
நியூசிலாந்தில் 102 நாட்களுக்கு பின்னர் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அந்நாட்டு பிரதமர் ஜெசிண்டா ஆர்டர்ன் ஊரடங்கை அமுல்படுத்தியுள்ளார்.உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் பரவலை நியூசிலாந்து சிறப்பாக கட்டுப்படுத்தியிருந்தது. பெப்ரவரி மாதம் அந்நாட்டில் முதல் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சர்வதேச எல்லைகள் மூடப்பட்டு மார்ச் முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது.ஊரடங்கை தீவிரமாக அமல்படுத்தியதன் விளைவாக...