siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

உலகச்செய்திகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உலகச்செய்திகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 18 செப்டம்பர், 2024

ஏர் பிரான்ஸ் இரு மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமான சேவையை ரத்து செய்துள்ளது

பிரான்சின் Charles de Gaulle விமான நிலையத்தில் இருந்து மத்திய கிழக்கில் இரண்டு முக்கிய நாடுகளுக்கான விமான சேவைகளை ஏர் பிரான்ஸ் ரத்து செய்துள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் நாளுக்கு நாள் பாதுகாப்பு அச்சுறுத்தல் அதிகரித்துவரும் நிலையில், இந்த முடிவை எடுத்துள்ளதாக ஏர் பிரான்ஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இஸ்ரேலின் டெல் அவிவ் மற்றும் லெபனானின் பெய்ரூட் ஆகிய நகரங்களுக்கு செப்டம்பர் 19 வரையில் விமான சேவைகளை ரத்து செய்வதாக ஏர் பிரான்ஸ் அறிவித்துள்ளது.
மேலும், நிலைமையை கண்காணித்த பின்னர் சேவைகள் மீண்டும் தொடங்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது. லுஃப்தான்சா குழுமமும் தங்கள் விமான சேவைகள் அனைத்தும் டெல் அவிவ் மற்றும் தெஹ்ரான் நகர 
எல்லைகளை கடந்து செல்ல முடிவு செய்துள்ளதாக தெரிவித்திருந்தது.
  என்பது குறிப்பிடத்தக்கது

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



செவ்வாய், 30 மே, 2023

இவ்வருடத்தில் ஜெர்மனியிலுள்ள மாணவர்களுக்கு மகிழ்ச்சித் தகவல்

ஜெர்மனி நாட்டில் மாணவர்களுக்கு 200 யுரோ வவுச்சர் வழங்கப்பட இருக்கின்றது. ஜெர்மனிய அரசாங்கமானது கொரோனா காலங்களில் இளைஞர் யுவதிகள் பலர் மனோவியல் ரீதியில் பாதிக்கப்பட்டிருந்தார்கள் என ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது.
அதன் காரணத்தினால் இளைஞர் யுவதிகளுக்கு இவ்வருடத்தில் ஒரு 200 யுரோ வவுச்சரை வழங்குவதற்கு தீர்மானித்து இருந்தது.
அதன்படி இந்த வவுச்சர் 1.6.2023 இல் இருந்து நடைமுறைக்கு வரவுள்ளது.அதாவது இந்த புதிய நடைமுறை மூலம் 18 வயதை எட்டிய ஒரு நபர் 200 யுரோ வவுச்சரை பெற்றுக்கொள்ள முடியும்.
இந்த வவுச்சர் மூலமாக இவர்கள் புத்தகங்களை கொள்வனவு செய்வதற்கும், பட மாளிகைக்கு செல்வதற்கும் அல்லது சில காட்சிகளை பார்ப்பதற்கு பயன்படுத்த முடியும் என்றும் தெரியவந்திருக்கின்றுது.
 என்பது  குறிப்பிடத்தக்கது


இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>



சனி, 11 மார்ச், 2023

அகதி அந்தஸ்தை பிரித்தானியாவில் கோரியுள்ள தமிழர்கள் ருவண்டாவுக்கு அனுப்பப்படும் அபாயம்

பிரித்தானியாவில் ஏதிலி அந்தஸ்தை கோரியுள்ள இலங்கை தமிழர்கள் உட்பட்டவர்கள் தாம் ருவண்டாவுக்கு அனுப்பப்படும் ஆபத்தை எதிர்நோக்குவதாக அச்சம் வெளியிட்டுள்ளனர்.
எனவே அவர்கள் பிரித்தானியாவில் மறைந்து வாழும் வாழ்க்கையை வாழ்ந்து வருவதாக பிரித்தானிய ஊடகம் ஒன்று 
தெரிவித்துள்ளது. 
கடந்த ஆண்டு இந்தியாவில் இருந்து போலி ஆவணங்கள் மூலம் பிரித்தானியாவுக்கு வந்த ஒருவர், தாம்  உள்துறை அலுவலகத்திற்குச் செல்ல விரும்பவில்லை என்றும்  அங்கு செல்வதனால் தமது வாழ்க்கையை  பணயம் வைக்க விரும்பவில்லை என்றும் 
குறிப்பிட்டுள்ளார்.
பிரித்தானிய அதிகாரிகள் தம்மை  வைத்து ருவாண்டாவிற்கு அனுப்பலாம் என்று அவர் அச்சம் வெளியிட்டுள்ளார்.
21 வயதான அபிந்தன் என்பவர் இலங்கையில் துன்புறுத்தல் மற்றும் சித்திரவதைக்கு ஆளாகிய நிலையில் தாம் பிரித்தானியாவுக்கு வந்ததாக தெரிவித்துள்ளார்.
தனது உயிரைப் பணயம் வைத்து சிறு படகின் மூலம் தாம் பயணம் அமைந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் இந்த கருத்தை, தம்மிடம் தெரிவித்துக்கொண்டிருக்கும்போதே, பிரித்தானியாவின் அதிகாரமிக்க அதிகாரிகளின் கண்களில் தாம் தெரிந்துவிடக்கூடாது என்பதில் விழிப்பாக இருந்ததாக பிரித்தானிய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. 
தாம் பதற்றமாக இருப்பதாகவும்,  காவல்துறையினர் இருந்தால்  அந்த வழியால் தாம் செல்வதில்லை என்றும் அவர் 
குறிப்பிட்டுள்ளார்.
அவரும் தாம் ருவண்டாவுக்கு அனுப்பப்படலாம் என்ற அச்சத்தை வெளியிட்டுள்ளார்.
கனகசபாபதி என்பவர், இலங்கையில் இடம்பெற்ற துன்புறுத்தல்கள் காரணமாக பிரித்தானியாவுக்கு வந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் குறித்த மூவரும் தங்களுடைய கோரிக்கைகள் செயல்படுத்தப்படும் வரை காத்திருக்கும் புகலிடக் கோரிக்கையாளர்களுக்காக பிரித்தானிய உள்துறை அலுவலகத்தால் வழங்கப்படும் தங்குமிடத்தை  புறக்கணித்துள்ளனர், 
அத்துடன் கடந்த ஐந்து ஆண்டுகளாக,   தோட்டம் மற்றும் பராமரிப்பு வேலைகளை அவர்கள் மேற்கொண்டு 
வருகின்றனர்.
இதற்காக வழங்கப்படும் கொடுப்பனவுகள், நாட்டின் வரிக்கு உட்படாமையால், அவற்றை, பொக்கட்  மணி என்று  அவர்கள் அழைப்பதாக பிரித்தானிய ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>






வியாழன், 2 பிப்ரவரி, 2023

பிலிப்ஸ் நிறுவனம்லாபத்தை அதிகரிக்கும் நோக்கத்தில் 6000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளது

டச்சு சுகாதார தொழில்நுட்ப நிறுவனமான பிலிப்ஸ் அதன் லாபத்தை அதிகரிக்கும் நோக்கத்தில் 6000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 
பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்காக 6000 பணிகளை அகற்றுவதாக பிலிப்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. அந்த நிறுவனம் சந்தை மதிப்பில் 70% வீழ்ச்சி அடைந்த சுவாச சாதனங்களை திரும்ப பெற்றதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மேலும் 6 ஆயிரம் பணிகளில் பாதி வேலைகள் இந்த வருடம் குறைக்கப்படும் எனவும் மீதமுள்ள வேலைகள் 2025 ஆம் வருடத்திற்குள் குறைக்கப்படும் எனவும் அந்த நிறுவனம் கூறியுள்ளது. 
அதேபோல் புதிய மறு சீரமைப்பு கடந்த அக்டோபர் மாதம் அதன் பணியாளர்களை 5% அல்லது 4000 வேலைகளை குறைப்பதற்காக அறிவிக்கப்பட்ட திட்டத்தின் கீழ் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள திட்டம் வருவதாகவும் கூறப்படுகிறது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>



ஞாயிறு, 29 ஜனவரி, 2023

உலக கோடிஸ்வரரான எலான் மஸ்க்மேலும் ஒரு நிறுவனத்தை வாங்க உள்ளார்

எலான் மஸ்க் ட்விட்டரை மீண்டும் கட்டியெழுப்பும் பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த மற்றொரு நிறுவனத்தையும் வாங்குவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளார்.
எலான் மஸ்க் தற்போது ஆறு நிறுவனங்களுக்குச் சொந்தக்காரர். இந்த பில்லியனர் வாங்கிய சமீபத்திய நிறுவனம் மைக்ரோ பிளாக்கிங் தளமான ட்விட்டர் ஆகும். கடந்த ஆண்டு அக்டோபரில் மஸ்க் ட்விட்டரை $ 44 பில்லியனுக்கு வாங்கினார். அதன் பிறகு அவர் ஒரு லாபகரமான வணிகத்தை உருவாக்க அல்லது அவர் விரும்பும் பல கடுமையான மாற்றங்களைக்
 கொண்டு வந்தார்.
Twitter 2.0. என்ற பெயரில் மஸ்க் ட்விட்டரை மீண்டும் கட்டியெழுப்பும் பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த மற்றொரு நிறுவனத்தை வாங்குவதற்கும், இந்த முறை கார்ப்பரேட் மீடியாவைப் பெறுவதற்கும் அவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.
வால் ஸ்ட்ரீட் சில்வர் என்ற Twitter பயனருக்கு மஸ்க் அளித்த சமீபத்திய பதில்களில், சந்தா செய்தி மடல்களை ஆதரிக்க, வெளியீடு, பணம் செலுத்துதல், பகுப்பாய்வு மற்றும் வடிவமைப்பு உள்கட்டமைப்பை வழங்கும் அமெரிக்காவைச் சேர்ந்த ஆன்லைன் தளமான Substack ஐ வாங்கும் யோசனைக்குத் தான் தயாராக இருப்பதாகக் 
கூறியுள்ளார்.
2017 இல் நிறுவப்பட்ட இந்த ஆன்லைன் தளம் எழுத்தாளர்கள் டிஜிட்டல் செய்தி மடல்களை நேரடியாகச் சந்தாதாரர்களுக்கு அனுப்ப 
அனுமதிக்கிறது.
"Twitter plus Substack பெருநிறுவன ஊடகங்களுக்கு உடனடியாக பெரும் போட்டியை உருவாக்குகிறது" என்று ட்விட்டர் பயனர் ஒருவர் பதிவிட்டுள்ளார். மற்றொரு புறம் இப்போது, மஸ்க் சப்ஸ்டாக்கை வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் இல்லை என விமர்சிக்கப்படுகின்றது.
ஏனெனில் அவர் ட்விட்டரை $44 பில்லியனுக்கு வாங்கினார். Tesla, SpaceX, The Boring Company, Neuralink, Twitter மற்றும் OpenAI உட்பட கிட்டத்தட்ட 6 நிறுவனங்களை மஸ்க் தற்போது வைத்திருக்கிறார். அவர் SpaceX இன் நிறுவனர், CEO மற்றும் தலைமை பொறியாளர், டெஸ்லாவில் CEO மற்றும் தயாரிப்பு கட்டிடக் கலைஞர், ட்விட்டரின் உரிமையாளர் மற்றும் CEO, The Boring Company இன் நிறுவனர், Neuralink மற்றும் OpenAI இன் 
இணை நிறுவனர்.
இதற்கிடையில், மஸ்க் ட்விட்டருக்கான புதிய தலைமை நிர்வாக அதிகாரியைத் தேடுகிறார். இருப்பினும் அடுத்த ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரியின் கைகளில் நேரடி அதிகாரத்தை வழங்க அவர் 
தயாராக இல்லை. ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பொறுப்பேற்க யாரையாவது தேடுவதாக அவர் சமீபத்தில் கூறினார். 
ஆனால் மென்பொருள் மற்றும் சர்வர் குழுக்கள் அவரால் கவனிக்கப்படும் என்று தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>

செவ்வாய், 29 நவம்பர், 2022

புகலிடக்கோரிக்கையாளர்களை வெளியேற்ற பிரித்தானியா வெள்ளை பட்டியல்

பாதுகாப்பான நாடுகள் என கருதப்படும் நாடுகளிலிருந்து வந்துள்ள புகலிடக்கோரிக்கையாளர்களை பிரித்தானியாவிலிருந்து வெளியேற்றுவதை விரைவுபடுத்த ரிஷி சுனக் அரசு திட்டமிட்டுவருகிறது.
பாதுகாப்பான நாடுகள் என கருதப்படும் நாடுகள் கொண்ட 
வெள்ளைப் பட்டியல் ஒன்றை உருவாக்க பிரித்தானிய உள்துறைச் செயலரான சுவெல்லா பிரேவர்மேன் விரும்புவதாக கூறப்படுகிறது.
அதாவது, ஒரு நாட்டில் போர், பஞ்சம், அரசியல் 
பிரச்சினைகள் போன்ற காரணங்கள் எதுவும் இல்லாத நிலையிலும், அந்த நாட்டிலிருந்து படகு மூலம் பிரித்தானியாவுக்குள் நுழைவோர்
 இருக்கிறார்கள். தன் நாட்டில் வாழ்வதைவிட நன்றாக வாழ்வதற்காக அவர்கள் பிரித்தானியாவுக்கு வருகிறார்கள். அவர்களை அவர்கள்
 நாட்டுக்கே திருப்பி அனுப்பவேண்டும் என்பதுதான் பிரித்தானியாவின் திட்டம்.
ஆக, அப்படிப்பட்ட பாதுகாப்பான நாடுகள் கொண்ட பட்டியல்தான் ‘வெள்ளைப் பட்டியல் என இங்கு குறிப்பிடப்படுகிறது.
புகலிடக்கோரிக்கையாளர்களை அவர்களுடைய நாட்டுக்கே திருப்பி அனுப்பத் திட்டம்அப்படிப்பட்ட நாடுகளிலிருந்து சட்டவிரோதமாக பிரித்தானியாவுக்குள் நுழைந்து புகலிடம் கோருவோரை அவர்களுடைய நாட்டுக்கே திருப்பி அனுப்புவதுதான் திட்டம்.
இன்னொரு விடயம், இப்படி திருப்பி அனுப்ப முடிவு செய்யப்பட்டவர்கள் தங்கள் தரப்பு வாதத்தை நிரூபிக்க முடியாத பட்சத்தில், அதை எதிர்த்து மேல் முறையீடும் செய்யமுடியாத வகையில் இத்திட்டம் உருவாக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.  

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>




திங்கள், 12 செப்டம்பர், 2022

ஒரு நகரம், உலகிலேயே முதல் தடவையாக பொதுவெளிகளில் இறைச்சி விளம்பரங்கள் செய்வதற்கு தடை

நெதர்லாந்து நாட்டில் இருக்கும் ஒரு நகரம், உலகிலேயே முதல் தடவையாக பொதுவெளிகளில் இறைச்சி குறித்த விளம்பரங்கள் செய்வதற்கு தடை அறிவித்திருக்கிறது.
நெதர்லாந்து நாட்டின் ஹார்லெம் என்னும் டச்சு நகர், பருவநிலை மாற்றத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவதால் இறைச்சிக்காக பொதுவெளிகளில் விளம்பரம் செய்யப்படுவதற்கு தடை அறிவித்திருக்கிறது. 
உலகிலேயே இறைச்சி விளம்பரம் செய்வதற்கு தடை விதித்த முதல் நகரமாக ஹார்லெம் மாறவிருப்பதாக அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள்.
அதன்படி, 1,60,000 பேர் வாழும் அந்த நகரில் வரும் 2024 ஆம் வருடத்திலிருந்து திரையரங்குகள், பேருந்துகள் முதலான பொதுவெளிகளில், தீவிர முறை பண்ணை வளர்ப்பு இறைச்சிக்கான விளம்பரங்கள் 
செய்யக்கூடாது 
என்றும் அது சட்டவிரோதமானது என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
பொதுவெளிகளில் மோசமான இறைச்சி குறித்து விளம்பரங்கள் செய்வதை அந்நகரம் தடை செய்திருக்கிறது. அதே நேரத்தில் இயற்கையான இறைச்சிகளுக்கு செய்யப்படும் விளம்பரங்களுக்கும் தடை இருக்குமா? என்பது குறித்து அந்நகரம் தற்போது வரை தீர்மானிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>





சனி, 4 ஜூன், 2022

அணுசக்தி நிறுவனம் ஒன்றின் லண்டனில் பொறியியலாளராக பணியாற்றும் வாய்ப்பை பெற்ற தமிழ்ப்பெண்

