siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

ஞாயிறு, 16 செப்டம்பர், 2012

சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து சுனிதா வில்லியம்ஸ் உரையாடல்(வீடியோ இணைப்பு)

16.09.2012.By.Rajah.சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து அமெரிக்காவின் நாசா வீராங்கணை சுனிதா வில்லியம்ஸ் தனது அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார். அமெரிக்காவின் நாசா வீரர்கள் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர்.
பூமியிலிருந்து 250 மைல்களுக்கு அப்பால் இந்த சர்வதேச விண்வெளி மையம் அமைந்துள்ளது.
இந்நிலையில் சமூக வலைதளமான யுரியூப்பின் புதிய ஸ்பேஸ்லேப் சானலின் மூலம் வீரர்களின் அனுபவங்கள் ஒளிப்பரப்பாகி வருகிறது.
அவ்வகையில் விண்வேளி மையத்தில் தற்போது ஆய்வுகளில் ஈடுபட்டுவரும் இந்திய நாட்டு விண்வேளி வீராங்கணையான சுனிதா வில்லியம்ஸ் உடனான உரையாடலை கொண்டு வருகிறது இந்த வீடியோ.
எகிப்து, அமெரிக்க நாட்டின் மூன்று மாணவர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் விண்வெளியில் இருந்து கொண்டே சுனிதா வில்லியம்ஸ் தன் அனுபவங்களை பகிர்ந்து கொள்வதுடன் மாணவர்களின் கேள்விகளுக்கு விடை தருகிறார்.


இலங்கையில் ஜப்பானின் மூன்று போர்க் கப்பல்கள்!

 
 
 
16.09.2012.By.Rajah.ஜப்பானின் இரண்டு போர்க் கப்பல்கள் கொழும்பு துறைமுகத்துக்கு இன்று வருகின்றன.
சிமுயுக்காய் மற்றும் மட்சுக்காய் என்ற பெயர்களை கொண்ட இரண்டு கப்பல்களே கொழும்பு துறைமுகத்துக்கு வரவுள்ளன.
ஏற்கனவே ஜப்பானின் கசிமா என்ற போர்க்கப்பல் நல்லெண்ண விஜயத்தின் அடிப்படையில் கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பு துறைமுகத்துக்கு வந்தது.
இதேவேளை, குறித்த மூன்று ஜப்பானிய கப்பல்களும் எதிர்வரும் 19 ஆம் திகதி இலங்கையில் இருந்து செல்லும் முன்னர், இலங்கை கடற்படையின் சமுத்ரா கப்பலுடன் இணைந்து கூட்டுப்பயிற்சியில் ஈடுபடவுள்ளன

கைதடியிலிருந்து மாணவர்கள் சுற்றுலா சென்ற பஸ் பளையில் விபத்து: 19 பேர் காயம்

 
 
16.09.2012.By.Rajah.யாழ். கைதடியிலிருந்து சுற்றுலா மேற்கொண்டு முல்லைத்தீவு நோக்கி 52 பேருடன் சென்ற பஸ் பளையில் விபத்துக்குள்ளானதில் 19 பேர் காயமடைந்து கிளிநொச்சி மற்றும் யாழ். போதனா வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நேற்று முற்பகல் 9 மணி அளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. வேகமாகச் சென்ற பஸ் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியதாக பஸ்ஸில் பயணித்தவர்கள் தெரிவித்தனர். தெய்வாதீனமாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.
கைதடி வளர்மதி கல்விக் கழக மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் குறித்த பஸ்ஸில் சென்றுள்ளனர்.பஸ் விகத்துக்குள்ளானதும், காயப்பட்ட 15 பேர் உடனடியாக பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.
ஏனையவர்கள் கைதடிக்குத் திரும்பிச் சென்றபோதும் அவர்களில் நான்குபேர் திடீர் சுகவீனமுற்றதனால் நால்வரும் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். பஸ் சாரதியைப் பொலிஸார் தடுத்து வைத்துள்ளதுடன் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்


மன்னாரில் சீட்டுப் பிடித்த பலர் இலட்ச ரூபா பணத்தைச் சுருட்டிக்கொண்டு தலைமறைவு

 
 
