siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

சனி, 6 அக்டோபர், 2012

தடுமாறும் இளமை! தடம் மாறும் வாழ்க்கை!!


Saturday06 October 2012.By.Rajah.எந்தமை’யைவைத்துமயக்குகிறார்களோ தெரியவில்லை, டீன்-ஏஜ் என்னும் விடலைப் பருவத்தில் ஆணோ-பெண்ணோ சீக்கிரம் காதல் வயப்படுகிறார்கள். கண்ணடிபட்டு காத லாகும் இந்த டீன்-ஏஜ் காதலில் பெரும்பாலானவை கல்லறையில் முடிவது தான் சோகம்..

`காதலுக்கு இனம், மதம், மொழி பேதமில்லை’ என்று வியாக்கியானம் பேசும் ஜோடிகள், எதிர்ப்புகள் வலுக்கும் போது அதனை சந்திக்க திராணியில்லாமல் மனம் ஒடிந்து போவ தேனோ…? படிக்கும் வயதில் காதல் தேவைதானா?- என்று எத்தனையோ கேள்விகள், பத்திரிகைகளில் காதல் ஜோடி தற்கொலையை படிக்கும் போது நினைவலைகளில் ஓடிக் கொண்டிருக்கும்.


`காதல்’ எப்போது பிரச்சினையாக மாறி டீன்-ஏஜ் இளைஞர்களை தற்கொலைக்கு தூண்டு கிறது என்பதை இனி பார்ப்போம்.


`தேசிய குற்ற ஆவண காப்பகம்’ என்கிற அமைப்பு கவலை தரும் செய்தியை வெளி யிட்டுள்ளது. “ஆண்டுதோறும் டீன்-ஏஜ் காதல் ஜோடிகளின் தற்கொலைகள் அதிகரித்து வருகிறது. 2006-07-ம் ஆண்டில் மட்டும் 5857 பேர் தற்கொலையை கச்சிதமாக நிறை வேற்றி உள்ளனர்” என்கிற வேதனை தரும் செய்தியை அந்த அமைப்பு புள்ளி விவரத் துடன் காட்டுகிறது.

காதல் தோல்வியுடன், பரீட்சை தோல்வியும் மன அழுத்தத்தை ஏற்படுத்தி தற்கொலைக்கு உசுப்பேத்துகிறது என்கிற விவரமும் தெரிய வருகிறது.

பக்குவப்படாத வயதில் தோன்றும் காதல் எண்ணங்கள் எது நல்லது? எது கெட்டது? என்பதை சிந்திக்க விடுவதில்லை. நாளடைவில் பெற்றோருக்கு விஷயம் தெரிந்து வில் லங்கம் ஆகும் போது பெற்றோரையே உதறித்தள்ளிவிடும் எண்ணம் வந்துவிடுகிறது. பிரச் சினை இன்னும் வலுத்தால் தற்கொலை முடிவை நோக்கி இறுதிப் பயணம் மேற் கொள்கிறார்கள்.


“மனநெருக்கடி அதிகரிப்பு, உறக்கம் இல்லாமல் தவித்தல், தனிமையில் உட்கார்ந்து சம் பந்தம் இல்லாமல் யோசித்தல், மன அழுத்தத்துக்கு உள்ளாகுதல் உள்ளிட்ட காரணங்கள் டீன்-ஏஜ் காதலர்களை தற்கொலைக்கு அழைத்துச் செல்கிறது” என்கிறது ஒரு ஆய்வுத் தகவல்.

வாழ வேண்டிய பொற்காலம் காத்திருக்க, அதனை மறந்து மரணம் ஒன்றே தீர்வு என்கிற ரீதியில் முதுகெலும்பு இல்லாமல் சிந்திக்க காரணம் யார்? என்று ஆராய்ந்தால் `பெற் றோர்கள்’தான் முதலிடம் பிடிக்கின்றனர்.

இளம் பருவத்தில் குழந்தைகளின் சிந்தனை, செயல்பாடுகளில் வரும் மாற்றங்களை அவர் கள் கண்டும் காணாததுபோல் விட்டுவிட்டால் பிரச்சினைக்கு தூபம் போடுவது போல் ஆகிவிடுகிறது. ஒருவேளை மகன்-மகளிடம் விசாரித்து அவர்கள் காதலிப்பதை ஒப்புக் கொண்டால் தாம்தூம் என்று விண்ணுக்கும் மண்ணுக்கும் குதித்து அவர்களை அடித்து உதைக்கிறார்கள். ஆனாலும் அடிபட்டவர்கள் தங்கள் காதலுக்கு முற்றுப்புள்ளி வைப்பது இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

பிள்ளைகள் காதலிப்பது தெரிந் தால் பெற்றோரின் நடவடிக்கை எப்படி இருக்க வேண்டும்?

1. மகனோ-மகளோ காதலிப்பது தெரிந்தால் வீட்டில் அவர்களை மட்டும் ஒதுக்கி வைத்துவிட்டு மிகப்பெரிய பிரளயத்தை ஏற் படுத்திவிட வேண்டாம்.


2. டீன்-ஏஜ் மாணவப் பரு வத்தில் வரும் காதலால் படிப்பு- எதிர்கால லட்சியத்தில் விழும் கேள்விக் குறிகளை பெற்றோர் பக்குவமாக எடுத்துச் சொல்ல வேண்டும். பெரியோர் புத்திமதி சொல்ல வேண்டும் என்கிற காரணத்துக்காக அக்கம்பக்கத்து வீடுகள், தூரத் தில் வசிக்கும் உறவினர் வீடுகளுக்கு தகவல் அனுப்பி, மகனின் - மகளின் காதல் ரக சியத்தை பரப்பிவிட வேண்டாம். இது அவர்களை எதிர்மறையாக சிந்தனை செய்ய வைத்து விடும்.


3. புத்திமதிகளுக்கு அவர்கள் செவிசாய்க்கவில்லை எனில் சிறந்த மனோதத்துவ நிபு ணரிடம் அவர்களை அழைத்துச் செல்லலாம்.


4. அவர்களின் நெருங்கிய நண்பர், பிடித்த உறவினர் மூலம் நல்ல விஷயங்களை எடுத் துக் கூறி புரிய வைக்கலாம்.


5. காதல் வாழ்க்கையால் எதிர்காலத்தை இழந்து தவிப்பவர்களைப் பற்றி எடுத்துக்கூறி நடைமுறை வாழ்க்கை என்ன என்பதை புரிய வைக்கலாம்.


6. பெற்றோரே நல்ல விஷயங்களைக் கூறி சிந்தனையைக் கிளறிவிட்டு பிள்ளைகளை இறுதி முடிவு எடுக்க வைக்கலாம்.


7. சில வீடுகளில் மூத்த சகோதர-சகோதரிகள் மணமாகாத நிலையில் இருப்பார்கள். எனவே குடும்பத்தில் அவர்களுக்கு உண்டான பொறுப்பு, கடமையைப் பற்றி எடுத்துக் கூறலாம்.


8. எக்காரணம் கொண்டும் காதல் வயப்பட்ட தங்கள் குழந்தையை தனிமைப்படுத்தவோ, சந்தேக கண்ணோட்டத்திலோ பார்க்கக் கூடாது. வழக்கமான அணுகுமுறையில் எவ்வித மாற்றமும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் வீட்டில் தான் தனி மைப்படுத்தவில்லை என்கிற நம்பிக்கை அவர்களிடம் தெளிவை ஏற்படுத்திவிடும்.


9. மகளோ-மகனோ காதலிப்பது தெரிந்துவிட்டால் கண்கொத்திப் பாம்பாக பின்தொடர்ந்து நிழல்போல் கண்காணிக்க கூடாது.


10. அவர்கள் விரும்பும் இடங்கள், நிகழ்ச்சிகளுக்கு அழைத்துச் சென்று உற்சாகப்படுத்தலாம்.


*****************


இளைஞர்களுக்கு ஏற்ற `5′


1. இளம் பருவத்தில் வரும் காதல் `கடவுள் கொடுத்த பரிசு’ என்றெல்லாம் கற்பனை செய்து கொள்ள வேண்டாம். டீன்-ஏஜ் வயதில் வரும் வழக்கமான உணர்வுதான் காதல். வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க ஏற்ற வயதோ, பக்குவமோ உங்களுக்கு வரவில்லை என்பதை உணர்ந்து கொண்டாலே போதும்.


