04.08.2012. |
மைனா பட வெற்றிக்கு பின்பு இயக்குனர் பிரபு சாலமன் இயக்கியுள்ள படம் கும்கி. |
இப்படத்தில் நாயகனாக பிரபுவின் மகன் விக்ரம் பிரபுவும், நாயகியாக அறிமுக நடிகை
லட்சுமி மேனனும் நடித்துள்ளனர். மேலும் தம்பி ராமய்யா மற்றும் பலர் நடித்துள்ள
இப்படத்தை திருப்பதி பிரதர்ஸ் பட நிறுவனம் சார்பில் இயக்குனர் லிங்குசாமி
தயாரித்துள்ளார். இந்த கும்கி படத்தை சிறந்த முறையில் உருவாக்க இயக்குனர் பிரபு சாலமனுக்கு லிங்குசாமி சுதந்திரமளித்துள்ளார். இதுகுறித்து இயக்குனர் பிரபு சாலமன் கூறுகையில், கும்கி படத்தை தொடங்கி, எடுத்து முடிக்க ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலானது. எதனால் தாமதம் என்று இதுநாள் வரைக்கும் கேட்காத தயாரிப்பாளருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். படத்தயாரிப்பாளர் கொடுத்த சுதந்திரத்தால் தான் படத்தின் ஒவ்வொரு காட்சியையும் சிறந்த முறையில் எடுக்க முடிந்தது. அருவியில் இருந்து தண்ணீர் கொட்டுவதை படமாக்க பல மாதங்களாக காத்திருந்தோம். வருடத்தில் சில நாட்கள் மட்டும் அருவில் தண்ணீர் அதிக அளவில் விழும் என்றும் அந்த நாட்களில் படத்தின் காட்சிகளை படமாக்கினோம் எனவும் அவர் கூறியுள்ளார் |
சனி, 4 ஆகஸ்ட், 2012
அருவி தண்ணீருக்காக காத்திருந்த கும்கி
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக