04.08.2012. | |||
அஜித்குமார்- 20. | |||
திரையுலகில் அஜீத் குமார் தனது 21வது வயதில் தெலுங்கு திரைப்படமான பிரேம
புஷ்டகம் என்ற படத்தில் அறிமுகமானார். இந்த திரைப்படம் 1993ம் ஆண்டு யூலை 15ம் திகதி திரைக்கு வந்தது. அதைத்தொடர்ந்து கொலிவுட் வாய்ப்புகள் வர அமராவதி என்ற திரைப்படத்தில் நடித்தார். பின்னர் தொடர்ந்து தமிழ் படங்களில் கவனம் செலுத்திய அஜீத், ஆசை, வாலி என பல வெற்றிப்படங்களை தந்தார். அஜித்குமார் இது வரை 51 படங்கள் தமிழில் நடித்துள்ளார். அவரது 50வது படமான மங்காத்தா சூப்பர் ஹிட்டானது. இது தவிர வரலாறு, சிட்டிசன், வாலி, வில்லன் போன்ற படங்கள் அஜித்தின் நடிப்பை வெளிப்படுத்தக்கூடியவையாக அமைந்தன. தமிழ் திரையுலகில் இன்று முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக திகழும் அஜீத், திரையுலகிற்கு அடியெடுத்து வைத்து 20 ஆண்டுகளை வெற்றிகரமாக கடந்து வந்திருக்கிறார் |
This is default featured slide 1 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 2 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 3 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 4 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
This is default featured slide 5 title
Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.
சனி, 4 ஆகஸ்ட், 2012
தல அஜித்குமார் தனது 20 ஆண்டுகால திரையுலக வாழ்க்கையை நிறைவு செய்துள்ளார்.
நண்பர்களுடன் நீராடச் சென்ற சிறுவன் பலி
| ||||||||
கம்பளை சாஹிரா கல்லூரியில் தரம் 9 இல் கல்வி பயின்று வந்த கெலிஓயாவத்தையைச் சேர்ந்த எம்.ஜே. இம்தாத் (14 வயது) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தை தொடர்ந்து பிரதேசவாசிகள் மேற்கொண்ட தேடுதலைத் தொடர்ந்து ஒரு மணித்தியாலத்தின் பின்பு சிறுவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணைகளை பேராதனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் |
சூதாட்டக்கப்பலில் பிரியாமணிக்கு சிறப்பு அனுமதி
| ||||||||
இந்தக்கப்பலில் சினிமா படப்பிடிப்பு போன்றவற்றை அனுமதிப்பதில்லையாம். ஆனால் பிரியாமணிக்காக அனுமதித்துள்ளார்கள். கன்னடத்தில் சிவராஜ்குமார் ஜோடியாக பிரியாமணி நடிக்கும் லட்சுமி எனும் படத்தின் ஷுட்டிங் இந்த சூதாட்டக்கப்பலின் அழகிய உள் அலங்கார வேலைப்பாடுகளையும் படமாக்கிக் கொண்டார்களாம். இந்தக்கப்பலில் நடந்த படப்பிடிப்பு மிகவும் உற்சாகமாகவும் புதுமையாகவும் இருந்தாக பிரியாமணி தெரிவித்துள்ளார். கோவா அரசு சுற்றுலா என்ற பெயரில் சூதாட்டத்தை நிலத்தில் அனுமதிக்காமல் நீரில் மிதக்கும் கப்பலில் அனுமதிக்கிறது |
சீக்கிய கோயிலில் செருப்பு துடைத்த விவகாரம்: பாகிஸ்தான் சட்டத்தரனி பதவி நீக்கம்
சீக்கிய கோயிலில் செருப்பு துடைத்த விவகாரம்: பாகிஸ்தான் சட்டத்தரனி பதவி நீக்கம் |
சனிக்கிழமை, 04 ஓகஸ்ட் 2012, |
இந்தியாவில் உள்ள புனித ஸ்தலமான
பொற்கோவில் குருத்வாராவில் காலணிகளை சுத்தம் செய்ததற்காக பாகிஸ்தான் அரசு உதவி
தலைமை சட்டத்தரனி குர்ஷித் கானை பதவியிலிருந்து அந்நாட்டு அரசு நீக்கியுள்ளது.
