Saturday 06 October2012.By.Rajah.கோரிக்கையைஅவுஸ்திரேலியஅரசாங்கம் நிராகரித்துள்ளது! சண்டே லீடர் செய்தித்தாளின் ஆசிரியரான பிரட்ரிக்கா ஜேன்ஸின் புகலிடக் கோரிக்கையை அவுஸ்திரேலிய அரசாங்கம் நிராகரித்துள்ளது என அவுஸ்திரேலிய செய்தித்தாள் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது
இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் சகோதரரான பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவினால் அச்சுறுத்தப்பட்டதாக கூறப்படும் பிரட்ரிக்கா ஜேன்ஸ், அண்மையில் தாம் சார்ந்த செய்தி நிறுவனத்தில் இருந்தும் விலக்கப்பட்டார்.
அரசாங்கத்துக்கு எதிரான கட்டுரை ஒன்றை பிரசுரிப்பதற்கு முன்னர், அதனை நிறுவன உரிமையாளருக்கு காண்பிக்காமை காரணமாகவே அவர் நிறுவனத்தில் இருந்து விலக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்தநிலையில் தம்மீது விரைவில் இலங்கையில் சட்ட நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டு சிறையில் அடைக்கும் அச்சம் நிலவுவதாக தெரிவித்த ஜேன்ஸ், இலங்கையில் உள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகரகத்தின் ஊடாக அவுஸ்திரேலியாவில் குடியேறுவதற்கான கோரிக்கையை விடுத்திருந்தார்.
எனினும் அதனை அவுஸ்திரேலிய அரசாங்கம் நிராகரித்துள்ளது.
இந்தப் புகலிடக் கோரிக்கைக்கு உரிய காரணங்கள் இல்லை என்று அவுஸ்திரேலிய அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது