சாலமன் தீவுகளில் 7.6 ரிக்டர் அளவில் நில அதிர்வு உணரப்பட்டதை அடுத்து, அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.சாலமன் தீவுகளில் இன்று அதிகாலை 7.6 ரிக்டர் அளவில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.
இதனையடுத்து சாலமன் தீவுகள், பப்புவா நியூகினியா மற்றும் நியூ கெலடோனியா ஆகிய பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் சாலமன் தீவுகளி்ல் ஏற்பட்டுள்ள வெள்ளத்தினால் 16 பேர் உயிரிழந்தமை குறிப்புடத்தக்கது.
இந்நிலையில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதை அடுத்து அப்பகுதியிலுள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பட்டுள்ளனர்.
எவ்வாறாயினும் நில அதிர்வினால் ஏற்பட்ட சேத விபரங்கள் தொடர்பில் தகவல்கள் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.