17 தங்கங்கள், 9 வெள்ளிகள், 4 வெண்கலப் பதக்கங்களைப் பெற்று மொத்தமாக 30 பதக்கங்களைப் பெற்றுள்ள சீனா முதலாவது இடத்தில் உள்ளது. 13 தங்கங்கள், 8 வெள்ளிகள், 9 வெண்கலப் பதக்கங்களைப் பெற்றுள்ள ஐக்கிய அமெரிக்கா மொத்தமாக 30 பதக்கங்களோடு 2ஆவது இடத்தில் உள்ளது. 6 தங்கங்கள், 2 வெள்ளிகள், 4 வெண்கலப் பதக்கங்களோடு 12 பதக்கங்களைப் பெற்றுள்ள தென்கொரியா 3ஆவது இடத்திலும், 5 தங்கங்கள், 3 வெள்ளிகள், 5 வெண்கலப் பதக்கங்களோடு 13 பதக்கங்களோடு பிரான்ஸ் 4ஆவது இடத்திலும் காணப்படுகிறது. 4 தங்கங்கள், ஒரு வெண்கலப் பதக்கம் அடங்கலாக 5 பதக்கங்களோடு வடகொரியா 5ஆவது இடத்தில் காணப்படுகிறது. இதனைத் தொடர்ந்து ஜேர்மனி, இத்தாலி, கஸகஸ்தான், தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் 3 தங்கப் பதக்கங்களோடு தொடர்ந்தும் 6ஆம், 7ஆம், 8ஆம் இடங்களில் உள்ளன. ஜப்பான், ரஷ்யா, பிரித்தானியா, ஹங்கேரி, உக்ரைன் ஆகிய நாடுகள் தலா 2 தங்கப் பதக்கங்களோடு 10ஆம் இடத்திலிருந்து 14ஆம் இடம் வரை பெற்றுள்ளன. |
வெள்ளி, 3 ஆகஸ்ட், 2012
ஒலிம்பிக் பதக்கப் பட்டியல்: சீனா தொடர்ந்து முதலிடம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக