siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

வெள்ளி, 3 ஆகஸ்ட், 2012

சட்டவிரோத மது விற்பனை தண்ட வசூல் ரூ.9 லட்சம்

04.08.2012.
news யாழ். மாவட்டத்தில் கடந்த 7 மாத காலப்பகுதிக்குள் மட்டும் 313 பேர் சட்டவிரோத மதுசார விற்பனை மற்றும் 21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு சிகரெட் விற்பனை செய்த குற்றத் துக்காக அவர்களிடம் இருந்து 9 லட்சத்து 23 ஆயிரம் ரூபா வசூல் செய்யப்பட்டுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாகக் கைது செய்யப்பட்டு இவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டபோது இந்தத் தண்டம் அறவிடப்பட்டது என யாழ்.மாவட்ட மதுவரித்திணைக்களக் கட்டுப்பாட்டு அதிகாரி என்.கிருபாகரன் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது:
யாழ். மாவட்டத்தில் இந்த வருடம் சட்டவிரோத மது உற்பத்தி கட்டுப்பாட்டுக் குள் கொண்டு வரப்பட் டுள்ள போதும், அரச சாரா யத்தை பதிவு செய்யாமல் விற்பனை செய்தவர்களும் 21 வயதுக்கு உட்பட்டவர் களுக்கு சிகரெட் விற்பனை செய்தவர்களும் யாழ்.மது வரித் திணைக்கள உத்தி யோகத்தர்களால் இனங் காணப்பட்டனர்.
யாழ்ப்பாணம், நல்லூர், கல்வியங்காடு ஆகிய பிரதேசங்களில் மதுவரித் திணைக்களத்தின் சட்ட சேவை களுக்கு அப்பால் மது மற் றும் சிகரெட் விற்பனைகள் அதிகம் இடம் பெறுகின்றன என்றும் அவர்கள் தெரிவித் துள்ளனர்.எனினும் மதுவரித் திணைக்களத்தால் இனங் காணப்பட்ட பிரதேசங்க ளில் இருந்து கடந்த 7 மாத காலப் பகுதிக்குள் மட்டும் 313 பேர் கைது செய்யப்பட் டனர்.
இவர்கள் ஊர்காவற் றுறை மற்றும் யாழ்ப்பாணம் நீதிமன்றில் முன்னிலைப் படுத்தப்பட்டபோது நீதி மன்றங்கள் 9 லட்சத்து 23 ஆயிரம் ரூபா தண்டப் பணம் அறவிடுமாறு தீர்ப்ப ளித்தது.இதனை விட கடந்த மாதம் 30 ஆம் திகதி ஆனைக் கோட்டை, நல்லூர், கல்வி யங்காடு ஆகிய பிரதேசங் களில் இருந்து 21 வயதுக்கு குறைந்த நபர்களுக்கு சிக ரெட் விற்பனை செய்தமைக் காக 13 பேர் கைது செய் யப்பட்டு யாழ்ப்பாணம் நீதி மன்றில் முன்னிலைப்படுத் தப்பட்டனர்.
இவர்களில் ஒவ்வொரு நபருக்கும் 4 ஆயிரம் ரூபா வீதம் 53 ஆயிரம் ரூபா தண்டப்பணம் செலுத்து மாறு தீர்ப்பளிக்கப்பட்டது.அத்துடன் கடந்த வரு டம் கசிப்பு உற்பத்தி யாழ். மாவட்டத்தில் அதிகரித்துக் காணப்பட்டது. குறிப்பாக தீவகம், கொழும்புத்துறை ஆகிய பிரதேசங்களில் பெரும் பிரச்சினையாக இருந் தது. என்று மேலும் தெரி விக்கப்பட்டது.

சிறுமிகளைக் கடத்த முயற்சி நிந்தவூரில் பெரும் பதற்றம்

04.08.2012.
news
நிந்தவூரில் வைத்து வானில் கடத்தப்பட்ட பாடசாலைச் சிறுமிகள் இருவர் அம்பாறை நகரில் அமைந்துள்ள இராணுவச் சாவடிக்கு முன்னால் இறக்கிவிடப்பட்டுள்ள சம்பவத்தால் நேற்றுமுன்தினம் அப்பகுதியெங்கும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருபவை வருமாறு:
நேற்றுமுன்தினம் மாலைநேர வகுப்புக்குச் சென்ற முஜிபுர் ரகுமான் ஜெய்னப் (வயது 09), முகம்மது உவைஸ் நபீசா (வயது 09) ஆகிய இரு மாணவிகளும் வகுப்பு முடிந்து வீடு திரும்பும்போது வீதியால் வந்த சிவப்பு நிற (வடி) வான் ஒன்றிலிருந்து இறங்கிய இருவர், சிறுமிகள் இருவரையும் பலவந்தமாகத் தலைமுடியைப் பிடித்து வானில் ஏற்றிக்கொண்டு விரைந்துள்ளனர்.
அவர்கள் இருவரும் தமது கண்களைக் கறுப்பு நிறத்துணியால் கட்டியிருந்தனர் எனவும் கூரிய கத்தியைக் காட்டி சத்தமிட்டுக் கத்தினால் கொலை செய்து விடுவோமென மிரட்டினர் எனவும் சிறுமிகள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு நிந்தவூரில் கடத்தப்பட்ட இரு சிறுவர்களையும் ஏற்றிச் சென்ற கடத்தல்காரர்கள் அம்பாறையை அடைந்த போது வீதிச் சாவடியொன்றைக் கண்டதும் சிறிது தூரத்தில் சிறுமிகள் இருவரையும் இறக்கிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.
இச்சிறுமிகள் இருவரும் அழுதுகொண்டு பொலிஸாரிடம் தமக்கு நடந்த விடயத்தைச் சொல்லி அழுதுள்ளனர்.
இம்மாணவிகளை விசாரித்த பொலிஸார் அவர்களிடமிருந்து பெற்றோரின் தொலைபேசி இலக்கத்தைப் பெற்று, நிந்தவூரிலுள்ள பெற்றோருக்கு அறிவித்ததைத் தொடர்ந்து கடத்தப்பட்ட இரு மாணவிகளும் நிந்தவூருக்குக் கொண்டுவரப்பட்டனர். இது தொடர்பாக இரு பிள்ளைகளின் பெற்றோரும் சம்மாந்துறைப் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
நேற்றுமுன்தினம் நிந்தவூர்ப் பிரதேசத்தில் வியாபாரம் அல்லது வேறு தேவைகளுக்காக நுழைந்த வடி வான் சம்பந்தப்பட்ட சகல விடயங்களையும் உடனடியாக விசாரணை செய்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்மாந்துறைப் பொலிஸ்நிலையப் பொறுப்பதிகாரி தஹநாயக்க உத்தரவிட்டுள்ளார்.

