
ரீயூனியன் தீவுகளில் கிடைத்த பாகம் 239 பயணிகளுடன் மாயமான எம்.எச்.370 போயிங் 777 விமானத்துடையதே என்று மலேசிய அதிகாரிகள் உறுதி தெரிவித்துள்ளனர்.
மலேசியாவிலிருந்து பீஜிங் நோக்கி, கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் 8-ம் திகதி சென்ற மலேசிய விமானம் எம்.எச்.370 ராடாரிலிருந்து திடீரென மறைந்தது.
அதனை தேடும் பணி 16 மாத காலங்களாக நீடித்து வந்த நிலையில், அது இந்தியப் பெருங்கடலில் விழுந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த வாரம் ரீயூனியன் தீவுகளில் கரையில் விமான...