16.09.2012.By.Rajah.மன்னார் மாவட்டத்தில் சீட்டுப்பிடித்த பலர், மக்களின் பல இலட்சக்கணக்கான ரூபா பணத்துடன் தலைமறைவாகி வரும் சம்பவங்கள் தொடர்ந்து இடம் பெற்று வருகின்ற நிலையில் சீட்டுப்பிடித்து ஏமாற்றமடைந்த பலர் மன்னார் பொலிஸ் நிலையத்திலும் முறையிட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
மன்னாரில் பலர் மக்களின் பணத்தைப் பெற்று சீட்டு பிடித்துள்ளனர்.இவர்களில் அரச அதிகாரிகளும் உள்ளடங்குகின்றனர்.
இந்த நிலையில் சீட்டு பிடிக்கும் இவர்களிடம் பலர் வட்டிக்குப் பணத்தை வாங்கியுள்ளனர். பணத்தை வாங்கியவர்கள் சில தினங்களில் காணாமல் போயுள்ளனர்.
குறித்த பணத்தைப் பெற்றவர்கள் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா சென்றுள்ளமை தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் மக்களிடம் வாங்கிய குறித்த சீட்டுப் பணத்தைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் சீட்டை பிடித்தவர்கள் தலைமறைவாகியுள்ளனர்.
பல இலட்சம் ரூபா வரை ஒவ்வெருவரும் சீட்டுப்பிடித்து ஏமாற்றமடைந்துள்ளனர். இதே சமயம் பலர் நண்பர்களிடமும் உறவினர்களிடமும் தமது அவசரத்தேவை எனக் கூறித் தங்க நகைகளையும், பல இலட்சக்கணக்கான ரூபா பணத்தையும் பெற்ற நிலையில் தற்போது தலைமறைவாகியுள்ளனர்.
குறித்த நபர்களிடம் தமது பணத்தையும், நகைகளையும் கொடுத்தவர்கள் அவற்றை எவ்வாறு திருப்பிப் பெற்றுக்கொள்வது என்ற ஏக்கத்துடனும் மன வேதனையுடனும் உள்ளனர். பாதிக்கப்பட்ட பலர் மன்னார் பொலிஸ் நிலைத்தில் முறைப்பாடும் செய்துள்ளனர்

இலங்கை அரசாங்கத்தை நம்பமுடியாது – ரொபட் ஓ பிளேக்

 
 
16.09.2012.By.Rajah.இலங்கையின் அதிகாரிகள் எவரையும் நம்பமுடியாது என்று தெற்காசியாவுக்கான பிரதி அமரிக்கா ராஜாங்க செயலாளர் ரொபட் ஓ பிளெக் குறிப்பிட்டுள்ளார். இந்த செய்தியை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது
2009 ம் ஆண்டு போர் முடிவடைந்த பின்னர், இலங்கைக்கு விஜயம் செய்த ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரிகளான ஹோம்ஸ் மற்றும் பெஸ்கோ ஆகியோர் இலங்கை தலைவர்களுடனும் அதிகாரிகளுடனும் பேச்சுவார்த்தைகளை நடத்தினர்.
இதன்போது இலங்கையின் சார்பில் எவருமே நம்பி செயற்படும் அளவில் நடந்துகொள்ளவில்லை என்று ஐக்கிய நாடுகளின் அதிகாரிகள் ரொபட் ஓ பிளெக்கிடம் தெரிவித்துள்ளனர்.
வடக்கில் இருந்து இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பில் இலங்கை அதிகாரிகள் உரிய தரவுகளை வழங்கவில்லை என்று ஐக்கிய நாடுகளின் அதிகாரிகள் பிளெக்கிடம் குறிப்பி;ட்டுள்ளனர்.
இதேவேளை இனப்பிரச்சினை தீர்வு தொடர்பில் இலங்கை அரசாங்கம் எவ்வித ஆக்கபூர்வமான செயற்பாட்டையும் கொண்டிருக்கவில்லை.
அத்துடன் தமிழர்கள் என்ற பெயரை பயன்படுத்தி சிங்கள தேசியவாதிகளின் வாக்குகளை கவரும் நடவடிக்கையிலேயே இலங்கை அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக ரொபட் ஓ பிளெக், அமெரிக்க இராஜாங்க திணைக்களத்துக்கு அறிவித்துள்ளார்.
இதன் கட்டங்களாகவே மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கம், எதிர்க்கட்சிகளை வலுவிழக்கச்செய்யும் நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாகவும் பிளெக் குறிப்பிட்டுள்ளார்.