ஆளில்லா சிறியரக விமானங்கள் (ட்ரோன்கள்) மூலம் மருந்து பொருட்களைக் கொண்டுசேர்க்கும் புதிய திட்டமொன்று ருவாண்டாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மோசமான வீதிகளால் நாட்டின் பலபகுதிகளுக்கு ரத்தம், பிளாஸ்மா உள்ளிட்ட அவசர மருத்துவத் தேவைகள் மற்றும் மருந்து பொருட்களைக் கொண்டு சேர்ப்பதில் காலதாமதம் ஏற்படுவதாக புகார்கள் எழுந்ததையடுத்து ருவாண்டா அரசு இந்த முடிவை
எடுத்துள்ளது.
ஆனால், தற்போது குறித்த ஆளில்லா சிறியரக விமானங்கள் மூலம், வீதி மார்க்கமாக 4 மணி நேரத்தில் கொண்டுசேர்க்கப்படும் மருந்துப் பொருட்கள் 15 நிமிடத்தில் கொண்டுசேர்க்கப்படுவதாகவும்
கூறப்பட்டுள்ளது.
மேலும், அமெரிக்காவைச் சேர்ந்த ஜிப் லைன் எனும் சிறியரக ஆளில்லா விமான சேவைகள் வழங்கும் நிறுவனத்துடன் இணைந்து நாடு முழுவதும் இந்த சேவை செயல்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு
தெரிவித்துள்ளது.
உலக அளவில் வர்த்தகரீதியாக மருந்துபொருட்களை வழங்க ஆளில்லா விமானங்கள் பயன்படுத்தப்படுவது இதுவே முதல்முறையென்பது குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>