siruppiddy nilavarai.com

Footer Widget 1

திங்கள், 3 ஆகஸ்ட், 2015

கிடைத்த பாகம் மாயமான எம்.எச்.370 விமானத்துடையது தான்???

ரீயூனியன் தீவுகளில் கிடைத்த பாகம் 239 பயணிகளுடன் மாயமான எம்.எச்.370 போயிங் 777 விமானத்துடையதே என்று மலேசிய அதிகாரிகள் உறுதி தெரிவித்துள்ளனர்.
மலேசியாவிலிருந்து பீஜிங் நோக்கி, கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் 8-ம் திகதி சென்ற மலேசிய விமானம் எம்.எச்.370 ராடாரிலிருந்து திடீரென மறைந்தது.
அதனை தேடும் பணி 16 மாத காலங்களாக நீடித்து வந்த நிலையில், அது இந்தியப் பெருங்கடலில் விழுந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த வாரம் ரீயூனியன் தீவுகளில் கரையில் விமான பாகம், இறக்கை ஆகியவை ஒதுங்கியது.
இதையடுத்து அந்த பாகங்கள் காணாமல் போன மலேசிய விமானத்தை சேர்ந்தது தானா என்று பிரான்சில் பரிசோதனை நடத்தப்பட்டது.
அந்த பரிசோதனையில், அது போயிங் 777 எம்.எச்.370 விமானத்துடையது என்று உறுதியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இது குறித்து மலேசிய போக்குவரத்து துறை அமைச்சர் லியோவ் தியாங் வெளியிட்ட அறிக்கையில், கண்டெடுக்கப்பட்ட இறக்கை போயிங் 777 விமானத்தினுடையது என்பது அதிகாரபூர்வமாக உறுதியாகியுள்ளது.
பிரான்சில் செய்யப்பட்ட சோதனையில், போயிங் விமான தயாரிப்பாளர்கள் மற்றும் மலேசிய ஏர்லைன்ஸ் சிவில் ஏவியேஷன் துறையினரும் இதனை உறுதி செய்தனர் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதன் மூலம் 16 மாதகாலம் உலகை உலுக்கிய அந்த துயரச் சம்பவத்தின் புதிர் முடிச்சு அவிழ்ந்துள்ளது என்று 
மலேசியா தெரிவித்துள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

0 comments:

கருத்துரையிடுக