தென் ஆப்ரிக்காவில் ஷாப்பிங் மால் கட்டிடம் சரிந்து விழுந்ததில் 4 பேர் பலியானார்கள், பலரும் உயிருக்கு போராடி வருகின்றனர்.
தென் ஆப்ரிக்காவில் உள்ள டர்பன் நகருக்கு அருகே டோங்காத் என்ற இடத்தில் 200 மீற்றர் நீளத்திற்கு மிகப்பெரிய ஷாப்பிங் மால் கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
இங்கு நேற்று 100க்கும் மேற்பட்டோர் கட்டிட பணிகளை செய்து வந்தனர். மாலை 4 மணியளவில் திடீரென கட்டிடத்தின் ஒரு பகுதி சரிந்து விழுந்தது.
இதில் இடிபாட்டில் சிக்கி 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயானார்கள்.
தகவல் அறிந்தும் மீட்புபடையினர் விரைந்து வந்து, கட்டிடத்தில் சிக்கிய 30 பேரை மீட்டனர்.
காயம் அடைந்தோர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து மருத்துவ அதிகாரி நீல் போவெல், கட்டிட இடிபாடுகளில் சிக்கி பலர் படுகாயமடைந்துள்ளனர். கட்டிடம் இடிந்து விழுந்ததற்கான காரணம் எதுவும் இதுவரை தெரியவில்லை.
மேலும் கட்டிட இடிபாடுகளில் 50 பேர் வரை சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.
இதனால் சாவு எண்ணிக்கை மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது
.
0 comments:
கருத்துரையிடுக