siruppiddy nilavarai.com

Footer Widget 1

சனி, 4 ஆகஸ்ட், 2012

சிறைக்குள் பணம் கடத்த முயன்ற 2 பெண்கள் சிக்கினர்

 


 




2012-08-04
கோவை: கோவை புலியகுளத்தை சேர்ந்தவர் மணிகண்டன் என்ற குண்டு மணிகண்டன். இவர் ஒரு வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரது மனைவி புவனேஸ்வரி நேற்று காலை கணவரை பார்க்க சிறைக்கு வந்தார். சிறை வாசலில் பாதுகாவலர்கள் புவனேஸ்வரியை சோதனை செய்தனர். அப்போது அவர் அணிந்திருந்த சேலை நுனியில் ரூ.1,400 ஐ மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அதே போல் திருச்சி ராம்ஜி நகரை சேர்ந்தவர் உமாநாத். இவருயை மைத்துனர் மணி. இருவரும் இதே சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களை பார்க்க நேற்று உமாநாத்தின் மனைவி ஹேமா வந்தார். சிறைக்காவலர்கள் நடத்திய சோதனையில் அவர் வைத்திருந்த மூங்கில் பை கைப்பிடியில் குச்சிகளுக்கு இடையே ரூ.2,000த்தை மறைத்து கடத்த முயன்றது தெரியவந்தது. பணம் கடத்த முயன்று சிக்கிய இருவரையும் கையும், களவுமாக போலீசார் பிடித்து எச்சரித்து அனுப்பினர்

0 comments:

கருத்துரையிடுக