siruppiddy nilavarai.com

Footer Widget 1

சனி, 6 அக்டோபர், 2012

பிரதமரின் கையெழுத்தை போலியாக போட்ட எழுத்தாளரை


Saturday 06 October2012..By.Rajah,கைது செய்தது சிபிஐ. தான் எழுதிய நூலை வாங்கிக்கொள்ளுமாறுவலியுறுத்தி, பிரதமரின்கையெழுத்தைப் போலியாக இட்டு பரிந்துரைக் கடிதத்தை மத்திய வெளியுறவுத் துறைஅமைச்சகத்துக்குஅனுப்பிய எழுத்தாளரைசிபிஐஅதிகாரிகள்கைதுசெய்தனர்.
"இந்தியாவின் கலாசார வரலாறு மற்றும் சுற்றுலா' என்ற நூலின் ஆசிரியர் ரமேஷ் நிர்மல். இவரது நூலின் 25 பிரதிகளை (மொத்த மதிப்பு ரூ.25 லட்சம்) வாங்கிக்கொள்ளுமாறு அறிவுறுத்தும் பிரதமரின் பரிந்துரைக் கடிதத்தை பேக்ஸ் மூலம் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்கு கடந்த 2009-ம் ஆண்டு அனுப்பினார்.
அக்கடிதத்தில் பிரதமரின் கையெழுத்து போலியாக இடப்பட்டுள்ளது என்பதைக் கண்டறிந்த பிரதமர் அலுவலகம், சிபிஐயிடம் புகார் அளித்தது. கடந்த ஜூன் மாதம் ரமேஷ் நிர்மல் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
அந்தக் கடிதம் போலியானது என்றும், அக்கடிதம் ரமேஷ் நிர்மலின் மும்பையில் உள்ள அலுவலகத்திலிருந்துதான் அனுப்பப்பட்டது என்றும் சிபிஐ அதிகாரிகள் இப்போது உறுதிப்படுத்தியுள்ளனர். இதைத் தொடர்ந்து ரமேஷ் நிர்மல் கைது செய்யப்பட்டார். அவரது அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில், இதே போன்று பல பிரமுகர்களின் கையெழுத்தை போலியாக இட்டு கடிதம் தயாரித்துள்ளது தெரியவந்தது.
இவர் மீது உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வர் மாயாவதி, காங்கிரûஸச் சேர்ந்த மோதிலால் வோரா ஆகியோரின் போலி கையெழுத்துகளை இட்டு பரிந்துரைக் கடிதங்களை தயாரித்ததாக சிபிசிஐடி போலீஸாரும் வழக்குப் பதிந்துள்ளனர்.
அதோடு, இவர் 2010-ம் ஆண்டு முன்னணி பத்திரிகை ஒன்றின் செய்தியாளர் என்ற பெயரில், உருக்கு அமைச்சகத்தில் அமைக்கப்பட்ட ஹிந்தி மொழி ஆலோசனைக் குழுவிலும் இடம்பிடித்திருந்தார் எனத் தெரியவந்துள்ளது