சமீபத்தில் இந்தியாவிற்கு விஜயமளித்த சட்டத்தரனி குர்ஷித் கான், பஞ்சாப்பில்
உள்ள பொற்கோவிலுக்கு சென்றார். அங்குள்ள குருத்வாராவில் சீக்கியர்களின் காலணிகளை சுத்தம் செய்தார். இதற்கு பாகிஸ்தான் அரச பிரதிநிதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதற்கு குர்ஷித் கான், அஜ்மல் கசாப் போன்று இந்தியாவின் மீது தாக்குதல் நடத்த வில்லை. ஒரு சேவையாகத்தான் பொற்கோவிலில் உள்ள காலணிகளை சுத்தம் செய்தேன் என்றார். இந்நிலையில் அவரது பதவியை பாகிஸ்தான் அரசு பறித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது நேபாள தலைநகர் காட்மண்டுவில் உள்ள அவர், தனது பயணத்தை இரத்து செய்து விட்டு பாகிஸ்தான் திரும்ப உள்ளார். அதே சமயம், குர்ஷித் நீக்கப்பட்டதற்கான காரணத்தை தெரிவிக்க பாகிஸ்தான் அரசு மறுத்துவிட்டது. |
முகப்பு |
பொது இடத்தில் பாலியல் ரீதியாக தவறாக நடந்து கொண்ட தம்பதி கைது
சனிக்கிழமை, 04 ஓகஸ்ட் 2012, |
வால்மார்ட் கடையில் பொருட்களை
திருடியதுடன், அங்கு வாடிக்கையாளர்கள் பார்க்கும் வகையில் பாலியல் ரீதியாக தவறாக
நடந்து கொண்ட தம்பதியை பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
அமெரிக்காவில் உள்ளது கன்சாஸ் நகரம். இங்கு வசிப்பவர்கள் டினா ஜியானாகோன்(வயது
35) , ஜூலியன் கால்(வயது 22). தம்பதிகளான இவர்கள் சமீபத்தில் வால்மார்ட் கடைக்கு
சென்றனர். அங்கு பல பொருட்களை சுருட்டினர். அப்போது திடீரென இருவரும் ஒரு குறுகிய இடத்தில் தவறாக நடந்து கொண்டுள்ளனர். பொருட்களை எடுக்க வந்த வாடிக்கையாளர்கள் இதை பார்த்து அதிர்ச்சி அடைந்து பொலிக்கு தகவல் கொடுத்தனர். பொலிசார் விரைந்து வந்து டினாவையும் ஜூலியனையும் கைது செய்தனர். அவர்கள் மீது திருட்டு, பொது இடத்தில் அநாகரிகமாக நடந்து கொண்டது, ஆபாசமாக செயல்பட்டது போன்ற பல்வேறு குற்றங்களின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் ஹட்சின்சன் என்ற பகுதிகளில் உள்ள கடைகளில் ஏற்கனவே பல பொருட்களை திருடியுள்ளதும் அவர்கள் மீதான வழக்குகள் நிலுவையில் உள்ளதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள வால்மார்ட் கடையில் தம்பதி இவ்வாறு நடந்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது |
அகாலமரணம்
திரு ஜேம்ஸ் பொன்னுத்துரை நிமலராஜன் |
மலர்வு : 9 யூலை 1970 — உதிர்வு : 16 யூன் 2012 |
வானொலி அறிவித்தல்
|
|
1ம் ஆண்டு நினைவஞ்சலி
|
அமரர் கந்தையா தயாநிதி |
(தயா – Marche JVT உரிமையாளர்) |
அன்னை மடியில் : 5 சனவரி 1959 — ஆண்டவன் அடியில் : 15 ஓகஸ்ட் 2011 |
|
சொந்த ஊரில் விவசாயம் செய்ய காத்திருக்கும் நடிகர் அமீர்கான்
04.08.2012. |
நடிகர் அமீர்கான் தனது சொந்த ஊரான ஷாபாத்தில் எதிர்வரும் காலத்தில் விவசாயம் செய்ய இருக்கின்றார். |
நடிகர் அமீர்கானின் சொந்த ஊரான ஷாபாத் உத்திர பிரதேச மாநிலம், ஹர்தோய்
மாவட்டத்தில் உள்ளது. தனது தொழில் காரணமாக அமீர்கான் மும்பையில் வசிக்கிறார். ஆனால் ஷாபாத்தில் உள்ள அமீர்கானின் பெரியப்பா நாசிர் ஹுசைன் மற்றும் உறவினர்கள் வீடுகளை விற்க முயற்சித்த போது அங்குள்ள 22 வீடுகளை தானே வாங்கினார். இந்த வீடுகள் குறித்து நடிகர் அமீர் கான், விவசாய நிலத்தில் இந்த வீடுகள் அமைந்துள்ளது. எங்களுடைய பூர்வீக சொத்துக்களை எவரோ ஒருவர் வாங்குவதை நான் விரும்பவில்லை. அதன்காரணமாக நானே வாங்கியுள்ளேன். எதிர் வரும் காலங்களில் இந்த இடத்தில் உழுது விவசாயம் பார்க்கப்போகின்றேன். எங்களின் பூர்வீக வீட்டில் தாய், தந்தையுடன் ஒன்றாக வாழ ஆசை. ஆனால் இது எப்பொழுது நடக்குமென தமக்கு தெரியாது என்றும் இந்த வீட்டில் தனது சகோதர, சகோதரிகளின் குழந்தைகளும் தங்கலாம் எனவும் நடிகர் அமீர்கான் கூறியுள்ளார். |
அருவி தண்ணீருக்காக காத்திருந்த கும்கி
04.08.2012. |
மைனா பட வெற்றிக்கு பின்பு இயக்குனர் பிரபு சாலமன் இயக்கியுள்ள படம் கும்கி. |
இப்படத்தில் நாயகனாக பிரபுவின் மகன் விக்ரம் பிரபுவும், நாயகியாக அறிமுக நடிகை
லட்சுமி மேனனும் நடித்துள்ளனர். மேலும் தம்பி ராமய்யா மற்றும் பலர் நடித்துள்ள
இப்படத்தை திருப்பதி பிரதர்ஸ் பட நிறுவனம் சார்பில் இயக்குனர் லிங்குசாமி
தயாரித்துள்ளார். இந்த கும்கி படத்தை சிறந்த முறையில் உருவாக்க இயக்குனர் பிரபு சாலமனுக்கு லிங்குசாமி சுதந்திரமளித்துள்ளார். இதுகுறித்து இயக்குனர் பிரபு சாலமன் கூறுகையில், கும்கி படத்தை தொடங்கி, எடுத்து முடிக்க ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலானது. எதனால் தாமதம் என்று இதுநாள் வரைக்கும் கேட்காத தயாரிப்பாளருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். படத்தயாரிப்பாளர் கொடுத்த சுதந்திரத்தால் தான் படத்தின் ஒவ்வொரு காட்சியையும் சிறந்த முறையில் எடுக்க முடிந்தது. அருவியில் இருந்து தண்ணீர் கொட்டுவதை படமாக்க பல மாதங்களாக காத்திருந்தோம். வருடத்தில் சில நாட்கள் மட்டும் அருவில் தண்ணீர் அதிக அளவில் விழும் என்றும் அந்த நாட்களில் படத்தின் காட்சிகளை படமாக்கினோம் எனவும் அவர் கூறியுள்ளார் |
பாரதிராஜாவின் புது நாயகி
பாரதிராஜாவின் புது நாயகி |
Saturday, 04 August 2012, |
இயக்குனர் பாரதிராஜா, தான் இயக்கி வரும் அன்னக்கொடியும் கொடிவீரனும் படத்தின் இரண்டாவது நாயகியாக சுபிக்ஷவை அறிமுகப்படுத்துகின்றார். |
நீண்ட நாட்களுக்கு பின்பு இயக்குனர் பாரதிராஜா புதிய படத்தை இயக்குகிறார்
என்றால் அப்படம் மிகுந்த வரவேற்பை பெறும் என்ற நம்பிக்கையில் கொலிவுட்
காத்திருக்கின்றது. கடந்த ஆண்டு அன்னக்கொடியும் கொடி வீரனும் படத்தின் தொடக்க விழாவிற்கு தமிழ் திரையுலகமே திரண்டு வந்திருந்தது. அமீர், இனியா, கார்த்திகாவுடன் படப்பிடிப்பு நடந்த நிலையில், பெப்சி- தயாரிப்பாளர் சங்க மோதல் காரணமாக திடீரென இந்தப் படம் நின்றுபோனது. இதன் காரணமாக இயக்குனர் அமீர் இப்படத்திலிருந்து விலகினார். பின்னர் திகதிகள் பிரச்சினையால் இனியாவும் விலகினார். இந்த நிலையில், பாரதிராஜா மீண்டும் படப்பிடிப்பைத் தொடங்குகிறார். இனியாவின் வேடத்தில் நடிக்க புதுமுகம் சுபிக்ஷா என்பவரை தெரிவு செய்துள்ளார். சமீபத்தில் சுபிக்ஷாவுக்கு புகைப்பட ஒத்திகை நடத்தி, படமெடுத்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. |
சட்டக்கல்லூரி மாணவர்கள் 36 பேர் கைது
நெல்லை:தனியார் சட்டக்கல்லூரிக்கு அனுமதி கூடாது. தகுதி தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் சட்டக்கல்லூரி மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். மதுரை, கோவையில் சட்டக்கல்லூரி மாணவர்கள் ஊர்வலம், உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். கோவை, மதுரையில் உள்ளிருப்பு போராடம் நடத்திய 54 மாணவர்களை நேற்று முன்தினம் அதிகாலை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர்களை விடுவிக்கக்கோரி நெல்லை சட்டக்கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். தொடர்ந்து கல்லூரி வளாகத்துக்குள் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து கல்லூரி முதல்வர் ஆசீர் தர்மராஜ் அளித்த புகாரின் அடிப்படையில் நேற்று அதிகாலை 3 மணியளவில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 36 மணவர்களை போலீசார் கைது செய்து சிறிது நேரத்தில் விடுதலை செய்தனர். அதன்பிறகு போலீசாரை கண்டித்து சட்டக் கல்லூரியை மாணவர்கள் முற்றுகையிட்டனர். மாநகர போலீஸ் துணை கமிஷனர் மணிவண்ணன், கல்லூரி முதல்வர் ஆசீர் தர்மராஜ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
சிறைக்குள் பணம் கடத்த முயன்ற 2 பெண்கள் சிக்கினர்
கோவை: கோவை புலியகுளத்தை சேர்ந்தவர் மணிகண்டன் என்ற குண்டு மணிகண்டன். இவர் ஒரு வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரது மனைவி புவனேஸ்வரி நேற்று காலை கணவரை பார்க்க சிறைக்கு வந்தார். சிறை வாசலில் பாதுகாவலர்கள் புவனேஸ்வரியை சோதனை செய்தனர். அப்போது அவர் அணிந்திருந்த சேலை நுனியில் ரூ.1,400 ஐ மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அதே போல் திருச்சி ராம்ஜி நகரை சேர்ந்தவர் உமாநாத். இவருயை மைத்துனர் மணி. இருவரும் இதே சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களை பார்க்க நேற்று உமாநாத்தின் மனைவி ஹேமா வந்தார். சிறைக்காவலர்கள் நடத்திய சோதனையில் அவர் வைத்திருந்த மூங்கில் பை கைப்பிடியில் குச்சிகளுக்கு இடையே ரூ.2,000த்தை மறைத்து கடத்த முயன்றது தெரியவந்தது. பணம் கடத்த முயன்று சிக்கிய இருவரையும் கையும், களவுமாக போலீசார் பிடித்து எச்சரித்து அனுப்பினர்
வேலூரில் பயங்கரம்லாரி மீது கார் மோதி 3 இன்ஜினியரிங் மாணவர்கள் பலி
வேலூர்: வேலூர் அருகே நேற்று அதிகாலை ஏற்பட்ட விபத்தில், இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் 3 பேர் பலியாகினர். ஆந்திர மாநிலம் காக்கிநாடா பகுதியை சேர்ந்தவர் ஜெய்சங்கர் (21), மேடக் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மணிகண்டா (21), கடப்பா பகுதியை சேர்ந்தவர் கோபாவரம் மாருதி பிரசாத் (21), ஸ்ரீகாகுளம் பகுதியை சேர்ந்தவர் ராஜிவ் சிங் சோலங்கி (21), அனந்தபூர் பகுதியை சேர்ந்தவர் துனுர்தத்தா ரெட்டி (21). வேலூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்களான இவர்கள் காட்பாடியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தனர். நேற்று அதிகாலை அதே கல்லூரி மாணவர் சுப்பாராவ் (22) என்பவருக்கு சொந்தமான காரில் 5 பேரும் சித்தூர் சென்றுள்ளனர். அங்கு பஸ்நிலையம் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை திருப்பத்தில் நின்றிருந்த லாரியின் பின்னால் மோதியது. இதில் கார் அப்பளம் போல நொறுங்கியது. உயிருக்கு போராடியவர்களை காரை உடைத்து மீட்டனர். ஆனாலும் ராஜிவ் சிங் சோலங்கி இடிபாடுகளில் சிக்கி இறந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மற்ற நால்வரும் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி தனுர் தத்தா ரெட்டி, கோபாவரம் மாருதி பிரசாத் ஆகியோர் இறந்தனர். ஜெய்சங்கர், மணிகண்டா ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து, காட்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
மாணவர்கள் பெயரில் கல்வி உதவித்தொகை மோசடி
2012-08-04
நாமக்கல் : மாணவர்கள் பெயரில் போலி பட்டியல் தயாரித்து, ரூ.81 லட்சம் மோசடியில் ஈடுபட்ட 77 பள்ளி தலைமை ஆசிரியர்கள் நேற்று அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 10,ம் வகுப்பு வரை படிக்கும் சுகாதாரம் குறைவான தொழில் செய்யும் பெற்றோர்களின் பிள்ளைகளுக்கு ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. ஒருவருக்கு ஆண்டுக்கு ரூ.1850 வீதம் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இதில் நாமக்கல் மாவட்டத்தில் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் கடந்த 2010, 2011,ம் ஆண்டுகளில் இந்த கல்வி உதவித்தொகையை மாணவ, மாணவிகளுக்கு வழங்காமல் ரூ.81 லட்சம் மோசடி நடந்திருப்பது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
மாவட்டத்தில் உள்ள 1002 பள்ளிகளில் 98 பள்ளிகளில் படிக்கும் அனைத்து மாணவ, மாணவிகளையும் சுகாதாரம் குறைவான தொழில் செய்யும் பெற்றோரின் குழந்தைகள் என போலி பட்டியல் தயார் செய்து, மாவட்ட ஆதிதிராவிட நலத்துறைக்கு தலைமை ஆசிரியர்கள் விண்ணப்பித்துள்ளனர். இது குறித்து விசாரணை நடந்ததும், மோசடியில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டதை அடுத்து முதல்கட்டமாக நாமக்கல் மாவட்டம் காரைக்குறிச்சிபுதூர் பள்ளி ஆசிரியர் சரவணன் கைது செய்யப்பட்டார்.
மோகனூர் ஆர்.சி. பள்ளி தலைமை ஆசிரியர் சார்லஸ், கபிலர்மலை ஒன்றியம் பள்ளபாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பூபதி ஆகிய 2 பேரையும் போலீசார் தேடி வருகிறார்கள். இவர்கள் மூன்று பேரையும் ஏற்கனவே சஸ்பெண்ட் செய்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் உத்தரவிட்டிருந்தார். சென்னையில் இருந்து வந்த தொடக்க கல்வி துறையை சேர்ந்த ஆடிட்டிங் குழுவினர், ஒரு வாரம் நாமக்கல்லில் முகாமிட்டு இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். உதவித்தொகை பெற்ற பள்ளிகளை சேர்ந்த தலைமை ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்களிடமும் விசாரணை நடத்தினர்.
இதில், பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு இலவச சீருடை வழங்கியபோது கையெழுத்து பெற்றதும், அதை கல்வி உதவித்தொகை பெற்றதற்கான கையெழுத்தாக மாற்றி மோசடி செய்ததும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், உதவி தொடக்க கல்வி அலுவலர், மாவட்ட தொடக்க கல்வி அலுவலரின் கவனத்துக்கு வராமலேயே தலைமை ஆசிரியர்கள் தன்னிச்சையாக கல்வி உதவித்தொகைக்கான விண்ணப்பத்தை மாவட்ட ஆதி திராவிடர் நலத்துறை அலுவலகத்தில் கொடுத்துள்ளது தெரியவந்தது.
மொத்தம் 2,784 குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை பெறப்பட்டுள்ளது. இதில், 1,016 குழந்தைகள் மட்டுமே கல்வி உதவித்தொகை பெற தகுதியானவர்கள். 1,728 குழந்தைகள் கல்வி உதவித்தொகை பெற தகுதியற்றவர்கள். ஆனால் அவர்கள் பெயரிலும் மோசடியாக போலி பட்டியல் தயார் செய்யப்பட்டு உதவித்தொகையை தலைமை ஆசிரியர்கள் பெற்றுள்ளது விசாரணையில் தெரியவந்தது.
