இந்த நாட்டில் உண்மைக்கு இடமில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமசந்திரவின் மகள் ஹிருனிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.
நடக்கும் எல்லா விடயங்கள் பற்றியும் நாம் உன்னிப்பாக அவதானித்து வருகின்றோம்.
துமிந்த சில்வா தொடர்பில் தீர்மானிக்கும் ஆற்றல் ஜனாதிபதிக்கே காணப்படுகின்றது.
நான்கு குடும்பங்களைச் சீரழித்த துமிந்த சில்வா, ஜனாதிபதியிடம் ஆசி பெற்றுக்கொள்ள சென்றதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் ஜனாதிபதியிடம் நியாயம கோர உள்ளதாக ஹிருனிகா தெரிவித்துள்ளார்.
இந்த அரசாங்கம் இரண்டு முகங்களைக் கொண்டது – சஜித் பிரேமதாச
இந்த அரசாங்கம் இரண்டு முகங்களைக் கொண்டது என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
உள்நாட்டுக்கு ஒரு முகத்தைக் காட்டும் அரசாங்கம் வெளிநாட்டுக்கு வேறு முகத்தை காட்டி வருகின்றது.
போர் வெற்றி குறித்த பிரச்சாரங்களைத் தவிர நாட்டி வேறு எந்த அபிவிருத்தியும் கிடையாது.
நாட்டின் அபிவிருத்தியை சோடா போத்தல் அபிவிருத்தியாக அடைளப்படுத்த முடியும்.
மின்சாரக் கட்டண உயர்வின் மூலம் நாட்டின் அனைத்து மக்கள் மீதும் அரசாங்கம் மின்சாரத்தை பாய்ச்சியிருந்தது என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
கட்டான பிரதேசத்தில் நடைபெற்ற மின்சாரக் கட்டண உயர்விற்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்