| ||||||||
நேற்று அதிகாலை இடம்பெற்ற இச்சம்பவத்தினால் அம்பேகம, பத்தேகம பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயதுடைய நெரஞ்சன் மானமடுவ ௭ன்பவரே பலியாகியுள்ளதுடன், கடும் காயங்களுக்குள்ளான சந்தேக நபர் பொலிஸ் பாதுகாப்பில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்தார். அதிகாலை ஒரு மணியளவில் பலியான நபருக்கும் சந்தேகநபருக்குமிடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. அத்தகராறு உச்சநிலையடையவே இருவரும் மோதலில் ஈடுபட்டுள்ளனர். அதன்போது இருவரும் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சொற்ப வேளையில் குறித்த நபர் பலியாகியுள்ளார். குறித்த இருவரும் மது போதையிலேயே மோதிக் கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவத்தினால் பலியானவரின் சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட் டுள்ளதுடன், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வெலிக்கடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் |
வெள்ளி, 3 ஆகஸ்ட், 2012
இருவருக்கிடையே மோதல் கத்திக் குத்தில் ஒருவர் பலி
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக