siruppiddy nilavarai.com

Footer Widget 1

ஞாயிறு, 16 செப்டம்பர், 2012

மன்னாரில் சீட்டுப் பிடித்த பலர் இலட்ச ரூபா பணத்தைச் சுருட்டிக்கொண்டு தலைமறைவு

 
 
16.09.2012.By.Rajah.மன்னார் மாவட்டத்தில் சீட்டுப்பிடித்த பலர், மக்களின் பல இலட்சக்கணக்கான ரூபா பணத்துடன் தலைமறைவாகி வரும் சம்பவங்கள் தொடர்ந்து இடம் பெற்று வருகின்ற நிலையில் சீட்டுப்பிடித்து ஏமாற்றமடைந்த பலர் மன்னார் பொலிஸ் நிலையத்திலும் முறையிட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
மன்னாரில் பலர் மக்களின் பணத்தைப் பெற்று சீட்டு பிடித்துள்ளனர்.இவர்களில் அரச அதிகாரிகளும் உள்ளடங்குகின்றனர்.
இந்த நிலையில் சீட்டு பிடிக்கும் இவர்களிடம் பலர் வட்டிக்குப் பணத்தை வாங்கியுள்ளனர். பணத்தை வாங்கியவர்கள் சில தினங்களில் காணாமல் போயுள்ளனர்.
குறித்த பணத்தைப் பெற்றவர்கள் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா சென்றுள்ளமை தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் மக்களிடம் வாங்கிய குறித்த சீட்டுப் பணத்தைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் சீட்டை பிடித்தவர்கள் தலைமறைவாகியுள்ளனர்.
பல இலட்சம் ரூபா வரை ஒவ்வெருவரும் சீட்டுப்பிடித்து ஏமாற்றமடைந்துள்ளனர். இதே சமயம் பலர் நண்பர்களிடமும் உறவினர்களிடமும் தமது அவசரத்தேவை எனக் கூறித் தங்க நகைகளையும், பல இலட்சக்கணக்கான ரூபா பணத்தையும் பெற்ற நிலையில் தற்போது தலைமறைவாகியுள்ளனர்.
குறித்த நபர்களிடம் தமது பணத்தையும், நகைகளையும் கொடுத்தவர்கள் அவற்றை எவ்வாறு திருப்பிப் பெற்றுக்கொள்வது என்ற ஏக்கத்துடனும் மன வேதனையுடனும் உள்ளனர். பாதிக்கப்பட்ட பலர் மன்னார் பொலிஸ் நிலைத்தில் முறைப்பாடும் செய்துள்ளனர்