லண்டனில் உள்ள உலகின் தலைசிறந்த அணுசக்தி நிறுவனம் ஒன்றின் பொறியியலாளராக பணியாற்றும் வாய்ப்பை தமிழ்ப்பெண் 
ஒருவர் பெற்றுள்ளார்.
தமிழகத்தின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தென்னடாா் கிராமத்தைச் சோ்ந்த சுபிக்சா என்ற பெண்னே இந்த வாய்ப்பை
 பெற்றுள்ளார்.
கடந்த 2021ஆம் ஆண்டு லண்டனுக்கு சென்ற நிலையில், யுஎஸ்ஏவில் எம்.எஸ் படிப்பை தொடர்ந்து இவ்வாறு
 தேர்வாகியுள்ளார்.
இதையடுத்து சுபிக்சாவை பலரும் வரவேற்று பாராட்டியுள்ளதுடன், சமூகவலைதளங்களிலும் அவருக்கு வாழ்த்துக்கள் 
குவிந்துள்ளது.இவருக்கு 
என்  இந்த இணையங்களின் வாழ்த்துக்கள் 

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>



வெள்ளி, 3 ஜூன், 2022

நிகரகுவா நாட்டில்ல் மருத்துவ உதவி இன்றி குழந்தை பெற்றெடுத்த பெண்

பசிபிக் சமுத்திரத்தில் நிகரகுவா நாட்டில் பிளேயா மஜகுவால் பகுதியில் உள்ள கடற்கரை பகுதியில் ஜோசி புக்கெர்ட் (வயது 37) என்ற பெண் தனது குழந்தையை பெற்றெடுத்திருக்கிறார். அவர் கர்ப்பிணியான காலம் முதல் மருத்துவரை அணுகவோ அல்லது ஸ்கேன் செய்யவோ என எதுவும் மேற்கொள்ளவில்லை. மருத்துவர்களின் உதவி இன்றியே குழந்தை 
பெற்றும் உள்ளார்.
இவருக்கு கடந்த பிப்ரவரி 27ந்தேதி ஆண் குழந்தை பிறந்துள்ளது. அதற்கு போதி அமோர் ஓசன் கார்னீலியஸ் என பெயரிடப்பட்டு உள்ளது. இதுபற்றி ஜோசி கூறும்போது, சமுத்திரத்தில் குழந்தை பெற்று கொள்ள விரும்பினேன். இது எனது யோசனையில் இருந்தது. அதனுடன், அன்றைய தினம் சூழ்நிலைகளும் சரியாக இருந்தன. அதனால், சமுத்திரத்தில் குழந்தையை பெற்று 
கொண்டேன் என கூறியுள்ளார்.
இதற்காக பல வாரங்களாக அலையை கண்காணித்து வந்தேன். பின்பு குழந்தை பெற்றெடுக்க சரியான நேரம் வந்தபோது, பீச் பாதுகாப்புடன் இருக்கும் என தெரிந்து கொண்டேன் என கூறுகிறார்.
ஜோசிக்கு பிரசவ வலி வரப்போகிறது என தெரிந்ததும், அவரது குழந்தைகள் நண்பர்களுடன் தங்க வைக்கப்பட்டனர். அவரது கணவர், ஜோசியை வாகனத்தில் அழைத்து கொண்டு பீச்சுக்கு சென்றுள்ளார். உடன் துண்டுகள், நஞ்சுக்கொடியை எடுக்க பயன்படுத்த சல்லடை, ஒரு கிண்ணம், துணி வலை மற்றும் காகித துண்டுகள் உள்ளிட்ட குழந்தை பிறப்புக்கான உபகரணம் ஒன்றும் எடுத்து சென்றுள்ளார். ஏற்கனவே 3 குழந்தைகளை பெற்றெடுத்துள்ள ஜோசி, அலைகளின் ஓசை உண்மையில் என்னை நன்றாக உணர 
செய்தது என கூறுகிறார்.
இதுபற்றி அவர் வெளியிட்ட வீடியோ ஒன்றில், பசிபிக் சமுத்திர கடலோரம் பிரசவத்திற்கு முன் அமர்ந்து இருப்பது போன்றும் மற்றொரு வீடியோவில், தொப்புள் கொடியுடன் புதிதாக பிறந்த தனது மகனை கையில் வைத்திருக்கும் காட்சிகளும் உள்ளன. இந்த முறையில் குழந்தை பெற்றெடுத்ததற்கு பலர் பாராட்டுகளை தெரிவித்தபோதிலும், ஒரு சிலர் விமர்சனமும் 
செய்துள்ளனர்.
இது தூய்மையானதா? கடலில் பாக்டீரியாக்கள் அதிகம் உள்ளன என ஒருவர் தெரிவித்து உள்ளார். இதேபோன்று மற்றொருவர், வெப்பம் நிறைந்த கருவறையில் இருந்து குளிரான சமுத்திரத்தில் பிறந்த அந்த குழந்தைக்கு அதிர்ச்சி ஏற்பட்டிருக்கும் என தெரிவித்து உள்ளார்.
ஆனால் அதற்கு ஜோஷி கூறும்போது, போதி நண்பகலில் சூரிய வெப்பம் 35 டிகிரி இருக்கும்போது பிறந்துள்ளான். அதனால், அவனுக்கு குளிர் ஏற்படும் என நாங்கள் கவலை கொள்ளவில்லை. நீர்சார்ந்த தொற்றுகளை பற்றியும் நாங்கள் கவலைப்படவில்லை. அவன் ஆரோக்கியமுடனேயே இருக்கிறான். இதற்காக தேவையான அனைத்து ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டு, இது பாதுகாப்பானது என உறுதி செய்தே குழந்தை பெற்றெடுத்தேன் 
என்று அவர் கூறுகிறார்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி .இணையச்செய்திகள் >>>