2. திருமணம் வாழ்க்கை முழுவதும் தொடரும் பந்தம். எனவே காதல் உள்பட எந்த விஷ யத்திலும் அவசரம் காட்டக் கூடாது. இதைவிட சிறந்த வாழ்க்கை எதிர்காலத்தில் அமை யும் என்று உறுதியாக எண்ணும் மனநிலையை வளர்த்துக் கொள்வது முக்கியம்.


3. இப்போதைக்கு உங்களுக்கு உள்ள கடமையை புரிந்து கொள்ளுங்கள். அதை மறந்து காதலில் தீவிரம் காட்டினால் உங்களது திறமை குன்றிவிட வாய்ப்பு உள்ளது.

4. எந்தவொரு பிரச்சினைக்கும் தற்கொலை தீர்வாகாது, அது பலகீனமானது என்பதை உணர்ந்து கொள்வது அவசியம்.

5. உங்கள் காதலால் குடும்பத்தில் உள்ள மற்றவர்களும் சில பிரச்சினைக்கு உள்ளாகும் வாய்ப்பு உள்ளது. எனவே உங்களால் மற்றவர்களுக்கு எந்த பிரச்சினையும் வரக்கூடாது என்பதில்உறுதியாக இருங்கள்.

ரூ.100 கோடி செலவில் மெகா தாஜ்மஹால் துபாயில் தயாராகிறாது

         
 


Saturday 06 October2012 By.Rajah.360ஆண்டுகளுக்கு முன்பு பேரரசர் மொகாலய மன்னர் ஷாஜஹான், அவரது மனைவி மும்தாஜ் நினைவாக கல்லறை காதல் ஓவியமான தாஜ்மஹாலை கட்டினான். இதை கட்ட 22 வருடங்கள் ஆனது. காதலர்களின் நினைவுச் சின்னமாக விளங்கும் இந்த உலகப் புகழ்பெற்ற வெள்ளை மாளிகை 'தாஜ்மஹால்' கட்டிடத்தைப் போல் நான்கு மடங்கு பெரிய தாஜ் அரேபியா என்ற ஒரு மாதிரி தாஜ்மஹாலை கட்ட துபாய் கட்டுமானக் கம்பெனி முடிவு செய்துள்ளது.
அதற்குரிய வரைபடங்கள் வரையும் வேலைகளிலும் அவர்கள் இறங்கியுள்ளனர். துபாய் நாட்டின் எமிரேட்ஸ் சாலையில் உள்ள 4 கோடியே 10 லட்சம் சதுர அடிகொண்ட பால்கன் அதிசய நகரத்தின் மையப்பகுதியில் அது அமையவுள்ளது.
இரண்டு வருடங்களில் கட்டி முடிக்க முடிவு செய்துள்ள இந்த தாஜ் அரேபியா கட்டிடத்திற்கு 100 கோடி டாலர் செலவிட திட்டமிட்டிருக்கிறார்கள்.
தாஜ் அரேபியா என்ற கட்டிடம் காதல் மற்றும் காதல் லீலைகளின் நினைவு அடையாளமாக விளங்கும். மேலும் உலகின் மிகப்பெரிய கல்யாண மண்டபமும் அதில் இடம்பெறும். 7 கட்டிடங்களை எல்லைகளாக கொண்டு கட்டப்படவுள்ள இந்த தாஜ் அரேபியாவில், சேவை ஆட்களுடன் கூடிய 200 குடியிருப்புகளும், 300 அறைகளுடன் கூடிய ஐந்து நட்சத்திர ஓட்டலும் இருக்கும்.
திருமணம் என்றாலே கொண்டாட்டம் தான். அதை கொண்டாடுவதற்கு இந்தோனேசிய பாலிதீவு மற்றும் பல அழகிய இடங்களுக்கு மக்கள் செல்கிறார்கள். ஆனால் இனி அவர்கள் துபாயின் தாஜ் அரேபியா என்ற இந்த கட்டிடத்திற்குதான் வருவார்கள் என இந்த மெகா திட்டக் கம்பெனியின் சேர்மன் அருண் மெஹ்ரா கூறியுள்ளார்.
இன்றைய நவீன உலகில் விவாகரத்துகள் அதிகரித்துவரும் நிலையில் முன்பு போல் காதல் மற்றும் உணர்ச்சிகளை உணரவைத்து திருமணப் பந்தத்தின் அவசியத்தை இது ஞாபகப்படுத்தும். துபாயின் இந்த பால்கன் அதிசய நகரமானது, உலக அதிசயங்களாக விளங்கும் பிரமிடுகள், தொங்கும் தோட்டம், ஈபிள் டவர், தாஜ்மஹால், சீனப் பெருஞ்சுவர் மற்றும் பைசா நகரச் சாய் கோபுரம் ஆகியவற்றை உள்ளடக்கி நாட்டின் பாரம்பரிய சின்னமாக விளங்கும் என்று கூறப்படுகிறது

டொரண்டோ: நவம்பர் 14ஆம் தேதி பிளாஸ்டிக் பைகளுக்கு



Saturday 06 October 2012.By.Rajah.தடைவிதிப்பதுகுறித்துபொதுமக்களுடன் கலந்தாய்வு. டொரண்டோவில் வரும் 2013ஆம் ஆண்டு ஜனவரி முதல் பிளாஸ்டிக் பைகளுக்கு தடைவிதிக்கும் மசோதா ஏற்கனவே நிறைவேறியுள்ளது. இந்த தடை குறித்து விரிவாக பொதுமக்களுடன் கலந்தாய்வு செய்ய நவம்பர் 14ஆம் தேதி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் பிளாஸ்டிக் பைகளால் ஏற்படும் தீமைகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு கிடைக்கச்செய்யப்படும் என பிளாஸ்டிக் பைகள் எதிர்ப்பாளர்கள் கருத்து தெரிவித்தனர்.
ஆனால் பிளாஸ்டிக் பைகள் உற்பத்தியாளர்களும், வியாபாரிகளும் இந்த தடை விதிப்பை மறுபரிசீலனை செய்யவேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக நீதிமன்றத்திற்கு செல்லவும் அவர்கள் முறைப்படி ஏற்பாடு செய்துள்ளனர். நீதிமன்றம் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி, தங்களுக்கு நல்லதொரு நீதி கிடைக்க வழிவகுத்திடும் என வியாரிகள் நம்புவதாக டொரண்டோ கடைவியாரிகள் சங்க உறுப்பினர் ஒருவர் நமது செய்தியாளரிடம் கூறினார்.

பிரதமரின் கையெழுத்தை போலியாக போட்ட எழுத்தாளரை


Saturday 06 October2012..By.Rajah,கைது செய்தது சிபிஐ. தான் எழுதிய நூலை வாங்கிக்கொள்ளுமாறுவலியுறுத்தி, பிரதமரின்கையெழுத்தைப் போலியாக இட்டு பரிந்துரைக் கடிதத்தை மத்திய வெளியுறவுத் துறைஅமைச்சகத்துக்குஅனுப்பிய எழுத்தாளரைசிபிஐஅதிகாரிகள்கைதுசெய்தனர்.
"இந்தியாவின் கலாசார வரலாறு மற்றும் சுற்றுலா' என்ற நூலின் ஆசிரியர் ரமேஷ் நிர்மல். இவரது நூலின் 25 பிரதிகளை (மொத்த மதிப்பு ரூ.25 லட்சம்) வாங்கிக்கொள்ளுமாறு அறிவுறுத்தும் பிரதமரின் பரிந்துரைக் கடிதத்தை பேக்ஸ் மூலம் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்கு கடந்த 2009-ம் ஆண்டு அனுப்பினார்.
அக்கடிதத்தில் பிரதமரின் கையெழுத்து போலியாக இடப்பட்டுள்ளது என்பதைக் கண்டறிந்த பிரதமர் அலுவலகம், சிபிஐயிடம் புகார் அளித்தது. கடந்த ஜூன் மாதம் ரமேஷ் நிர்மல் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
அந்தக் கடிதம் போலியானது என்றும், அக்கடிதம் ரமேஷ் நிர்மலின் மும்பையில் உள்ள அலுவலகத்திலிருந்துதான் அனுப்பப்பட்டது என்றும் சிபிஐ அதிகாரிகள் இப்போது உறுதிப்படுத்தியுள்ளனர். இதைத் தொடர்ந்து ரமேஷ் நிர்மல் கைது செய்யப்பட்டார். அவரது அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில், இதே போன்று பல பிரமுகர்களின் கையெழுத்தை போலியாக இட்டு கடிதம் தயாரித்துள்ளது தெரியவந்தது.
இவர் மீது உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வர் மாயாவதி, காங்கிரûஸச் சேர்ந்த மோதிலால் வோரா ஆகியோரின் போலி கையெழுத்துகளை இட்டு பரிந்துரைக் கடிதங்களை தயாரித்ததாக சிபிசிஐடி போலீஸாரும் வழக்குப் பதிந்துள்ளனர்.
அதோடு, இவர் 2010-ம் ஆண்டு முன்னணி பத்திரிகை ஒன்றின் செய்தியாளர் என்ற பெயரில், உருக்கு அமைச்சகத்தில் அமைக்கப்பட்ட ஹிந்தி மொழி ஆலோசனைக் குழுவிலும் இடம்பிடித்திருந்தார் எனத் தெரியவந்துள்ளது

பி.பி.சீ சர்வதேச ஊடகத்தினால் சுமத்தப்பட்டு வரும் போர்க்


Saturday 06 October2012.By.Rajah.குற்றச்சாட்டுக்கள்!மறுக்கும்இராணுவம்!பி.பி.சீ(BBC) சர்வதேச ஊடகத்தின் முன்னாள் ஊடகவியலாளரினால் சுமத்தப்பட்டு வரும் போர்க் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என இராணுவத்தினர் அறிவித்துள்ளனர்.
வன்னிப் போரின் போது படையினர் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக பி.பி.சீ ஊடகத்தின் முன்னாள் ஊடகவியலாளர் பிரன்சஸ் ஹரிசன் குற்றம் சுமத்தியுள்ளார். எனினும், இந்தக் குற்றச்சாட்டுக்களை முற்று முழுதாக நிராகரிப்பதாக இராணுவத்தினர் அறிவித்துள்ளனர்.
வன்னி வைத்தியசாலையில் கடயைமாற்றிய நிரோஸ் என்ற வைத்தியரே தமக்கு தகவல்களை வழங்கியதாக குறித்த ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார்.
எனினும், போர் இடம்பெற்ற காலத்தில் வன்னிப் பகுதியில் இவ்வாறான பெயரைக் கொண்ட எந்தவொரு வைத்தியரும் கடமையாற்றவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரன்சஸ் ஹரிசன் இலங்கையை விட்டு செல்வதற்கு முன்னதாக நட்சத்திர ஹோட்டலில் விருந்துபசாரம் வழங்கியதாகவும், அதற்கு புலித்தேவனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாகவும் இராணுவப் புலனாய்வுத் தகவல்கள் தெரிவிப்பதாக திவயின செய்தி வெளியிட்டுள்ளது

புதுடில்லியில் மகளையும் காதலனையும்


Saturday 06October2012.By.Rajah.மின்சாரம் பாய்ச்சிகொடூரமாக கொலை செய்த பெற்றோர் கைது..மகள் மற்றும் அவரது காதலனை கௌரவக் கொலை செய்த 5 பேருக்குதில்லிநீதிமன்றம்மரணதண்டனை விதித்துள்ளது.
புது தில்லி அடுத்த கோகுல்புரி பகுதியைச் சேர்ந்த டாக்ஸி டிரைவர் யோகேஷ்(20), அதே பகுதியைச் சேர்ந்த ஆஷா(19), இருவரும் காதலித்து வந்தனர். கடந்த 2010ஆம் ஆண்டு திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து, இது தொடர்பாக ஆஷாவின் வீட்டில் யோகேஷ் பேசினார்.
ஆனால், ஆஷாவின் பெற்றோர் சூரஜ், மாயா மற்றும் உறவினர் ஓம்பிரகாஷ் அவரது மனைவி குஷ்பு, இவர்களின் மகன் சஞ்சீவ் ஆகியோர், இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். ஆஷா, யோகேஷ் இருவரையும் அடித்து, உதைத்துக் கொடுமைப்படுத்தி, மின்சாரம் பாய்ச்சிக் கொலை செய்தனர்.
இவ்வழக்கு தில்லி செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடந்தது. வெள்ளிக்கிழமை தீர்ப்பை வெளியிட்ட கூடுதல் செஷன்ஸ் நீதிபதி ரமேஷ் குமார் சிங்கல், குற்றம்சாட்டப்பட்ட 5 பேருக்கும் மரண தண்டனை விதித்து உத்தரவிட்டார்

சண்டே லீடர் பிரட்ரிக்கா ஜேன்ஸின் புகலிடக்


Saturday 06 October2012.By.Rajah.கோரிக்கையைஅவுஸ்திரேலியஅரசாங்கம் நிராகரித்துள்ளது! சண்டே லீடர் செய்தித்தாளின் ஆசிரியரான பிரட்ரிக்கா ஜேன்ஸின் புகலிடக் கோரிக்கையை அவுஸ்திரேலிய அரசாங்கம் நிராகரித்துள்ளது என அவுஸ்திரேலிய செய்தித்தாள் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது
இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் சகோதரரான பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவினால் அச்சுறுத்தப்பட்டதாக கூறப்படும் பிரட்ரிக்கா ஜேன்ஸ், அண்மையில் தாம் சார்ந்த செய்தி நிறுவனத்தில் இருந்தும் விலக்கப்பட்டார்.
அரசாங்கத்துக்கு எதிரான கட்டுரை ஒன்றை பிரசுரிப்பதற்கு முன்னர், அதனை நிறுவன உரிமையாளருக்கு காண்பிக்காமை காரணமாகவே அவர் நிறுவனத்தில் இருந்து விலக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்தநிலையில் தம்மீது விரைவில் இலங்கையில் சட்ட நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டு சிறையில் அடைக்கும் அச்சம் நிலவுவதாக தெரிவித்த ஜேன்ஸ், இலங்கையில் உள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரகத்தின் ஊடாக அவுஸ்திரேலியாவில் குடியேறுவதற்கான கோரிக்கையை விடுத்திருந்தார்.
எனினும் அதனை அவுஸ்திரேலிய அரசாங்கம் நிராகரித்துள்ளது.
இந்தப் புகலிடக் கோரிக்கைக்கு உரிய காரணங்கள் இல்லை என்று அவுஸ்திரேலிய அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது

அமெரிக்க லைப்ரரிக்குள் செக்ஸ் பொம்மைகளுடன்



Saturday 06 October2012 By.Rajah.ஆபாச ஆட்டம் போட்ட மாடல் அழகி.நியூயார்க்கைச் சேர்ந்த கார்னல் சட்டப் பல்கலைக்கழகத்தில் உள்ள லைப்ரரிக்குள் புகுந்த ஒரு மாடல் அழகி, அங்கு ஆபாச அசைவுகளில் ஈடுபட்டு அதை தனது செல்போனில் பதிவு செய்து வெளியிட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்தப் பெண் மாடல் அழகி கேமரூன் நைட் என்று கூறப்படுகிறது. இவர் ஆபாசப் படங்கள் பலவற்றில் நடித்திருப்பவர் ஆவார். பல்கலைக்கழக லைப்ரரிக்கு வந்துள்ள அவர் அங்குள்ள கார்பென்டர் ஹால் என்ற அரங்குக்குப் போயுள்ளார். பி்ன்னர் தான் கையோடு கொண்டு வந்திருந்த செக்ஸ் பொம்மைகளை எடுத்து அதை வைத்து பல்வேறு ஆபாச செயல்களில் ஈடுபட்டார்.இதை தனது செல்போனில் பதிவு செய்தார்.
Cornell law school students identified Miss Knight's stage as being Carpenter Hall, their engineering library





இந்தக் காட்சிகள் மொத்தம் 43 நிமிடங்கள் ஓடுகிறது. அதில் ஐந்து நிமிட வீடியோக் காட்சியை கல்லூரி நோட்டீஸ் போர்டில் போட்டுள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பட்டப் பகலில் இந்த செயலில் அவர் ஈடுபட்டுள்ளார்.
மற்றவர்கள் நூலகத்தில் ஆங்காங்கு படித்துக்கொண்டிருந்த நிலையி்ல் கேமரூன் இந்த செக்ஸ் செயலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து தற்போது பல்கலைக்கழக நிர்வாகம் விசாரணை நடத்தி வருகிறதாம்