இறுதி யுத்தத்தில் தமிழர்களால் கைவிடப்பட்ட வாகனங்கள் சிங்களவரால் அபகரிப்பு

 
04.08.2012.
முல்லைத்தீவு, மாவட்டம் முள்ளிவாய்க்கால் பகுதியில் இறுதியுத்தத்தின்போது கைவிடப்பட்ட பெருமளவு வாகனங்கள் தென்னிலங்கை சிங்கள வர்த்தகர்களால் தினசரி அபகரித்துச் செல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர், முள்ளிவாய்க்கால் வீதி திறக்கப்பட்டதைத் தொடர்ந்து பெருமளவு சிங்கள வர்த்தகர்கள் சுதந்திரமாக வந்து நடமாடுவதோடு, தமிழ் மக்களால் கைவிடப்பட்ட வாகனங்களை எடுத்துச் செல்கின்றனர்.
இதற்கு முழுமையான ஒத்துழைப்பினை படையினர் வழங்கி வருகின்றனர்.
ஆனால் வாகனங்களுக்குச் சொந்தக்காரர்கள் தமது வாகனங்களை சென்று பார்வையிடுவதற்கும் கூட படையினர் அனுமதி மறுத்திருக்கின்றனர்.
மேலும் இவ்வாறன வர்த்தகர்கள், சில சந்தர்ப்பங்களில் பொதுமக்களின் வாகனங்களை முழுமையாகவும், அவற்றின் இயந்திரப் பகுதியையும் எடுத்துச் செல்கின்றனர். ஆனால் இது குறித்து மாவட்டச் செயலகமும், பொலிஸாரும் எந்த நடவடிக்கையினையும் எடுத்திருக்கவில்லை.
இந்நிலையில் பொதுமக்களின் சொத்துக்கள் கேட்பாரற்ற நிலையில் சிங்கள வர்த்தகர்களால் எடுத்துச் செல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சி- கரைச்சி பிரதேச செயலகத்திற் கருகில் யுத்தகாலத்தில் கைவிடப்பட்ட வாகனங்கள் வைக்கப்பட்டுள்ள பகுதியிலிருந்து தினசரி வாகனங்களையும், அதன் உதி ரிப்பாகங்களையும் திருடிச் செல்கின்றமை அம்பலத்திற்கு வந்துள்ளது.
குறித்த பகுதியில் பெருமளவு வாகனங்கள் போடப்பட்டுள்ளது. இந்நிலையில் வாகனங்க ளை உரிமைகோருமாறு மாவட்டச் செயலகம் அறிவித்துள்ளதுடன், பொதுமக்களே முறை யற்ற விதத்தில் வாகனங்களையும் உதிரிப்பாகங்களையும் எடுத்துச் செல்கின்றனர்.
என குற்றம்சாட்டியிருந்தார். ஆனால் அவ்வாறு பொதுமக்கள் எவரும் வாகனங்களை கொள்ளையிடுவது கிடையாது, இராணுவத்தினரும், இராணுவத்தினருக்கும், பொலிஸாரு க்கும் சார்பான தரப்புக்களே இவ்வாறு கொள்ளையில் ஈடுபடுகின்றனர்.
இதனை தடுக்க முடியாத அரசாங்க அதிபர் கண்மூடித்தனமாக பொதுமக்கள் மீது குற்ற ம் சாட்டியுள்ளமை வெளியாகியுள்ளது. அண்மையில் இராணுவத்தினர் வாகனங்களின் உதிரிப்பாகங்களை எடுத்து வருகின்றமை புகைப்படமாக சிக்கியுள்ளது.
இதன் மூலம் இராணுவத்தினரே சகல வாகனத்திருட்டு, மற்றும் வாகன உதிரிப்பாகத் திருட்டு ஆகியவற்றில் ஈடுபட்டு வருகின்றமை வெளிப்படையாகியுள்ளது.

 

14 வயது சிறுமி மீது 60 வயது தாத்தாவுக்கு மலர்ந்த காதல்

 
04.08.2012..
சிறுமி ஒருவர் மீது முதியவர் ஒருவர் காதல் வயப்பட்ட சம்பவம் ஒன்று களுத்துறையில் இடம்பெற்றுள்ளது.
60 வயது முதியவர் ஒருவர் 14 வயது பாடசாலை மாணவியை காதல் என்ற பெயரில் ஏமாற்ற முற்பட்ட சம்பவம் ஒன்று களுத்துறையில் நடந்துள்ளது.
இந்த முதியவர் குறித்த மாணவிக்கு சொக்லெட், பிஸ்கட் போன்றவற்றுடன் தாம் எழுதிய காதல் கடிதத்தையும் புத்தகத்தில் வைத்து கொடுத்தாக தெரிகிறது.
அளுத்கம பொலிஸார் முதியவரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர் செய்தார்கள்.
களுத்துறை பிரதான மஜிஸ்ரேட் அருண அளுத்கே சந்தேக நபரை 25 ஆயிரம் ரூபா சரீர பிணையில் விடுதலை செய்ய அனுமதி வழங்கியுள்ளார்

சிறுவர் துஸ்பிரயோகம் தொடர்பான வழக்குகளை விசாரணை செய்ய விசேட உயர் நீதிமன்றம்

 
 
04.08.2012.
இலங்கையில் சிறுவர் துஸ்பிரயோகச் சம்பவங்கள் தொடர்பான வழக்குகளை விசாரணை செய்ய விசேட உயர் நீதிமன்றமொன்று உருவாக்கப்பட உள்ளது.
குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனை விதிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக நீதி அமைச்சு அறிவித்துள்ளது.
உயர் நீதிமன்றத்தை அமைப்பதற்கு தேவையான கட்டட வசதிகள் மற்றும் ஏனைய நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிறுவர் துஸ்பிரயோகச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கும் நோக்கில் இவ்வாறு தனியான உயர் நீதிமன்றம் அமைக்கப்பட உள்ளதாக நீதி அமைச்சின் செயலாளர் கமலினி டி சில்வா தெரிவித்துள்ளார்

மரண அறிவித்தல் >> கந்தையா சந்திரசேகரம்

நியூஸ் பெஸ்ட் ஊடகவியலாளர்கள் குழு சென்ற வேன் விபத்து

நியூஸ் பெஸ்ட் ஊடகவியலாளர்கள் குழு சென்ற வேன் விபத்து _
03.08.2012.நேற்றிரவு நியூஸ் பெஸ்டின் ஊடகவியலாளர்கள் குழுவொன்றை ஏற்றிச் சென்ற வேன் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த ஏழு பேர் காயமடைந்துள்ளனர்.

சிறிமாவே பண்டாநாயக்க மாவத்தையின் சுகததாஸ உள்ளக விளையாட்டரங்கு முன்பாக நேற்றிரவு 11 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

கடமையை நிறைவுசெய்து வீடு திரும்பும் நியூஸ் பெஸ்ட் ஊடகவியலாளர்களை ஏற்றிய வேன் சுகததாஸ உள்ளக விளையாட்டரங்கு அருகேயுள்ள வீதி சமிக்ஞையை கடப்பதற்கு முற்பட்டபோது வலப்புறமாக வீதிக்கு வந்த கொள்கலன் வாகனமொன்று வேனுடன் மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவ இடத்தில் நிறுத்தப்படாமல் பயணித்த விபத்துடன் தொடர்புடைய கொள்கலன் வாகனத்தை பொலிஸார் துறைமுகத்திற்குள் வைத்து கைப்பற்றியதோடு அதன் சாரதியை கைது செய்துள்ளனர்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் விபத்தில் காயமடைந்தவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

இருவருக்கிடையே மோதல் கத்திக் குத்தில் ஒருவர் பலி

 _
03.08.2012.வெலிக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ராஜகிரிய பகுதியில் இருவருக்கிடையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தினால் கத்திக் குத்துக்கு இலக்காகி ஒருவர் பலியாகியுள்ளதுடன் மற்றவர் படுகாயமடைந்துள்ளார்.

நேற்று அதிகாலை இடம்பெற்ற இச்சம்பவத்தினால் அம்பேகம, பத்தேகம பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயதுடைய நெரஞ்சன் மானமடுவ ௭ன்பவரே பலியாகியுள்ளதுடன், கடும் காயங்களுக்குள்ளான சந்தேக நபர் பொலிஸ் பாதுகாப்பில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்தார்.

அதிகாலை ஒரு மணியளவில் பலியான நபருக்கும் சந்தேகநபருக்குமிடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. அத்தகராறு உச்சநிலையடையவே இருவரும் மோதலில் ஈடுபட்டுள்ளனர்.

அதன்போது இருவரும் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சொற்ப வேளையில் குறித்த நபர் பலியாகியுள்ளார். குறித்த இருவரும் மது போதையிலேயே மோதிக் கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவத்தினால் பலியானவரின் சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட் டுள்ளதுடன், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வெலிக்கடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

சட்டவிரோத வடிசாராய உற்பத்தியில் ஈடுபட்ட 11 பேர் கைது

03.08.2012.மட்டக்களப்பு மாவட்டத்தில் சட்டவிரோதமான முறையில் வடிசாராய உற்பத்தியில் ஈடுபட்டுவந்த 11பேர் மாவட்ட ஹலால் திணைக்கள உத்தியோகத்தர்களினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மீள்குடியேறிய வெல்லாவெளி பொலிஸ்பிரிவுக்குட்பட்ட மண்டூர் கிராமத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின்போதே நிலத்துக்கடியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 110 லீற்றர் கசிப்பு மற்றும் கோடா கசிப்பு தயாரிப்புக்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் என்பன மதுவரி அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளன. .கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவுள்ளதாக குறித்த அதிகாரி மேலும் தெரிவித்தார்

ஒலிம்பிக் பதக்கப் பட்டியல்: சீனா தொடர்ந்து முதலிடம்

03.08.2012.லண்டன் ஒலிம்பிக் பதக்கப் பட்டியலில் தொடர்ந்து சீனா முதலிடத்திலும், ஐக்கிய அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளன.

17 தங்கங்கள், 9 வெள்ளிகள், 4 வெண்கலப் பதக்கங்களைப் பெற்று மொத்தமாக 30 பதக்கங்களைப் பெற்றுள்ள சீனா முதலாவது இடத்தில் உள்ளது.

13 தங்கங்கள், 8 வெள்ளிகள், 9 வெண்கலப் பதக்கங்களைப் பெற்றுள்ள ஐக்கிய அமெரிக்கா மொத்தமாக 30 பதக்கங்களோடு 2ஆவது இடத்தில் உள்ளது.

6 தங்கங்கள், 2 வெள்ளிகள், 4 வெண்கலப் பதக்கங்களோடு 12 பதக்கங்களைப் பெற்றுள்ள தென்கொரியா 3ஆவது இடத்திலும், 5 தங்கங்கள், 3 வெள்ளிகள், 5 வெண்கலப் பதக்கங்களோடு 13 பதக்கங்களோடு பிரான்ஸ் 4ஆவது இடத்திலும் காணப்படுகிறது.

4 தங்கங்கள், ஒரு வெண்கலப் பதக்கம் அடங்கலாக 5 பதக்கங்களோடு வடகொரியா 5ஆவது இடத்தில் காணப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து ஜேர்மனி, இத்தாலி, கஸகஸ்தான், தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் 3 தங்கப் பதக்கங்களோடு தொடர்ந்தும் 6ஆம், 7ஆம், 8ஆம் இடங்களில் உள்ளன.

ஜப்பான், ரஷ்யா, பிரித்தானியா, ஹங்கேரி, உக்ரைன் ஆகிய நாடுகள் தலா 2 தங்கப் பதக்கங்களோடு 10ஆம் இடத்திலிருந்து 14ஆம் இடம் வரை பெற்றுள்ளன.

அடிப்படை வசதிகளற்ற நிலையில் முசலி சவேரியார்புரம் புதுக்குடியிருப்பு கிராம மக்கள் அவதி

_
03.08.2012.முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட சவேரியார்புரம் புதுக்குடியிருப்பு கிராம மக்களுக்கான விசேட கலந்துரையாடல் ஒன்று கடந்த புதன்கிழமை முசலி பிரதேச பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில்; இடம் பெற்ற போது அக்கிராம மக்கள் பல்வேறு பட்ட அடிப்படை வசதிகளற்ற நிலையில் வாழ்ந்து வருவதை தமது கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாக முசலி பிரதேச பிரஜைகள் குழுவின் அமைப்பாளர் திரு சுனேஸ் தெரிவித்தார்.

இக் கூட்டத்திற்கு முசலி பிரதேச பிரஜைகள் குழுவின் தலைவர் திரு ராஜன் மற்றும் பிரதேச சபை உறுப்பினர் திரு நீக்கிலாஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதில் முசலி பிரதேச பிரஜைகள் குழுவினரிடம் மக்கள் சில பிரச்சினைகளை முன் வைத்து இதற்கான தீர்வினைப் பெற்றுத்தரும்;படி வேண்டுகோள் விடுத்தனா.;

2007ஆம் ஆண்டுமுசலி பிரதேசத்தில் இடம் பெற்ற யுத்தத்தின் காரணமாக மக்கள் தங்களின் உயிரை காப்பாற்றுவதற்காக அவர்களின் ஊரை விட்டு வெளியேறினார்கள்.

மீண்டும் 2009 ஆம்ஆண்டு தங்களின் சொந்தக் கிராமத்தில் வந்து குடியேறினார்கள்.

ஆனால் முசலி பிரதேசத்தில் எல்லா இடங்களிலும் வடக்கின் வசந்தத்தின் கீழ் மின்சாரம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போது எமது கிராமமாக சவேரியார்புரமும் உள்வாங்கப்பட்டு படிவங்கள் பூர்த்தி செய்து கொடுக்கப்பட்டன.

ஆனால் எல்லாக் கிராமத்திற்கும் மின்சாரம் வழங்கிய வடக்கின் வசந்தம் ஏன் சவேரியார் புர கிராம அதிகாரி பிரிவுக்குட்பட்ட புதுக்குடியிருப்பு கிராமத்திற்கு வழங்கவில்லை என மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இது சம்பந்தமாக பிரதேச செயலாளர், பிரதேசசபைத் தலைவர் மற்றும் வவுனியா வடக்கின் வசந்தத்திற்கான மின்சார சபை ஆகிய அனைவருக்கும் கடிதங்கள் அனுப்பியும் எவ்வித பலனும் கிடைக்கவில்லை என முசலி பிரதேச பிரஜைகள் குழுவினரிடம் மக்கள் தெரிவித்தனர்.

