நெல்லை:தனியார் சட்டக்கல்லூரிக்கு அனுமதி கூடாது. தகுதி தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் சட்டக்கல்லூரி மாணவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். மதுரை, கோவையில் சட்டக்கல்லூரி மாணவர்கள் ஊர்வலம், உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். கோவை, மதுரையில் உள்ளிருப்பு போராடம் நடத்திய 54 மாணவர்களை நேற்று முன்தினம் அதிகாலை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர்களை விடுவிக்கக்கோரி நெல்லை சட்டக்கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். தொடர்ந்து கல்லூரி வளாகத்துக்குள் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து கல்லூரி முதல்வர் ஆசீர் தர்மராஜ் அளித்த புகாரின் அடிப்படையில் நேற்று அதிகாலை 3 மணியளவில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 36 மணவர்களை போலீசார் கைது செய்து சிறிது நேரத்தில் விடுதலை செய்தனர். அதன்பிறகு போலீசாரை கண்டித்து சட்டக் கல்லூரியை மாணவர்கள் முற்றுகையிட்டனர். மாநகர போலீஸ் துணை கமிஷனர் மணிவண்ணன், கல்லூரி முதல்வர் ஆசீர் தர்மராஜ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
சனி, 4 ஆகஸ்ட், 2012
சட்டக்கல்லூரி மாணவர்கள் 36 பேர் கைது

இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 comments:
கருத்துரையிடுக