ஞாயிறு, 22 மே, 2022

அசத்தல் வெற்றிப்பெற்ற அவுஸ்திரேலியா தேர்தலில் இலங்கைப் பெண்

அவுஸ்திரேலிய தேர்தலில் இலங்கை வம்சாவளி பெண் ஒருவர் அமோக வெற்றி பெற்றுள்ளார்.அவுஸ்திரேலிய தேர்தலில் தொழிற்கட்சி வேட்பாளர் கசாண்ட்ரா பெர்னாண்டோ வெற்றி பெற்றார். அவர் இலங்கையைச் சேர்ந்த ரங்கே பெரேராவை (லிபரல்) தோற்கடித்ததாக 
கூறப்படுகிறது.
வில்ஸ் பகுதியில் கசாண்ட்ரா பெர்னாண்டோ போட்டியிடுகிறார். அவர் சமையல் துறையில் நன்கு அறியப்பட்ட சமையல்காரர். கசாண்ட்ரா ஒரு பெருமைமிக்க வெளிநாட்டவர், பேஸ்ட்ரி செஃப். அத்தியாவசியத் தொழிலாளர்களுக்கான வழக்கறிஞர் 
தேர்தல் வேட்பாளராகப் போட்டியிடுகிறார். அவர் தனது 11 வயதில் தனது குடும்பத்துடன் அவுஸ்திரேலியா சென்றார்.
அன்றிலிருந்து அவர் மெல்போர்னில் வசித்து வருகிறார். அவுஸ்திரேலிய நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட முதலாவது இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வரலாற்றை கசாண்ட்ரா பெர்னாண்டோ படைக்கவுள்ளார்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>




திங்கள், 16 மே, 2022

மூன்று நாட்களில்வட கொரியாவில் எட்டு இலட்சம் பேருக்கு கொரோனா தொற்று

வட கொரியாவில் 3 நாட்களில் மட்டும் 8,20,620 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.உலகையே ஆட்டிப்படைத்துவரும் கொரோனா வைரஸ் பல நாடுகளில் கடும் பாதிப்பை
 ஏற்படுத்தின. ஆனால் இரும்புத்திரை நாடாக வர்ணிக்கப்படும் வடகொரியாவில் எந்த பாதிப்பு ஏற்படாமல் இருந்தது. வட கொரியாவில் யாருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டதாக பதிவு செய்யப்படவில்லை என உலக சுகாதார நிறுவனம் கூறியது.
ஏழை நாடுகளுக்கு தடுப்பூசிகள் கிடைப்பதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்ட கோவேக்ஸ் திட்டத்தின் கீழ் சீனா தயாரித்த சினோவாக் தடுப்பூசிகள் வடகொரியாவுக்கு வழங்கப்பட்டன. இதனால் சீனா தங்களுக்கு வழங்கிய சுமார் 30 லட்சம் எண்ணிக்கையிலான கொரோனா தடுப்பூசிகளை
 வேறு நாட்டுக்கு திருப்பி அனுப்பிவிடுமாறு
 வடகொரியா கேட்டுக் கொண்டது.யாருக்குமே கொரோனா இல்லாததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டிய அவசியம் இல்லை என வடகொரியா அதிபர் கிம் 
ஜாங் உன் அறிவித்தார்.
இந்நிலையில் எளிதில் பரவக் கூடிய ஒமைக்ரோன் வகை கொரோனா தொற்று காரணமாக வட கொரியாவில் முதல் கொவிட் -19 பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனையடுத்து நாடு முழுவதும் அவசரநிலை அறிவிக்கப்பட்டு ஊரடங்கு கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டு
 வருகின்றது.
சீனாவுடனான வர்த்தக உறவினால் இந்த கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்று முதலில் கூறப்பட்டு வந்த நிலையில் சமீபத்தில் நடந்த பிரமாண்ட இராணுவ அணிவகுப்பின் மூலமாகவே கொரோனா பரவியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
கொரோனா காரணமாக இதுவரை சுமார் 10 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். வெள்ளிக்கிழமை 1,74,440 பேருக்கு காய்ச்சல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதில் இதுவரை 21 பேர் பலியாகியுள்ளனர். இந்தநிலையில் 3 நாட்களில் மட்டும் 820,620 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
அதில் 3.2 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர். ஞாயிறன்று காய்ச்சலால் 15 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டின் அனைத்து மாகாணங்கள், நகரங்கள் மற்றும் மாவட்டங்கள் முற்றிலுமாக ஊரடங்கில் உள்ளன. அலுவலகங்கள், உற்பத்தி அலகுகள் மற்றும் குடியிருப்புகள் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத வகையில் தடுக்கப்பட்டுள்ளன. நோய் பரவுவதை தடுக்க அவசரகால அதிகபட்ச தனிமைப்படுத்தல் அமைப்பு செயல்படுத்தப்பட்டுள்ளது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>



திங்கள், 2 மே, 2022

நியூசிலாந்து இலங்கைக்கு பால் மற்றும் விலங்கு பொருட்களுக்கு சலுகைக் கடன் திட்டம்

இலங்கையில் பால் மற்றும் விலங்கு பொருட்களுக்கு சலுகைக் கடன் திட்டங்களை வழங்க நியூசிலாந்து முன்வந்துள்ளது.
நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் மற்றும் பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் தினேஷ் குணவர்தன ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த முடிவு 
எட்டப்பட்டுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையில் நிலவும் பொருளாதார மற்றும் அபிவிருத்தி உறவுகளை மேம்படுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>



சனி, 16 ஏப்ரல், 2022

விருது வழங்கும் விழா சிங்கப்பூரில் பறக்கும் இயந்திரப் போட்டி 2022

சிங்கப்பூர் பறக்கும் இயந்திரப் போட்டி 2022-இன் விருது வழங்கும் விழா.16-04-2022. இன்று சிங்கப்பூர் Expoவில் நடைபெற்றது.
COVID-19 தொடங்கியதிலிருந்து மாணவர்களுக்கான ஆகப்பெரிய நேரடி நிகழ்ச்சியாக அது அமைந்தது.
13ஆம் ஆண்டாக நடைபெற்ற சிங்கப்பூர் பறக்கும் இயந்திரப் போட்டி, DSO தேசிய ஆய்வுக் கூடத்தின் 50ஆம் ஆண்டுநிறைவைக்
 கொண்டாடியது.
இவ்வாண்டு 1,500க்கும் அதிகமானோர் போட்டியில் பங்கேற்றனர்.
சென்ற ஆண்டு போட்டியில் கலந்துகொண்டோரைவிட அந்த
 எண்ணிக்கை அதிகம்.
60க்கும் மேற்பட்ட விருதுகள் வழங்கப்பட்டன.
பங்கேற்பாளர்கள் 3 மாதப் பயணத்தை மேற்கொள்ள வேண்டியிருந்தது.
தங்களுடைய சொந்த பறக்கும் இயந்திரங்களை ஆராய்ந்து வடிவமைப்பதிலிருந்து அவர்களின் பிரமாண்டப் படைப்பை நீதிபதிகளிடம் முன்வைப்பதுவரை பங்கேற்பாளர்கள் கடினமாக
 உழைத்தனர்.
இறுதியாக Challenge Week எனும் சவால் வாரத்தின்போது தங்களின் பறக்கும் இயந்திரங்களின் திறனை பங்கேற்பாளர்கள் நிரூபிக்க வேண்டும்.
A பிரிவில் காகித விமானங்களை boomerang போல் தூக்கியெறியும் சவாலில் வென்றது இயூ டீ தொடக்கப்பள்ளியைச் (Yew Tee Primary School) சேர்ந்த குழு
அக்குழுவில் ஒருவர் சதீஷ் குமார்.
சிறுவயதிலேயே காகித விமானங்களைச் செய்த அவருக்கு வரையவும் பிடித்ததால் இந்தப் போட்டியில் கலந்துகொள்ள அவை தூண்டியதாக
 சதீஷ் கூறினார்.
"என் காகித விமானத்தை boomerang போல் எவ்வாறு தூக்கியெறிவது என்பதை நான் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. நான் நிறைய முறை அவ்வாறு செய்துபார்த்தேன். பல முறை அதை செய்த பிறகு நான் வெற்றியடைந்தேன்" என்றார் சதீஷ்.
முதல்முறையாக போட்டியில் கலந்துகொண்ட அவர் விமானங்கள் என்றால் தனக்குப் பிரியம் எனக் கூறினார்.
எதிர்காலத்தில் பொறியியல் படிக்க ஆசைப்படுவதாகவும்
 அவர் தெரிவித்தார்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>






வியாழன், 17 மார்ச், 2022

அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்சர்வதேச நீதிமன்ற உத்தரவு உக்ரைனுக்கு கிடைத்த வெற்றி

சர்வதேச நீதிமன்ற உத்தரவு உக்ரைனுக்கு கிடைத்த வெற்றி என அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து இன்று 21-வது நாளாகிறது. உக்ரைனின் பல்வேறு நகரங்களைக் கைப்பற்றி வரும் ரஷ்ய படைகள் தலைநகர் கீவை கைப்பற்றுவதில் மும்முரம் 
காட்டி வருகின்றன
இதற்கிடையே, உக்ரைன் மீதான இராணுவ நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு ரஷ்யாவுக்கு சர்வதேச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளும் நிலைமையை மேலும் மோசமாக்கும் அல்லது நீடிக்கக்கூடிய எந்தவொரு நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்நிலையில், சர்வதேச நீதிமன்ற உத்தரவு குறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், ரஷ்யாவிற்கு எதிரான வழக்கில் முழுமையான வெற்றியை
 பெற்றுள்ளோம்.
சர்வதேச நீதிமன்ற உத்தரவிற்கு ரஷ்யா உடனடியாக இணங்க வேண்டும். உத்தரவைப் புறக்கணித்தால் ரஷ்யா மேலும் தனிமைப்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>> 


செவ்வாய், 8 மார்ச், 2022

தமிழ் இளைஞர்உக்ரைன் இராணுவத்தில் இணைந்த பின்னணி என்ன?

உக்ரைன் மீது ரஷ்யா ஆரம்பித்த இராணுவ நடவடிக்கை தொடர்ந்தும் உக்கிரமடைந்து வரும் நிலையில் தமிழ் இளைஞரொருவர் உக்ரைன் இராணுவத்தில் இணைந்துள்ளார்.
கோவையைச் சேர்ந்த 21 வயது மாணவரொருவரே இவ்வாறு உக்ரைன் துணை இராணுவத்தில் இணைந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கோவை துடியலூர் பகுதியை சேர்ந்த சாய்நிகேஷ் ரவிசந்திரன் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் உக்ரைனில் உள்ள கார்கோ நேசனல் ஏரோஸ்பேஸ் பல்கலைகழகத்தில் விமானவியல் துறையில் படித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் உக்ரைன் நாட்டில் தற்போது நடைபெறும் போர் காரணமாக அந்த நாட்டில் உள்ள துணை ராணுவ பிரிவில் மாணவர் இணைந்துள்ளார் என கூறப்படுகிறது.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>



