siruppiddy nilavarai.com

Footer Widget 1

சனி, 4 ஆகஸ்ட், 2012

நண்பர்களுடன் நீராடச் சென்ற சிறுவன் பலி

 _
04.08.2012.கண்டி கெலிஓயா, கலுகமுவ என்ற இடத்தில் மஹாவலி கங்கையில் நண்பர்களுடன் நேற்று மாலை நீராடச் சென்ற சிறுவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

கம்பளை சாஹிரா கல்லூரியில் தரம் 9 இல் கல்வி பயின்று வந்த கெலிஓயாவத்தையைச் சேர்ந்த எம்.ஜே. இம்தாத் (14 வயது) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்தை தொடர்ந்து பிரதேசவாசிகள் மேற்கொண்ட தேடுதலைத் தொடர்ந்து ஒரு மணித்தியாலத்தின் பின்பு சிறுவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணைகளை பேராதனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

0 comments:

கருத்துரையிடுக