siruppiddy nilavarai.com

Footer Widget 1

சனி, 4 ஆகஸ்ட், 2012

பிரான்சிற்கு செல்வதற்காக சென்ற இளம்பெண் கட்டுநாயக்க விமானநிலையத்தில் கடத்தல்

 
 சனிக்கிழமை, 04 ஓகஸ்ட் 2012,
பிரான்சுக்கு செல்வதற்காக சென்ற இளம் பெண் ஒருவர் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து இனம் தெரியாதவர்களினால் வாகனத்தில் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக யாழ். சுன்னாகம் காவல்துறை நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலையில் இடம்பெற்றுள்ள இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது:
சுன்னாகம் சூராவத்தையைச் சோ்ந்த இளம் பெண் ஒருவர் பிரான்ஸ் நாட்டில் இருந்து வந்து தமது தாய் தந்தையர் மற்றும் உறவினர்களுடன் விடுமுறையைக் கழித்து விட்டு மீண்டும் பிரான்ஸ் நாட்டிற்குச் செல்வதற்க்காக கட்டுநாயக்கா விமான நிலையத்திற்க்குச் சென்றுள்ளார்.
இந்த நிலையில் விமான நிலையத்தில் வைத்து வாகனத்தில் வந்த இனம் தெரியாதவர்கள் குறிப்பிட்ட இளம் பெண்ணை கடத்திச் சென்றதாக சுன்னாகம் காவல்துறை நிலையத்தில் உறவினர்கள் முறையிட்டுள்ளார்கள்.
குறிப்பிட்ட கடத்தல் சம்பவத்திற்கான காரணம் இதுவரையில் தெரியவரவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

0 comments:

கருத்துரையிடுக