siruppiddy nilavarai.com

Footer Widget 1

சனி, 4 ஆகஸ்ட், 2012

ஈழத்தமிழர்களுக்காக நடத்தப்படும் டெசோ மாநாட்டில் சில சிறப்புத் தீர்மானங்கள்!- கனிமொழி

 
 சனிக்கிழமை, 04 ஓகஸ்ட் 2012,
டெசோ மாநாட்டில் சில சிறப்பு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில், டெசோ மாநாட்டில் சிறப்பு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. இந்த மாநாடு நடைபெறாது என்று எதிர் தரப்பினர் எண்ணங்களை தகர்க்கும் வகையில் மாநாடு இடம்பெறும்.
வெளிநாட்டில் இருந்து மாநாட்டில் கலந்து கொள்ள புறப்பட்ட தலைவர்களை ஒரு சிலர் தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு தடுக்க முற்பட்டனர். அந்த முயற்சிகள் பயனளிக்கவில்லை.
ஆட்சியில் இருப்பவர் மாதக் கணக்கில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும்போது, இலங்கைத் தமிழர்கள் வாழ்வில் நிம்மதியைத் தேடித் தருவதற்காகவே இந்த மாநாடு நடைபெறுகிறது. திராவிட முன்னேற்ற கழகத்தின் கலை, இலக்கியப் பகுத்தறிவுப் பேரவையின் தலைவர் என்ற முறையில் மாநாட்டுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
இதேபோன்று, திமுக சட்டத்துறை செயலாளர் ஆர்.எஸ்.பாரதியும் வழக்குரைஞர்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

0 comments:

கருத்துரையிடுக