siruppiddy nilavarai.com

Footer Widget 1

சனி, 6 அக்டோபர், 2012

பி.பி.சீ சர்வதேச ஊடகத்தினால் சுமத்தப்பட்டு வரும் போர்க்


Saturday 06 October2012.By.Rajah.குற்றச்சாட்டுக்கள்!மறுக்கும்இராணுவம்!பி.பி.சீ(BBC) சர்வதேச ஊடகத்தின் முன்னாள் ஊடகவியலாளரினால் சுமத்தப்பட்டு வரும் போர்க் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என இராணுவத்தினர் அறிவித்துள்ளனர்.
வன்னிப் போரின் போது படையினர் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக பி.பி.சீ ஊடகத்தின் முன்னாள் ஊடகவியலாளர் பிரன்சஸ் ஹரிசன் குற்றம் சுமத்தியுள்ளார். எனினும், இந்தக் குற்றச்சாட்டுக்களை முற்று முழுதாக நிராகரிப்பதாக இராணுவத்தினர் அறிவித்துள்ளனர்.
வன்னி வைத்தியசாலையில் கடயைமாற்றிய நிரோஸ் என்ற வைத்தியரே தமக்கு தகவல்களை வழங்கியதாக குறித்த ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார்.
எனினும், போர் இடம்பெற்ற காலத்தில் வன்னிப் பகுதியில் இவ்வாறான பெயரைக் கொண்ட எந்தவொரு வைத்தியரும் கடமையாற்றவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரன்சஸ் ஹரிசன் இலங்கையை விட்டு செல்வதற்கு முன்னதாக நட்சத்திர ஹோட்டலில் விருந்துபசாரம் வழங்கியதாகவும், அதற்கு புலித்தேவனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததாகவும் இராணுவப் புலனாய்வுத் தகவல்கள் தெரிவிப்பதாக திவயின செய்தி வெளியிட்டுள்ளது