இதனைவிட எமது கிராமத்தில் பல தரப்பட்ட பிரச்சினைகளுக்கு மக்காளாகிய நாங்கள் முகம் கொடுத்துக்கொண்டு வருகின்றோம். குறிப்பாக மின்சாரப் பிரச்சினை ,மழை காலத்தில் யானைகளின் அட்டகாசம் ,பொதுக்கட்டிடம் இன்மை,குடி நீர்வசதி இன்மை,ஒழுங்கான வடிகால் இன்மை போன்ற பல பிரச்சினைகளுக்கு மக்கள் முகம் கொடுத்துக் கொண்டு வருகின்றார்கள்.

இப் பிரச்சினைகளை பல அதிகாரிகளிடம் கூறியும் இன்னமும் சரியான பதில் கிடைக்கவில்லை என அந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதனை முன்னிட்டு எதிர்வரும் 15-08-2012 புதன்கிழமை காலை 9.00 மணிக்கு அனைத்துப் பணியையும் நிறுத்திவிட்டு மக்கள் முசலி பிரதேச சபை தவிசாளருக்கு மனு ஒன்றினைக் கையளிப்பதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முசலி பிரதேச பிரஜைகள் குழுவின் அமைப்பாளர் திரு. சுனேஸ் தெரிவித்தார்

தமிழ் மசாலா செய்திகள்

03.08.2012.
உன்ங்களை மிகவும் மகிழ்விக்க தமிழ் மசாலாவை பாருங்கள்

இவர்களின் அதிரடித்தாக்குதலை நீங்கள் பார்த்துண்டா?

இவர்களின் அதிரடித்தாக்குதலை நீங்கள் பார்த்துண்டா?

03.08.2012,

கடல்வாழ் மீனினங்களுள் இரைதேடுவதற்காக பாரிய தாக்குதல்களை மேற்கொள்வதில் சுறாக்களுக்கு நிகர் சுறாக்களே. இவற்றின் கொடூரமான தாக்குதலில் பாரிய படகுகளும் சிக்கி சின்னாபின்னமாகிவிடும்.
இவ்வாறு பெரியதொரு மீனை சுறா ஒன்று தனது அதிரடித்தாக்குதல் மூலம் வேட்டையாடுவதை ஆராய்ச்சியாளர்கள் குழு ஒன்று மிகவும் அற்புதமான முறையில் காணொளிப் படம் பிடித்துள்ளனர்.

மீன் பிடிப்பதற்கு இப்படியெல்லாமா யோசிப்பார்கள்!

மீன் பிடிப்பதற்கு இப்படியெல்லாமா யோசிப்பார்கள்!

 

03.08.2012.
வெடிகுண்டு போட்டு மீன் பிடிப்பது ஆபத்தான காரியம் தான். அதற்காக போடத் தெரியாதவர்கள் வெடிகுண்டு போட்டு மீன்பிடித்தால் இப்படித்தான் இருக்கும்.

பசுவின் இரத்தத்தை நீங்கள் குடித்ததுண்டா?

பசுவின் இரத்தத்தை நீங்கள் குடித்ததுண்டா?.

 

03.08.2012.
ஆப்பிரிக்காவில் வாழ்கின்ற பழங்குடி மக்களில் ஒரு வகுப்பினர் பசுவின் இரத்தம் உடலுக்கு மிகுந்த பலத்தை கொடுக்கும் என்று விசுவாசித்து அதனைக் குடிக்கின்றனர்.
உடல் வலிமையை அதிகரிக்க சிறுவர்களுக்கும், வயதானவர்களுக்கும் இது அருமையான உணவு எனவும் நம்புகின்றார்கள்.
பசுவின் கழுத்துப் பகுதியில் இரத்த நாளத்தில் அம்பு மூலம் துளை இட்டு இரத்தத்தை எடுக்கின்றனர். எந்த பசுவிடம் இருந்து இரத்தத்தை பெறுகின்றனரோ அதே பசுவின் பாலுடன் கலந்து குடிக்கின்றார்கள்.
ஆயினும் பசுவை இறக்க விட மாட்டார்கள். காயம் முழுமையாக குணமாகும் வரை மிகவும் கவனமாக பராமரிப்பார்கள்.






உலகின் பிரசித்தி வாய்ந்த புனிதத் தலங்கள்

 

03.08.2012.உலகின் பிரசித்தி வாய்ந்த புனிதத் தலங்கள்
பொதுவாக சமயத்தின் மீது ஈடுபாடு கொண்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. மேலும் சமய தலங்கள் பலவிதமான அற்புதங்களுடனும், அழகாகவும் காணப்படும். அவ்வாறு உலகிலேயே அதிக பிரசித்தி வாய்ந்த புனிதத் தலங்களின் தொகுப்பினைப் படத்தில் காணலாம்.









இலங்கை விமானப் படையினரோடு புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் காட்டிய பிரித்தானிய பாராளுமன்ற குழு

 
வெள்ளிக்கிழமை, 03 ஓகஸ்ட் 2012,
யாழ். வந்த பிரித்தானியப் பாராளுமன்ற உறுப்பினர்கள் இலங்கையின் விமானப் படையினரோடு நின்று புகைப்படம் எடுப்பதில் அதிக ஆர்வம் கொண்டிருந்தது யாழ். மக்களிடம் கடும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று யாழ்ப்பாணம் வந்த குழுவினர், யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் உலங்குவானுர்தியில் வந்திறங்கியபோது தம்மை அழைத்து வந்த விமானப்படையினரோடு நின்று புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் காட்டியிருந்தனர்.
இவர்களில் சில பாராளுமன்ற உறுப்பினர்கள் விமானப் படையினரோடு மாறிமாறி நின்று புகைப்படம் எடுத்ததை மைதானத்திற்கு வெளியே நின்றிருந்த பொது மக்கள் வியப்போடு பார்த்துக் கொண்டிருந்தனர்.

சிவந்தனின் உண்ணாநிலைப் போராட்டம்: மக்கள் ஆதரவு அதிகரிப்பு

வெள்ளிக்கிழமை, 03 ஓகஸ்ட் 2012,
லண்டனில் இன்று பன்னிரண்டாவது நாளாக உண்ணாநிலைப் போராடத்தில் ஈடுபட்டுவரும் கோபி சிவந்தனுக்கு தமது ஆதரவினை வழங்குவதற்காக, அவர் அமர்ந்திருக்கும் ஸ்ரற்போர்ட் தொடரூந்து நிலையத்திற்கு அருகில் பெருமளவிலான மக்கள் திரண்டிருந்தனர்.
சைவ, கத்தோலிக்க மதகுருமார்களும் சிவந்தனை சந்தித்து அவருக்கு ஆசி வழங்கினர். சிவந்தனின் கோரிக்கைகள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் ஒலிம்பிக் கிராமத்திற்கு அருகில் அமைந்துள்ள ஸ்ரற்போர்ட் பிரதான தொடரூந்து நிலையப் பகுதியில் பரவலாக விநியோகிகப்பட்டதுடன், அவற்றை ஆர்வத்துடன் பெற்றுக் கொண்டவர்களுக்கு அது தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது.
சோர்வடைந்துள்ள நிலையில் காணப்படும் சிவந்தனின் இரத்த அழுத்தம் வீழ்ச்சியடைந்து காணப்படுவதாக, அவரது உடல்நிலையை பரிசோதித்த மருத்துவர் திருமதி. சசிகலா இராஜமனோகரன் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், அதிகரித்த மக்கள் ஆதரவு அவரை தொடர்ந்து உறுதியுடன் போராடுவதற்கான மனோபலத்தை கொடுத்துள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்களிலிருந்து அறியமுடிகிறது

இலங்கைக்கு தலையிடியாக இருக்கும் இணையத்தளங்களை முடக்கும் முயற்சியில் கோத்தபாய?

வெள்ளிக்கிழமை, 03 ஓகஸ்ட் 2012,
இலங்கை அரசாங்கத்திற்கு தலைவலியாக இருக்கும் இணையத்தளங்களை தடுக்கும் முயற்சியை பாதுகாப்பு அமைச்சு மேற்கொண்டு வருவதாக லங்கா நியூஸ்வெப் இணையம் தகவல் வெளியிட்டுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து இயக்கப்படும் சில இணையத்தளங்கள் இலங்கை அரசாங்கத்திற்கு தலையிடியாக இருப்பதாகவும் இவற்றை முடக்குவதற்காக பாதுகாப்புச் செயலரின் மேற்பார்வையின் கீழ் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி வெளிநாடுகளில் இருந்து செயற்படும் இணையத்தளங்களின் முகவரியை ஒத்த போலியான யுஆர்எல் (URL) முகவரிகள் உருவாக்கப்படும். இந்நிலையில், குறித்த இணையத்தளங்களைப் பார்வையிட நுழையும்போது, இந்த போலியான இணையங்களுக்குள் பார்வையாளர்களைக் கொண்டு செல்லும்.
சீன அரசின் துணையுடன் இந்தத் திட்டம் ஏற்கனவே வெற்றிகரமாக பரீட்சிக்கப்பட்டுள்ளது. இதற்கென பாதுகாப்பு அமைச்சு 12 சீன தொழில்நுட்பவியலாளர்களைப் பயன்படுத்தி வருகிறது.
இந்த தொழில்நுட்பவியலாளர்கள் போலியான யுஆர்எல் (URL) முகவரிகளை உருவாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது

இலங்கைப் பணிப் பெண்ணின் மார்பகத்தில் ஊசி குத்தி கொடுமை செய்த அவலம்

இலங்கைப் பணிப் பெண்ணின் மார்பகத்தில் ஊசி குத்தி கொடுமை செய்த அவலம்
வெள்ளிக்கிழமை, 03 ஓகஸ்ட் 2012,
இலங்கைப் பெண்ணொருவர், குவைத்தில் வீட்டுப் பணிப்பெண்ணாக பணியாற்றச் சென்ற வேளை, அங்குள்ள இலங்கைப் பெண்ணொருவராலும் வேலைவாய்ப்பு முகவராலும் கொடுமைப்படுத்தப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த பெண்ணின் மார்பகத்தில் ஊசிகள் குத்தப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு பிள்ளையின் தாயான இப்பெண், நாடு திரும்பிய நிலையில், மேற்படி இரு ஊசிகளை அகற்றுவதற்காக பலாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது

இனவாதத்தை தூண்டும் வகையில் பிரசாரம் செய்யக் கூடாது: தேர்தல் கண்காணிப்பு அமைப்பு

 வெள்ளிக்கிழமை, 03 ஓகஸ்ட் 2012,
இனவாதத்தை தூண்டும் வகையில் பிரசாரம் செய்யக் கூடாது என தேசிய தேர்தல் கண்காணிப்பு மத்திய நிலையம் அரசியல் கட்சிகளிடம் கோரியுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் இனவாத அடிப்படையில் பிரசாரம் மேற்கொள்ளப்படுகின்றது. 30 ஆண்டு யுத்தத்தின் பின்னர் நாட்டில் தற்போது அமைதி ஏற்பட்டுள்ளது.
இவ்வாறான ஓர் நிலைமையில் மீளவும் இனவாதத்தை தூண்டும் வகையில் பிரசாரம் செய்யக் கூடாது. கடந்த கால அனுபவங்களை பாடமாகக் கொண்டு செயற்பட வேண்டியது அவசியமானது.
அரசியல் திட்டங்கள் மற்றும் கொள்கைகளை மக்களுக்கு தெளிவுபடுத்தி அதன் மூலம் வாக்குகளைப் பெற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டுமென தேசிய தேர்தல் கண்காணிப்பு மத்திய நிலையம் அரசியல் கட்சிகளிடம் கோரியுள்ளது.

காணி, பொலிஸ் அதிகாரங்களைப் பெற்றுக்கொள்ளக் கூடிய முதலமைச்சரே கிழக்கிற்கு தேவை: சம்பந்தன்

வெள்ளிக்கிழமை, 03 ஓகஸ்ட் 2012,
காணி, பொலிஸ் அதிகாரங்களைப் பெற்றுக்கொள்ளக் கூடிய முதலமைச்சரே கிழக்கிற்கு தேவை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
மாகாணசபை முறைமையில் பல்வேறு குறைபாடுகள் காணப்படுகின்றன. மாகாணசபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் போதுமானதல்ல.
ஆளுனருக்கே கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. 60 ஆண்டுகளுக்கு முன்னர் செல்வநாயகம் உரிமை போராட்டத்தை ஆரம்பித்தார்.
மக்களின் அர்ப்பணிப்பு மற்றும் இளைஞர்களின் தியாகம் காரணமாக வடக்கு கிழக்கு ஒன்றிணைந்த மாகாணசபையொன்று உருவானது. இவ்வாறு உருவாக்கப்பட்ட மாகாணசபைகளை யாருக்கும் தாரை வார்ப்பது சரியானதா?
மாகாணசபைகளுக்கு உரிய அதிகாரங்களை வழங்க அரசாங்கம் விரும்பவில்லை. குறிப்பாக காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களை வழங்க அரசாங்கம் விரும்பவில்லை.
இந்த மாகாணசபைத் தேர்தலில் தமிழ் மக்களின் உரிமைகளை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
மூதூர் பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.