siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

தகவல்கள்.புகைப்படங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தகவல்கள்.புகைப்படங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 20 நவம்பர், 2013

பயங்கரம்: ஷாப்பிங் மால் கட்டிடம் திடீரென சரிந்தது


 தென் ஆப்ரிக்காவில் ஷாப்பிங் மால் கட்டிடம் சரிந்து விழுந்ததில் 4 பேர் பலியானார்கள், பலரும் உயிருக்கு போராடி வருகின்றனர்.
தென் ஆப்ரிக்காவில் உள்ள டர்பன் நகருக்கு அருகே டோங்காத் என்ற இடத்தில் 200 மீற்றர் நீளத்திற்கு மிகப்பெரிய ஷாப்பிங் மால் கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

இங்கு நேற்று 100க்கும் மேற்பட்டோர் கட்டிட பணிகளை செய்து வந்தனர். மாலை 4 மணியளவில் திடீரென கட்டிடத்தின் ஒரு பகுதி சரிந்து விழுந்தது.
இதில் இடிபாட்டில் சிக்கி 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயானார்கள்.
தகவல் அறிந்தும் மீட்புபடையினர் விரைந்து வந்து, கட்டிடத்தில் சிக்கிய 30 பேரை மீட்டனர்.

காயம் அடைந்தோர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து மருத்துவ அதிகாரி நீல் போவெல், கட்டிட இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயமடைந்துள்ளனர். கட்டிடம் இடிந்து விழுந்ததற்கான காரணம் எதுவும் இதுவரை தெரியவில்லை.

மேலும் கட்டிட இடிபாடுகளில் 50 பேர் வரை சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.
இதனால் சாவு எண்ணிக்கை மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது
.






 

சனி, 5 ஜனவரி, 2013

ஒரு தாயிடம் குழந்தை பால் குடிக்கும்போது??




எந்தக்தகப்பனும் இப்படி ஒரு கொலையைச் செய்யமாட்டான்!
இரத்மலானையில் அமைந்துள்ள இரண்டு மாடி வீடொன்றில் தனது மனைவியையும் இரண்டு பிள்ளைகளையும் கொலை செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபர், தான் காதலிக்கும் பெண்ணைத் திருமணம் செய்வதற்காகவே இந்த படுகொலையை செய்துள்ளார் என்று விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளதாக கல்கிஸை பொலிஸார் தெரிவித்தனர்.


சந்தேகநபர் தகவல் தொழில்நுட்பப் பாடநெறியொன்றைக் கற்கிறார், இவர் நீர்கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் மீது கடந்த ஒரு மாத காலமாகக் காதல்வயப்பட்டிருந்தார், [புகைப்படங்கள்]




அவரைத் திருமணம் செய்யும் நோக்கில் இக்கொலையைச் செய்திருக்கலாம் என பொலிஸார் கூறுகின்றனர்.

மனைவியை விவாகரத்துச் செய்துவிட்டுக் காதலியைத் திருமணம் செய்திருக்கலாமே என்று கேட்டதற்கு, மனைவியை விவாகரத்துச் செய்தால் தனது நண்பர்களிடமிருந்தும், உறவினர்களிடமிருந்தும் எதிர்ப்புக் கிளம்பும் என்பதால் விவாகரத்தை நாடவில்லை என்று சந்தேக நபர் கூறினார்” எனவும் பொலிஸார் கூறுகின்றனர்.

தனது மனைவியுடனும் பிள்ளைகளுடனும் மிகவும் மகிழ்ச்சியுடன் வாழ்வதாக உறவினர்களுக்குக் காட்டிக் கொண்டு மிகவும் சூட்சுமமான முறையில் இக்கொலைகளை சந்தேகநபர் செய்துள்ளார் எனப் பொலிஸார் கூறினர்.

சந்தேக நபர் தனது சாட்சியத்தில் தெரிவித்தவை என்று பொலிஸார் கூறியதாவது:

மனைவி நித்திரையிலிருந்த அறைக்குச் சென்று அவரது கழுத்தை நெரித்துக் கொலை செய்தார் சந்தேகநபர். அப்போது மனைவி கத்தியுள்ளார். இந்தச் சத்தத்தைக் கேட்ட மூன்று வயது மகன் பாட்டி.. பாட்டி… என்று சத்தமிட்டவாறு அறையிலிருந்து ஓட முயற்சியுத்துள்ளார்.

அவரையும் பிடித்துக் கட்டிலில் போட்டு கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார் சந்தேகநபர்.

