கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்திலுள்ள ரொறன்ரோ பகுதியில் இளைஞன் ஒருவர் பொலிசாரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
இன்று சனிக்கிழமை அதிகாலை இடம்பெற்றச் இசம்பவத்தில் 20 வயது மதிக்கத்தக்க ஒரு இளைஞனே உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் பொலிசாரின் துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் ஒன்ராறியோவின் விசேட புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை நடத்திவருகின்றனர்.
இதற்கிடையில் சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சி ஒருவர் செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையில், டுண்டாஸ் வீதியை சுற்றி பொலிசார் நின்றுகொண்டிருந்ததாகவும், ஒரு பொலிசார் அவர்கள் ஒருவரைப் பார்த்து கத்தியைக் கீழே போடுமாறு கூறினார்கள்.
அதன் பின்னர் ஒரு பொலிஸ்காரர் 10 தடைவைகள் துப்பாக்கிப் பிரயோகத்தினை மேற்கொண்டாகவும் தெரிவித்துள்ளார்.
துப்பாக்கிச்சூட்டு சம்பத்திற்கு பின்னர் குறித்த நபரை வைத்திசாலைக்கு எடுத்துச்செல்ல முற்பட்ட போதிலும் அவர் இறந்துவிட்டதாக விசேட புலனாய்வுப் பிரிவினரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
எனினும் இத்துப்பாக்கிப்பிரயோகத்திற்கான காரணம் இதுவரை வெளியிடப்படவில்லை