
பாகிஸ்தானில் நேற்று முன்தினம் இரவு திடீர் மின்சார தடை ஏற்பட்டு தலைநகர் இஸ்லாமாபாத் மற்றும் முக்கிய நகரங்கள் இருளில் மூழ்கின.குறிப்பாக ராவல்பிண்டி, கராச்சி, பெஷாவர், ஐதராபாத், குவெட்டா ஆகியவை இருளில் மூழ்கின.
இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர். பலுசிஸ்தான் மாநிலத்திலுள்ள 1,200 மெகாவாட் தனியார் அனல் மின் நிலையத்தில் கோளாறு ஏற்பட்டதே இதற்கு காரணமாகும்.
பின்னர் இஸ்லாமாபாத் மின் துறையினர் மாற்று ஏற்பாடுகள் செய்து இஸ்லாமாபாத் உள்பட சில...