siruppiddy nilavarai.com

Footer Widget 1

திங்கள், 3 ஆகஸ்ட், 2015

சண்டைக்கு எதிராக நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு

பிரான்ஸில் பாரம்பரிய விளையாட்டான சேவல் சண்டைக்கு பரவலாக தடை உள்ள நிலையில், இனி நாடு முழுவதும் சேவல் சண்டைக்கான புதிய மைதானங்களை அமைக்க கூடாது என நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
பிரான்ஸ் நாட்டில் காளை அடக்குதல் போட்டி போல, சேவல் சண்டையும் அந்நாட்டு மக்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றாக கொண்டாடப்பட்டு வருகிறது.
சேவல் சண்டைக்கு பெரும்பாலான நகரங்களில் சட்டப்பூர்வமாக தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பிரான்ஸின் புறப்பகுதிகளில் இந்த சேவல் சண்டை விளையாட்டுகளை உள்ளூர் நிர்வாகங்கள் அனுமதித்து வருகிறது.
இந்த சேவல் சண்டைக்கு விலங்குகள் நல ஆர்வலர்கள் எதிர்ப்புகளை தெரிவித்து வந்த நிலையில், சேவல் சண்டை நடைப்பெற்று வந்த இடங்களிலும் அந்த விளையாட்டுக்கு எதிராக போராட்டம் நிகழ்ந்து வந்துள்ளது.
இந்நிலையில், Sainte-Marie என்ற நகரை சேர்ந்த இரண்டு நபர்கள் சேவல் சண்டையை நடத்த புதிய மைதானம் அமைக்க உள்ளூர் நிர்வாகம் அனுமதி தர மறுக்கிறது என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கு நீதிமன்றத்தில் அன்மையில் வந்தபோது பேசிய அந்த நபர்கள், பிரான்ஸ் நாட்டில் காளை அடக்குதல் போட்டிகளுக்கு நாடு முழுவதும் அனுமதி உள்ள நிலையில், சேவல் சண்டைக்கு அனுமதி மறுப்பது ஏன் என கேள்வி எழுப்பினர்.
இதனை விசாரித்த நீதிபதி, காளை சண்டையும் சேவல் சண்டையும் பிரான்ஸ் நாட்டு மக்களின் பாரம்பரிய விளையாட்டுகளாக இருந்தாலும் கூட, இரு விளையாட்டுகளின் தன்மைகள் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது அல்ல.
எனவே, இனி நாடு முழுவதும் சேவல் சண்டையை நடத்த புதிதாக மைதானங்கள் அமைக்க தடை விதித்தது சரியானது தான் என தீர்ப்பளித்து உத்தரவிட்டுள்ளார்.
நீதிபதியின் இந்த உத்தரவு விலங்களுகள் நல ஆர்வலர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்திருந்தாலும், சேவல் சண்டை மூலம் தங்களுக்கு வரும் வருமானம் போய்விட்டது என இந்த உத்தரவிற்கு எதிராக போராட்டத்தில் ஈடுப்பட உள்ளதாக சேவல் சண்டை 
விளையாட்டு பிரியர்கள் 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 comments:

கருத்துரையிடுக