இது தொடர்பான விரிவான விசாரணை அறிக்கை தொடக்கக்கல்வி இயக்குனர் மூலம், பள்ளி கல்வித்துறை செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கல்வி உதவித்தொகை மோசடியில் ஈடுபட்ட 66 அரசு துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், 11 அரசு உதவிபெறும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் என மொத்தம் 77 பேரை மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் அருள்மொழிதேவி சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 77 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பது, தமிழகம் முழுவதும் கல்வித்துறை வட்டாரத்திலும் ஆசிரியர்கள் மத்தியிலும், பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் குமரகுருபரன் கூறியதாவது: சுகாதாரம் குறைவான தொழில் செய்யும் பெற்றோர்களின் குழந்தைகளுக்கு கிடைக்க வேண்டிய கல்வி உதவித் தொகையை பள்ளி தலைமை ஆசிரியர்கள், புரோக்கர்கள், ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர்களுடன் சேர்ந்து மோசடி செய்துள்ளனர்.
இந்த மோசடி தொடர்பாக 77 தலைமை ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதில் 11 தலைமை ஆசிரியர்கள் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணி புரிந்து வருகிறார்கள். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் கூறினார்.
ட் கல்வி உதவித்தொகையாக மாணவர்களுக்கு ரூ.1850 வீதம் கிடைக்கிறது.
ட் 98 பள்ளிகளில் படிக்கும் எல்லா மாணவர்கள் பெயரிலும் போலி பட்டியல் தயாரானது.
ட் 81 லட்சம் மோசடியில் ஆசிரியர்
சரவணன் கைது; 2 பேருக்கு வலை.
கற்பழிக்க முயன்ற தந்தையை மகள் கொன்றதில் தவறில்லை : உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து
2012-08-04
ஈழத்தமிழர்களுக்காக நடத்தப்படும் டெசோ மாநாட்டில் சில சிறப்புத் தீர்மானங்கள்!- கனிமொழி
சனிக்கிழமை, 04 ஓகஸ்ட் 2012,
இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில், டெசோ மாநாட்டில் சிறப்பு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. இந்த மாநாடு நடைபெறாது என்று எதிர் தரப்பினர் எண்ணங்களை தகர்க்கும் வகையில் மாநாடு இடம்பெறும்.
வெளிநாட்டில் இருந்து மாநாட்டில் கலந்து கொள்ள புறப்பட்ட தலைவர்களை ஒரு சிலர் தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு தடுக்க முற்பட்டனர். அந்த முயற்சிகள் பயனளிக்கவில்லை.
ஆட்சியில் இருப்பவர் மாதக் கணக்கில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும்போது, இலங்கைத் தமிழர்கள் வாழ்வில் நிம்மதியைத் தேடித் தருவதற்காகவே இந்த மாநாடு நடைபெறுகிறது. திராவிட முன்னேற்ற கழகத்தின் கலை, இலக்கியப் பகுத்தறிவுப் பேரவையின் தலைவர் என்ற முறையில் மாநாட்டுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
இதேபோன்று, திமுக சட்டத்துறை செயலாளர் ஆர்.எஸ்.பாரதியும் வழக்குரைஞர்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வெளிநாட்டில் இருந்து மாநாட்டில் கலந்து கொள்ள புறப்பட்ட தலைவர்களை ஒரு சிலர் தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு தடுக்க முற்பட்டனர். அந்த முயற்சிகள் பயனளிக்கவில்லை.
ஆட்சியில் இருப்பவர் மாதக் கணக்கில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும்போது, இலங்கைத் தமிழர்கள் வாழ்வில் நிம்மதியைத் தேடித் தருவதற்காகவே இந்த மாநாடு நடைபெறுகிறது. திராவிட முன்னேற்ற கழகத்தின் கலை, இலக்கியப் பகுத்தறிவுப் பேரவையின் தலைவர் என்ற முறையில் மாநாட்டுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
இதேபோன்று, திமுக சட்டத்துறை செயலாளர் ஆர்.எஸ்.பாரதியும் வழக்குரைஞர்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
லஞ்சம் வாங்கும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் தொடர்பில் விசாரணை
லஞ்சம் வாங்கும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் தொடர்பில் விசாரணை
சனிக்கிழமை, 04 ஓகஸ்ட் 2012,
சம்பளத்திற்கு மேலதிமாக சொத்துக்களை குவித்து திடீர் செல்வந்தர்களாக மாறியுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்கள் பற்றி தகவல் வழங்குமாறு லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.
