மெக்சிகோவில் இறந்த நபர் ஒருவர் மேயராக தெரிவு செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெற்கு மெக்சிகோவில் உள்ள ஓயாகசா நகருக்கு அருகே உள்ளது சான் அகஸ்டின் அமாடென்கோ என்ற கிராமம்.
இந்த கிராமத்தில் மேயரை தெரிவு செய்வதற்கான நடந்த தேர்தலில், லெனின் கார்பெல்லிடோ என்பவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதில் ஆச்சரியம் என்னவென்றால், லெனின் கடந்த 2010ம் ஆண்டு இறந்துவிட்டதாக வழங்கப்பட்ட இறப்புச் சான்றிதழ் கிடைத்துள்ளது தான்.
அதன் பிறகு தான் லெனின் போலியாக இறப்புச் சான்றிதழ் வாங்கியது தெரிய வந்தது.
முன்னதாக கடந்த 2004ம் ஆண்டு லெனின் மற்றும் 4 பேர் சேர்ந்து தன்னை கற்பழித்ததாக பெண் ஒருவர் பொலிசில் புகார் கொடுத்தார்.
இந்த வழக்கில் கைதாவதில் இருந்த தப்பிக்க லெனின் இறந்துவிட்டதாக அவரது இறப்பு சான்றிதழை பொலிசாரிடம் அவரது உறவினர் ஒருவர் காட்டியுள்ளார்.
இறந்தவர் என்று குறிப்பிடப்பட்டுள்ள ஒருவர், மேயர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது