
பக்ரீத் பண்டிகை தொழுகையின்போது, ஏமன் நாட்டில் உள்ள மசூதி ஒன்றில் அடுத்தடுத்து மனித வெடிகுண்டு தாக்குதல்கள் நடைபெற்றன. இதில் 25 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.
ஏமனில் சண்டை
அரபு நாடான ஏமனில், ஈரான் ஆதரவு பெற்ற ஷியா பிரிவு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஆதிக்கத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் அதிபர் மன்சூர் ஹாதி, கடந்த மார்ச் மாதம் சவுதிக்கு ஓட்டம் பிடித்தார். அதிபர் ஆதரவு படையினரை எதிர்த்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கடுமையாக சண்டையிட்டு வந்தனர். கிளர்ச்சியாளர்களுக்கு...