siruppiddy nilavarai.com

Footer Widget 1

சனி, 11 மார்ச், 2023

அகதி அந்தஸ்தை பிரித்தானியாவில் கோரியுள்ள தமிழர்கள் ருவண்டாவுக்கு அனுப்பப்படும் அபாயம்

பிரித்தானியாவில் ஏதிலி அந்தஸ்தை கோரியுள்ள இலங்கை தமிழர்கள் உட்பட்டவர்கள் தாம் ருவண்டாவுக்கு அனுப்பப்படும் ஆபத்தை எதிர்நோக்குவதாக அச்சம் வெளியிட்டுள்ளனர்.
எனவே அவர்கள் பிரித்தானியாவில் மறைந்து வாழும் வாழ்க்கையை வாழ்ந்து வருவதாக பிரித்தானிய ஊடகம் ஒன்று 
தெரிவித்துள்ளது. 
கடந்த ஆண்டு இந்தியாவில் இருந்து போலி ஆவணங்கள் மூலம் பிரித்தானியாவுக்கு வந்த ஒருவர், தாம்  உள்துறை அலுவலகத்திற்குச் செல்ல விரும்பவில்லை என்றும்  அங்கு செல்வதனால் தமது வாழ்க்கையை  பணயம் வைக்க விரும்பவில்லை என்றும் 
குறிப்பிட்டுள்ளார்.
பிரித்தானிய அதிகாரிகள் தம்மை  வைத்து ருவாண்டாவிற்கு அனுப்பலாம் என்று அவர் அச்சம் வெளியிட்டுள்ளார்.
21 வயதான அபிந்தன் என்பவர் இலங்கையில் துன்புறுத்தல் மற்றும் சித்திரவதைக்கு ஆளாகிய நிலையில் தாம் பிரித்தானியாவுக்கு வந்ததாக தெரிவித்துள்ளார்.
தனது உயிரைப் பணயம் வைத்து சிறு படகின் மூலம் தாம் பயணம் அமைந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் இந்த கருத்தை, தம்மிடம் தெரிவித்துக்கொண்டிருக்கும்போதே, பிரித்தானியாவின் அதிகாரமிக்க அதிகாரிகளின் கண்களில் தாம் தெரிந்துவிடக்கூடாது என்பதில் விழிப்பாக இருந்ததாக பிரித்தானிய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. 
தாம் பதற்றமாக இருப்பதாகவும்,  காவல்துறையினர் இருந்தால்  அந்த வழியால் தாம் செல்வதில்லை என்றும் அவர் 
குறிப்பிட்டுள்ளார்.
அவரும் தாம் ருவண்டாவுக்கு அனுப்பப்படலாம் என்ற அச்சத்தை வெளியிட்டுள்ளார்.
கனகசபாபதி என்பவர், இலங்கையில் இடம்பெற்ற துன்புறுத்தல்கள் காரணமாக பிரித்தானியாவுக்கு வந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் குறித்த மூவரும் தங்களுடைய கோரிக்கைகள் செயல்படுத்தப்படும் வரை காத்திருக்கும் புகலிடக் கோரிக்கையாளர்களுக்காக பிரித்தானிய உள்துறை அலுவலகத்தால் வழங்கப்படும் தங்குமிடத்தை  புறக்கணித்துள்ளனர், 
அத்துடன் கடந்த ஐந்து ஆண்டுகளாக,   தோட்டம் மற்றும் பராமரிப்பு வேலைகளை அவர்கள் மேற்கொண்டு 
வருகின்றனர்.
இதற்காக வழங்கப்படும் கொடுப்பனவுகள், நாட்டின் வரிக்கு உட்படாமையால், அவற்றை, பொக்கட்  மணி என்று  அவர்கள் அழைப்பதாக பிரித்தானிய ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

இங்குஅழுத்தவும் பெல்லேன்பேர்க் மாதா இணையம்.>>>






0 comments:

கருத்துரையிடுக