கட்டிலில் நித்திரையிலிருந்த ஒரு மாத வயதுப் பாலகனை மனைவியின் மார்பு அருகே பால் குடிப்பது போல் படுக்க வைத்துள்ளார். ஒரு தாயிடம் குழந்தை பால் குடிக்கும்போது எந்தக் தகப்பனும் இப்படி ஒரு கொலையைச் செய்யமாட்டான் என்று விசாரணையைத் திசை திருப்புவதற்காகவே இவ்வாறு செய்துள்ளார்.



 
குழந்தையை மனைவியின் மார்போடு சேர்க்கும்போதே அவர் இறந்திருந்தார். கட்டிலைச் சுற்றி நுளம்பு வலையை விரித்து அதற்குத் தீ வைத்துள்ளார், அதற்குமுன் மெழுகுதிரி ஒன்றையும் தீப்பெட்டியையும் கட்டிலிற்கு அருகில் வைத்துள்ளார்.

மெழுகுதிரியைப் பற்றவைக்க முயற்சிக்கையில் தீப்பற்றிக் கொண்டதாக மற்றவர்களை நம்பவைக்கவே இவ்வாறு செய்துள்ளார் என்றனர்.

இக்கொலையில் சந்தேகநபரின் தாயோ வேலைக்காரியோ சம்பந்தப்படவில்லை எனப் பொலிஸ் விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.

இதேவேளை, கொலையான பெண்ணும் சந்தேகநபரும் பல வருடங்களாகக் காதலித்தபின் 2003ம் ஆண்டு திருமணம் செய்திருந்தார்கள்.

இக்கொலை சம்பந்தமாக கல்கிசை பொலிஸார் மேலதிக விசாரணைகளை நடத்துகின்றனர்.

திங்கள், 10 டிசம்பர், 2012

ரஷ்ய ஆற்றின் கீழே கொழுந்துவிட்டு எரியும் எரிமலைக்குழம்பு.

          

மாயன் காலண்டரின் மர்மமா? ரஷ்யாவில் உள்ள ஒரு ஆற்றின் கீழே எரிமலை போல நெருப்புகுழம்பு எரிந்து கொண்டிருப்பதை அமெரிக்காவின் சாட்டிலைட் படம் பிடித்துள்ளது. இதனால் ரஷ்யா முழுவதும் அதிர்ச்சியில் உறைந்துள்ளது.{புகைப்படங்கள்,}

ரஷ்யாவின் Kamchatka Peninsula என்ற இடத்தில் உள்ள ஆற்றின் தண்ணீருக்கு அடியில் லாவா என்ற எரிமலையின் நெருப்புக்குழம்பு ஓடிக்கொண்டிருப்பதை அமெரிக்காவின் நாசா படம் பிடித்துள்ளது. அந்த ஆற்றின் தண்ணீர் பயங்கரமாக கொதிநிலையில் உள்ளதாகவும், அருகிலுள்ள கிராமங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால், உடனே அந்த கிராமத்தில் உள்ள மக்களை அப்புறப்படுத்தி நடவடிக்கை எடுக்கவும் ரஷ்ய அரசு தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அங்குள்ள பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டன.

வோல்கானா என்று சொல்லப்படும் இந்த நெருப்புக்குழம்புகளை இன்ஃப்ரா ரெட் கதிர்கள் மூலம் படமெடுத்த நாசா, அதன் வெப்பநிலையை கணக்கிட்டு, தனது அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளது.
மேலும் Peninsula அருகிலுள்ள பனிமலையின் ஐஸ்கட்டிகள் எரிந்து கொண்டிருக்கின்றன. டிசம்பர் 21ல் உலகம் அழியும் என்ற மாயன் காலண்டர் வேலை செய்ய ஆரம்பித்து விட்டதோ என பொதுமக்கள் பயத்தில் உறைந்துள்ளனர்

திங்கள், 26 நவம்பர், 2012

இங்கிலாந்தில் கனமழை: 800க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில்

இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதிகளில் பெய்த கனமழையால் 800க்கும் அதிகமான வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. இங்கிலாந்தின் பல பகுதிகளில் கடந்த 21ஆம் திகதியிலிருந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளதுடன், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் 800க்கும் அதிகமான வீடுகள் நீரில் மூழ்கி உள்ளன, மீட்புப் பணிகள் வேகமாக நடந்து வருகிறது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால் மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இதுகுறித்து பிரதமர் டேவிட் கமரூன் டுவிட்டரில், மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேவையான  அனைத்து உதவிகளும் உடனடியாக செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார் {புகைப்படங்கள்},

தமிழினம் சுதந்திரமாகவும், நின்மதியாகவும் வாழும் நாள் விரைவில் வரும்!


