siruppiddy nilavarai.com

Footer Widget 1

சனி, 4 ஆகஸ்ட், 2012

மாணவர்கள் பெயரில் கல்வி உதவித்தொகை மோசடி




 



2012-08-04
நாமக்கல் : மாணவர்கள் பெயரில் போலி பட்டியல் தயாரித்து, ரூ.81 லட்சம் மோசடியில் ஈடுபட்ட 77 பள்ளி தலைமை ஆசிரியர்கள் நேற்று அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 10,ம் வகுப்பு வரை படிக்கும் சுகாதாரம் குறைவான தொழில் செய்யும் பெற்றோர்களின் பிள்ளைகளுக்கு ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. ஒருவருக்கு ஆண்டுக்கு ரூ.1850 வீதம் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இதில் நாமக்கல் மாவட்டத்தில் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் கடந்த 2010, 2011,ம் ஆண்டுகளில் இந்த கல்வி உதவித்தொகையை மாணவ, மாணவிகளுக்கு வழங்காமல் ரூ.81 லட்சம் மோசடி நடந்திருப்பது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.

மாவட்டத்தில் உள்ள 1002 பள்ளிகளில் 98 பள்ளிகளில் படிக்கும் அனைத்து மாணவ, மாணவிகளையும் சுகாதாரம் குறைவான தொழில் செய்யும் பெற்றோரின் குழந்தைகள் என போலி பட்டியல் தயார் செய்து, மாவட்ட ஆதிதிராவிட நலத்துறைக்கு தலைமை ஆசிரியர்கள் விண்ணப்பித்துள்ளனர். இது குறித்து விசாரணை நடந்ததும், மோசடியில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டதை அடுத்து முதல்கட்டமாக நாமக்கல் மாவட்டம் காரைக்குறிச்சிபுதூர் பள்ளி ஆசிரியர் சரவணன் கைது செய்யப்பட்டார்.

மோகனூர் ஆர்.சி. பள்ளி தலைமை ஆசிரியர் சார்லஸ், கபிலர்மலை ஒன்றியம் பள்ளபாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் பூபதி ஆகிய 2 பேரையும் போலீசார் தேடி வருகிறார்கள். இவர்கள் மூன்று பேரையும் ஏற்கனவே சஸ்பெண்ட் செய்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் உத்தரவிட்டிருந்தார். சென்னையில் இருந்து வந்த தொடக்க கல்வி துறையை சேர்ந்த ஆடிட்டிங் குழுவினர், ஒரு வாரம் நாமக்கல்லில் முகாமிட்டு இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். உதவித்தொகை பெற்ற பள்ளிகளை சேர்ந்த தலைமை ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்களிடமும் விசாரணை நடத்தினர்.

இதில், பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு இலவச சீருடை வழங்கியபோது கையெழுத்து பெற்றதும், அதை கல்வி உதவித்தொகை பெற்றதற்கான கையெழுத்தாக மாற்றி மோசடி செய்ததும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், உதவி தொடக்க கல்வி அலுவலர், மாவட்ட தொடக்க கல்வி அலுவலரின் கவனத்துக்கு வராமலேயே தலைமை ஆசிரியர்கள் தன்னிச்சையாக கல்வி உதவித்தொகைக்கான விண்ணப்பத்தை மாவட்ட ஆதி திராவிடர் நலத்துறை அலுவலகத்தில் கொடுத்துள்ளது தெரியவந்தது.

மொத்தம் 2,784 குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை பெறப்பட்டுள்ளது. இதில், 1,016 குழந்தைகள் மட்டுமே கல்வி உதவித்தொகை பெற தகுதியானவர்கள். 1,728 குழந்தைகள் கல்வி உதவித்தொகை பெற தகுதியற்றவர்கள். ஆனால் அவர்கள் பெயரிலும் மோசடியாக போலி பட்டியல் தயார் செய்யப்பட்டு உதவித்தொகையை தலைமை ஆசிரியர்கள் பெற்றுள்ளது விசாரணையில் தெரியவந்தது.

இது தொடர்பான விரிவான விசாரணை அறிக்கை தொடக்கக்கல்வி இயக்குனர் மூலம், பள்ளி கல்வித்துறை செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கல்வி உதவித்தொகை மோசடியில் ஈடுபட்ட 66 அரசு துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், 11 அரசு உதவிபெறும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் என மொத்தம் 77 பேரை மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் அருள்மொழிதேவி சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் 77 பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பது, தமிழகம் முழுவதும் கல்வித்துறை வட்டாரத்திலும் ஆசிரியர்கள் மத்தியிலும், பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் குமரகுருபரன் கூறியதாவது: சுகாதாரம் குறைவான தொழில் செய்யும் பெற்றோர்களின் குழந்தைகளுக்கு கிடைக்க வேண்டிய கல்வி உதவித் தொகையை பள்ளி தலைமை ஆசிரியர்கள், புரோக்கர்கள், ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர்களுடன் சேர்ந்து மோசடி செய்துள்ளனர்.

இந்த மோசடி தொடர்பாக 77 தலைமை ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதில் 11 தலைமை ஆசிரியர்கள் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணி புரிந்து வருகிறார்கள். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் கூறினார்.

ட் கல்வி உதவித்தொகையாக மாணவர்களுக்கு ரூ.1850 வீதம் கிடைக்கிறது.
ட் 98 பள்ளிகளில் படிக்கும் எல்லா மாணவர்கள் பெயரிலும் போலி பட்டியல் தயாரானது.
ட் 81 லட்சம் மோசடியில் ஆசிரியர்
சரவணன் கைது; 2 பேருக்கு வலை.

0 comments:

கருத்துரையிடுக