புதன், 2 மார்ச், 2022

ரஷ்யா உலகில் தடைசெய்யப்பட்ட சக்திவாய்ந்த குண்டை வீசியது

உக்ரைனின் ஒக்த்ரைகா நகர் மீதே மிகவும் சக்தி வாய்ந்த வக்யூம் குண்டினை வீசியதாக அமெரிக்காவிற்கான உக்ரைன் தூதுவர் தெரிவித்துள்ளார்.
மிக சக்திவாய்ந்த வக்யூம் குண்டு காற்றில் உள்ள ஒக்சிஜனை எரிபொருளாக பயன்படுத்தி வெடிக்கப்படுகிறது. குண்டு வீசும் பகுதிகளில் உள்ள ஒக்சிஜன் வெடிபொருளுடன் கலந்து வெடிக்கும் போது, சாதாரண குண்டுகளை விட அதிக அதிர்வலைகளை ஏற்படுத்தி பெரும் சேதத்தை 
உண்டாக்கும்.
ஜெனீவா உடன்படிக்கைகளின்படி தடைசெய்யப்பட்ட வக்யூம் குண்டுகளை உக்ரைன் மீது ரஷ்யா வீசியதாக அமெரிக்காவிற்கான ரஷ்ய தூதர் 
மார்க்ரோவே கூறினார்.
இந்த குண்டுவீச்சினால் ஏராளமான உக்ரைன் இராணுவ வீரர்களும், பொதுமக்களும் உயிரிழந்ததாக தகவல்கள் கூறுகின்றன.
வேக்யூம் குண்டை பயன்படுத்துவது போர்க்குற்றம் என்று அமெரிக்காவின் வெள்ளை மாளிகை செய்தித்தொடர்பாளர்
 கூறியுள்ளார்.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>



செவ்வாய், 22 பிப்ரவரி, 2022

அரசாங்கதின் மகிழ்ச்சியான தகவல் பிரித்தானிய மக்களுக்கு

பிரித்தானியாவில் அனைத்து கோவிட் கட்டுப்பாடுகளும் முடிவுக்கு கொண்டுவரப்படவுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் 
அறிவித்துள்ளது.
இதன்படி, எதிர்வரும் வியாழக்கிழமை முதல் பிரித்தானியாவில் கோவிட் கட்டுப்பாடுகள் முடிவுக்கு கொண்டுவரப்படவுள்ளதாக அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார்.
அந்த வகையில், நேர்மறை சோதனை செய்தவர்களை சுயமாக தனிமைப்படுத்துவதற்கான சட்டத் தேவை கைவிடப்படும் என்று பிரதமர் போரிஸ் ஜோன்சன் அறிவித்துள்ளார்.
ஏப்ரல் முதலாம் திகதி முதல் கோவிட் தொற்று தொடர்பான இலவச ரேபிட்- ஆன்டிஜென் சோதனை முடிவுக்கு கொண்டுவரப்படும் எனவும், இலவச ரேபிட் ஆன்டிஜென் சோதனை குறிப்பிட்ட பிரிவினரை இலக்காகக் கொண்டதாக இருக்கும் எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக மேற்கொண்ட முயற்சிகளின் அர்த்தம், இப்போது அரசாங்கத்தின் கட்டுப்பாடுகளிலிருந்து விலகி தனிப்பட்ட பொறுப்புக்கு செல்ல தயாராக இருப்பதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக பிரித்தானியாவில் பல்வேறு கோவிட் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்படவுள்ளது. இது அங்கு வாழும் மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும்?
பெப்ரவரி 21- பெரும்பாலான கல்வி மற்றும் குழந்தை பராமரிப்பு அமைப்புகளில் உள்ள ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் வாரத்திற்கு இரண்டு முறை அறிகுறியற்ற பரிசோதனையை மேற்கொள்ளும் வழிகாட்டுதலை 
அரசாங்கம் கைவிடுகிறது.
பெப்ரவரி 24 – கோவிட் தொற்றுக்கு நேர்மறை சோதனை செய்தவர்கள் இனி சட்டப்பூர்வமாக சுயமாக தனிமைப்படுத்தப்பட வேண்டிய அவசியமில்லை.
பெப்ரவரி 24 – முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட நெருங்கிய தொடர்புகள் மற்றும் 18 வயதுக்குட்பட்டவர்கள் இனி ஏழு நாட்களுக்கு தினசரி சோதனை செய்ய சட்டப்பூர்வமாகத் தேவையில்லை.
ஏப்ரல் 1 முதல் – அறிகுறி மற்றும் அறிகுறியற்ற நபர்களுக்கான இலவச ரேபிட்- ஆன்டிஜென் சோதனை முடிவடையும்.
ஏப்ரல் 1 முதல் – கோவிட் அறிகுறிகள் உள்ளவர்கள் வீட்டிலேயே இருக்க வேண்டுமா என்பதைத் தீர்மானிக்கும்போது தனிப்பட்ட பொறுப்பைச் செயல்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுவார்கள், அதுவரை அவ்வாறு செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>