கல்லறைகள் முழுவதும் இடித்தழிக்கப்பட்டன. கோயில்கள், தெருகள் முழுவதும் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். வீடுகளுக்குள் புகுந்து மக்களை அச்சுறுத்துகின்றனர். இத்தனையும் மாவீரர்களுடைய நினைவு நாள் அனுட்டிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவே.
அரசாங்கத்திற்கும், அதன் இராணுவ இயந்திரத்திற்கும் நன்றாக ஒரு விடயம் புரிந்திருக்கின்றது. எதனை அழித்தாலும், மக்கள் மீது எத்தகைய அடக்கு முறைகளை திணித்தாலும் மக்கள் மனங்களில் நிறைந்திருக்கும் மாவீரர்களுடைய நினைவுகளை அழிக்க முடியாது.
ஏதோவொரு வழியில் மாவீரர்களுடைய நினைவுகளை மக்கள் அனுஸ்டிக்கவே போகின்றார்கள். அந்த வழிகளையும் முற்றாக மூடிவிடவேண்டும் என்றே படையினர் பகீரத பிரயத்தனம் எடுத்திருக்கின்றனர்.
ஆனால் ஒரு விடயத்தை அரசாங்கமும், அதன் காட்டுமிராண்டித்தனமான இராணுவ இயந்திரமும் புரிந்து கொள்ளத் தவறியிருக்கின்றது. அதாவது கடந்த 30வருடங்களில் 40ஆயிரத்திற்கு ம் மேற்பட்ட மாவீரர்கள் வீரச்சாவடைந்தனர்.
எனவே அந்த 40ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாவீரர்களுடைய 40ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் இந்த மண்ணில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அது மட்டுமல்ல இந்த மாவீரர்களுடன் சம களத்தில் நின்ற போராளிகள், நண்பர்கள், மனைவி, பிள்ளைகள் என ஒவ்வொரு தமிழனும் மாவீரர்களுடன் ஏதோவொரு வகையில் தொடர்புபட்டிருக்கின்றான். சிலர் அற்ப சலுகைகளுக்காக படையினருக்கும், அரசாங்கத்திற்கும் பின்னால் சென்றிருந்தாலும், அவர்களுக்கும் ஒரு மாவீரன் நெருக்கமான தொடர்பு இருக்கும். மாவீரர்கள் ஒன்றும் கூலிப்படை கிடையாது. அடக்கி, ஒடுக்கப்பட்ட ஒரு இனத்தின் அடையாளக் குறிகள். போராடினாலே வாழ்வென்றுரைத்த மூன்று தசாப்தங்களின் நிலைக்குறியீடுகள்.
கடைசி தமிழன் உள்ளவரையில் மாவீரர்களின் நினைவுகள் வாழும். மாவீரர்கள் பூசிக்கப்படுவார்கள். நடுகல் வழிபாடுகளின் தாய், தந்தையர்கள் நாங்கள். எங்கள் சொந்தங்களின் நினைவுகளைக் கொண்டாட முடியவில்லை.
எத்தனை அழிவுகள், இழிவுகள் வந்தாலும் அத்தனையும் தாண்டி மாவீரர்களுடைய கனவுகளையும், அவர் தம் நினைவுகளையும் சுமந்து கொண்டு கால்கடுக்க நடக்கின்றோம். அடைய வேண்டிய இலக்கினை நோக்கி.
நிச்சயமாக எங்கள் மாவீரர்கள் சிந்திய இரத்தத்திற்கும், அவர்கள் கொடுத்த உயிர் விலைக்கும் ஒரு விளைவு கிடைக்கும். தமிழினம் சுதந்திரமாகவும், நின்மதியாகவும் வாழும் நாள் விரைவில் வரும்.
அந்த நம்பிக்கையோ, பிரிவினைகள், பேதங்கள் இல்லாமல் அந்த உத்தமர்களை நினைவில் கொள்வோம். மூச்சு மூடியும் கடைசித் தருணத்திலும் அவர்கள் உச்சரித்துக் கொண்ட தாரக மந்திரத்தை சொல்லிக் கொள்வோம்.
ஒரு நாள் அடிவானில் சூரியன் பிறக்கையில் இந்த இனம் விடுதலை பெற்று விட்டதாய் செய்தி வரும். அதற்காய் அஸ்த்தமன நேரத்தை ஒவ்வொரு நாளும் வேகப்படுத்திக் கொள்கின்றோம்{புகைப்படங்கள்,}

சனி, 27 அக்டோபர், 2012

சின்ன வயசில எவ்வளவு கற்பனை!

         
Sunday 28 October 2012 { புகைப்படங்கள்}
இந்த நிகழ்வினை மிகவும் உன்னிப்பாக புகை படங்களை உற்று பார்க்கவும்