் நம்பவா செய்தீர்கள் என்கிறார்.
இந்த அதிர்ச்சி விஞ்ஞானி கள் உடற்பயிற்சி, உணவு முறை, ஆரோக்ய வாழ்க்கை மூலம் மனித வாழ்வை நீட்டிக்க முடியுமாப என்பது பற்றியும் இயற்கை ரீதியிலான ஆராய்ச்சி செய்யவும் தவற வில்லை. ஒரு சிலரால் மட்டும் எப்படி 110 வயது வரை வாழ முடிகிறதுப என்கிற கேள்விக் குறிக்கும் இவர்கள் ஒருபுறம் விடை தேடிக் கொண்டிருக் கிறார்கள். “கடைசி மூச்சு வரை மருத்துவ கருவிகளை கண்டு பிடித்து விட்ட விஞ்ஞானி களின் அருமை பற்றி உங்க ளுக்குத் தெரியவில்லை. நிச்சயம் ஒரு நாள் மரணத்தின் சூட்சுமம் வெளியே தெரிய வரும் என்கிற ரஷ்யவிஞ் ஞானி ஆன்ஸ்டின்பெராக் வெளி உலகுக்கு தெரியாமல் வேறொரு ஆராய்ச்சி நடத்தி வருகிறார்
.
இறந்து போன பிணங் களுக்கு ஊசி போட்டு, உடலைப் பிரித்து உள்ளுக்குள் மருந்து, மாத்திரைகளை வைத்து தைத்து, நவீன கருவி கள் மூலம் எலக்ட்ரிக் ஷாக் கொடுத்து, என்றாவது ஒரு நாள் இது எழுந்து நடமாடும் என்கிற ரீதியில் கடந்த 20 ஆண்டுகளாக இருட்டுக் கூடத்திலேயே தனது பகல் வாழ்க்கையையும் கழித்து வருகிறார். இவர்கள் சொல்வதைப் போல் ஒரு வேளை உயிர் ரகசியம் கண்டு பிடிக்கப்பட்டு விட்டால்… பூமி பிதுங்கி வழியும் ஜனத்தொகை, அத்தனை பேருக்கும் உணவு, இருப்பிடம் குடிதண்ணீர் வசதி என மேலும் எழும் ஆயிரக்கணக்கான பூலோக பிரளயங்களுக்கு மேலும் நாம் விடை தேடவேண்டிய திருக்கும்.

ஞாயிறு, 29 ஜூலை, 2012

ஒக்டோபர் 26ஆம் திகதி வெளியாகிறது விண்டோஸ் 8














 30. யூலை2012.
அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் விண்டோஸ் 8 இயங்குதளம் பொதுமக்களுக்கு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி வழங்கப்படும் என மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டு கணணிகளைத் தயாரித்து வழங்கும் நிறுவனங்கள், தங்கள் கணணிகளில் இதனை பதிந்தே விற்கும். எனவே ஒரு விண்டோஸ் 8 சிஸ்டம் காப்பி, அது பதியப்படும் மதர் போர்டுடன் மட்டுமே செயல்படும்.
அதனை மற்ற மதர்போர்டு உள்ள கணணிக்கு மாற்ற முடியாது. எனவே இன்னொரு புதிய பெர்சனல் கம்ப்யூட்டருக்கு மாற வேண்டும் என எண்ணினால், புதிய விண்டோஸ் 8 ஒன்று வாங்க வேண்டியதிருக்கும்.
ஏற்கனவே உள்ள இயங்குதளங்களை, விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கு அப்கிரேட் செய்திட விரும்புபவர்களுக்கு, அதற்கான கட்டணமாக 40 டொலர் செலுத்திய பின்னர் உரிமம் வழங்கப்படும். மூன்று வாரங்களுக்கு முன்னர், ஒக்டோபர் இறுதியில் வெளியிடப்படும் என நாள் குறிக்காமல், மைக்ரோசாப்ட் அறிவித்திருந்தது.
இப்போது சரியாக என்று கிடைக்கும் என தன் திட்டத்தினை வெளியிட்டுள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தைப் பொறுத்தவரை, விண்டோஸ் 8 இயங்குதளம் அதன் வரலாற்றில் ஒரு புதிய திருப்பத்தினை உண்டாக்கப் போகிறது.
முதல் முறையாக இரு வேறு வகை கணணி சாதனங்களில் இயங்கும் வகையில் ஓர் இயங்குதளத்தினை மைக்ரோசாப்ட் வழங்க இருக்கிறது.
டெஸ்க்டாப் மற்றும் டேப்ள்ட் பிசி மட்டுமின்றி, விண்டோஸ் போனிலும் இது இயங்கும். மைக்ரோசாப்ட் அறிவித்த சர்பேஸ் டேப்ளட் பிசியும் இதனுடன் சேர்ந்து வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.
2011ஆம் ஆண்டில் நுகர்வோருக்கான எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களுக்கான கண்காட்சியில், விண்டோஸ் 8 குறித்த திட்டவரைவை மைக்ரோசாப்ட் வெளியிட்டது.
சிப் ஒன்றில் இது சிஸ்டமாகக் கிடைக்கும் எனக் கூறிய போது, அனைவரும் கவனிக்கத் தொடங்கினர். அடுத்து ஜூன் 1, 2011 அன்று கம்ப்யூட்டக்ஸ் 2011ஆம் ஆண்டில் அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியானது.
அன்று அறிவிக்கப்பட்ட விண்டோஸ் மெட்ரோ இன்டர்பேஸ், மக்களிடையே ஆர்வத்தைத் தூண்டியது. அதே நேரத்தில் பழையவகை விண்டோஸ் திரையும் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டது.
விண்டோஸ் 7 சிஸ்டத்தைக் காட்டிலும் அதிவேகமாக விண்டோஸ் 8 பூட் ஆகும், யு.எஸ்.பி. 3 கிடைக்கும், விண்டோஸ் ஸ்டோருக்கான இணைப்பு தரப்படும்.
யு.எஸ்.பி. ட்ரைவிலிருந்து விண்டோஸ் இயக்கலாம் என்ற புதிய தகவல்கள் கணணி பயன்படுத்துபவர்களிடையே அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி வருகின்றன