வெள்ளி, 4 பிப்ரவரி, 2022

எச்சரிக்கை சூரியனில் இருந்து வெளியாகும் மின்காந்த புயலால் பூமிக்கு ஆபத்தாம்

சூரியனில் இருந்து வெளியாகும் மின்காந்த புயலால் பூமியில் உள்ள மின் சாதன பொருட்கள் பாதிக்கப்படலாம் என அமெரிக்கா விண்வெளி ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது.
சூரியனில் இருந்து அவ்வப்போது மின்காந்த புயல்கள் புறப்படும். தற்போது பூமி நோக்கி மிகுந்த வேகத்தில் வந்து கொண்டிருக்கும் மின்காந்த புயலால் செயற்கை கோள்கள், தகவல் தொழில்நுட்ப சாதனங்கள்
 பாதிக்கப்படலாம்.
இன்று இரவுக்குள் இது பூமியை அடையும். எனவே மின்னணு, தகவல் தொழில்நுட்பம் தொடர்பான அனைத்து அமைப்புகளும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிக்கையில் 
கூறப்பட்டுள்ளது.
எனவே மின்னணு, தகவல் தொழில்நுட்பம் தொடர்பான அனைத்து அமைப்புகளும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>




வியாழன், 3 பிப்ரவரி, 2022

தற்காலிக விசாவுடன் ஆஸ்திரேலியாவில் வாழ்பவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்


ஆஸ்திரேலியாவில் கடந்த பல ஆண்டுகளாக தற்காலிக விசாவுடன் வாழ்பவர்கள் மற்றும் பணிபுரிபவர்கள், ஆஸ்திரேலியாவில் நிரந்தரமாக குடியேறுவதற்கு வழியேற்படுத்தப்படவேண்டுமென பெரும்பாலான ஆஸ்திரேலியர்கள் விரும்புவதாக ஆய்வு முடிவொன்று கூறுகின்றது.

மனித உரிமைகள் சட்ட மையத்தினால் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் பங்கேற்ற ஆஸ்திரேலியர்களில் 78 சதவீதமானோர், தற்காலிக விசாக்களில் உள்ளவர்கள் இங்கு நிரந்தரமாக குடியமர்த்தப்பட வேண்டுமென கருதுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீண்டகாலமாக நிலையற்ற வாழ்க்கை வாழும் அவர்களுக்கு, நிலையான எதிர்காலம் அமையவேண்டுமென கருத்து தெரிவித்த 78 வீதமானோரும் வலியுறுத்தியுள்ளனர்.

அதேவேளை தற்காலிக விசாவுடன் இங்கிருப்பவர்கள், நாட்டின் சில துறைகளில் நிலவும் பணியாளர் பற்றாக்குறைக்கு நிரந்தர தீர்வாக அமைவர் என, கடந்த டிசம்பர் மாதம் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் பங்கேற்றவர்களில் 58 வீதமானோர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும் ஆஸ்திரேலியர்கள் பணிபுரியத் தயங்கும் பல துறைகளில், இவர்கள் வேலைசெய்ய முன்வருவர் எனவும் 33 சதவீதமானோர் தெரிவித்துள்ளனர்.

அதுமட்டுமல்லாமல்லாமல் பல்கலாச்சார நாடான ஆஸ்திரேலியா, இவர்களால் மேலும் மெருகூட்டப்படும் எனவும், என்னவிதமான விசாவில் இருந்தாலும் தமக்கான நிலையான எதிர்காலத்தைத் திட்டமிடுவதற்கான வாய்ப்பு இவர்களுக்கு வழங்கப்படவேண்டுமெனவும், குறித்த ஆய்வில் பங்கேற்றவர்களில் பெரும்பாலானோர் கூறியுள்ளனர்

இதுதொடர்பில் கருத்துவெளியிட்டுள்ள மனித உரிமை சட்ட மையத்தின் David Burke, தமது வாழ்க்கையைத் தாம் விரும்பியபடி திட்டமிட்டமிடுவதற்கான உரிமை அனைவருக்கும் உள்ளதாகவும், ஆனால் ஆஸ்திரேலிய அரசின் விசா முறைமை பல குடும்பங்களை ஒன்றிணையமுடியாதவாறு பிரித்துவைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தற்காலிக விசாவுடன் இங்கு வாழ்பவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியை, ஆஸ்திரேலியர்கள் தெளிவாக உணர்ந்துள்ளமையை இந்த ஆய்வு முடிவு வெளிப்படுத்துவதாகவும் David Burke மேலும் தெரிவித்தார். 


 

ஞாயிறு, 5 டிசம்பர், 2021

இந்திய பெண் சர்வதேச நிதியத்தின் முதன்மை துணை நிர்வாக இயக்குனராக நியமனம்

ஐ.எம்.எப். எனப்படும் சர்வதேச நிதியத்தின் முதன்மை துணை நிர்வாக இயக்குனராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கீதா கோபிநாத் நியமிக்கப்பட்டுள்ளார்.
இது, சர்வதேச நிதியத்தில் 2-வது இடத்தில் உள்ள உயர் பதவியாகும்.
உலகப் பொருளாதாரத்துக்கு உதவுவதில் கீதா கோபிநாத்தின் அறிவுபூர்வமான தலைமையை அங்கீகரிக்கும் வகையிலும், பொருளாதார 
மந்த நிலையில் இருந்து உலகத்தை விடுவிக்க பாடுபட்டதற்காகவும் அவருக்கு இந்த பதவி அளிக்கப்படுவதாக ஐஎம்எப் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டாலினா ஜார்ஜிவா தெரிவித்துள்ளார்.
கீதா கோபிநாத் ஏற்கனவே சர்வதேச நிதியத்தின் தலைமை பொருளாதார நிபுணராக 3 ஆண்டாக பணியாற்றியவர். இவர் அமெரிக்கா வாழ் இந்திய பெண்மணி ஆவார். அப்பதவியை வகித்த முதலாவது பெண் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இங்குஅழுத்தவும் நவக்கிரி.இணையச்செய்திகள் >>>