உபபொலிஸ் உத்தியோகத்தர்கள், பொலிஸ் பரிசோதகர்கள் மற்றும் ஏனைய பதவிகளை வகிக்கும் சில உத்தியோகத்தர்கள் இவ்வாறு திடீர் செல்வந்தர்களாக மாறியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
காணி, பேரூந்து, வர்த்தக நிலையங்கள், பல்வேறு வாகனங்கள், திரை அரங்குகள் போன்ற பல்வேறு சொத்துக்களை பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொள்வனவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சில உத்தியோகத்தர்கள் நெருங்கிய உறவினர்களின் பெயர்களில் சொத்துக்களை கொள்வனவு செய்துள்ளனர்.
சொத்துக்களை கொள்வனவு செய்வதற்கு எவ்வாறு வருமானம் ஈட்டப்பட்டது என்பது தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது
உபபொலிஸ் உத்தியோகத்தர்கள், பொலிஸ் பரிசோதகர்கள் மற்றும் ஏனைய பதவிகளை வகிக்கும் சில உத்தியோகத்தர்கள் இவ்வாறு திடீர் செல்வந்தர்களாக மாறியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
காணி, பேரூந்து, வர்த்தக நிலையங்கள், பல்வேறு வாகனங்கள், திரை அரங்குகள் போன்ற பல்வேறு சொத்துக்களை பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொள்வனவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சில உத்தியோகத்தர்கள் நெருங்கிய உறவினர்களின் பெயர்களில் சொத்துக்களை கொள்வனவு செய்துள்ளனர்.
சொத்துக்களை கொள்வனவு செய்வதற்கு எவ்வாறு வருமானம் ஈட்டப்பட்டது என்பது தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது
பிரான்சிற்கு செல்வதற்காக சென்ற இளம்பெண் கட்டுநாயக்க விமானநிலையத்தில் கடத்தல்
சனிக்கிழமை, 04 ஓகஸ்ட் 2012,
நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலையில் இடம்பெற்றுள்ள இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது:
சுன்னாகம் சூராவத்தையைச் சோ்ந்த இளம் பெண் ஒருவர் பிரான்ஸ் நாட்டில் இருந்து வந்து தமது தாய் தந்தையர் மற்றும் உறவினர்களுடன் விடுமுறையைக் கழித்து விட்டு மீண்டும் பிரான்ஸ் நாட்டிற்குச் செல்வதற்க்காக கட்டுநாயக்கா விமான நிலையத்திற்க்குச் சென்றுள்ளார்.
இந்த நிலையில் விமான நிலையத்தில் வைத்து வாகனத்தில் வந்த இனம் தெரியாதவர்கள் குறிப்பிட்ட இளம் பெண்ணை கடத்திச் சென்றதாக சுன்னாகம் காவல்துறை நிலையத்தில் உறவினர்கள் முறையிட்டுள்ளார்கள்.
குறிப்பிட்ட கடத்தல் சம்பவத்திற்கான காரணம் இதுவரையில் தெரியவரவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
சுன்னாகம் சூராவத்தையைச் சோ்ந்த இளம் பெண் ஒருவர் பிரான்ஸ் நாட்டில் இருந்து வந்து தமது தாய் தந்தையர் மற்றும் உறவினர்களுடன் விடுமுறையைக் கழித்து விட்டு மீண்டும் பிரான்ஸ் நாட்டிற்குச் செல்வதற்க்காக கட்டுநாயக்கா விமான நிலையத்திற்க்குச் சென்றுள்ளார்.
இந்த நிலையில் விமான நிலையத்தில் வைத்து வாகனத்தில் வந்த இனம் தெரியாதவர்கள் குறிப்பிட்ட இளம் பெண்ணை கடத்திச் சென்றதாக சுன்னாகம் காவல்துறை நிலையத்தில் உறவினர்கள் முறையிட்டுள்ளார்கள்.
குறிப்பிட்ட கடத்தல் சம்பவத்திற்கான காரணம் இதுவரையில் தெரியவரவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)