siruppiddy nilavarai.com

Footer Widget 1

This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

புதன், 5 செப்டம்பர், 2012

மறுவிவாகம் செய்துக்கொண்ட பெண்ணுக்கு விளக்கமறியல்

05.09.2012.BY.rajah.
முதல் திருமணத்திலிருந்து விவாகரத்துப் பெற்றுக் கொள்ளாமல் மீண்டும் ஒரு மறுவிவாகம் செய்து கொண்ட பெண்ணுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஆறுமாதச் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

கொம்பனித் தெருவைச் சேர்ந்த 19 வயதுடைய பெண்ணே இவ்வாறு இரண்டாம் விவாகமொன்றைச் செய்திருந்தார். இது தொடர்பாக முதற் கணவரின் தாயார்(மாமியார்) செய்த முறைப்பாட்டை விசாரணை செய்த கோட்டை நீதவான் கனிஷ்க விஜேரத்ன 5 வருடங்களுக்கு ஒத்திவைத்த 6 மாத சிறைத் தண்டனையை விதித்தார்.

மர்மப்பொருள் வெடிப்பு: ஒருவர் பலி நால்வர் காயம்

05.09.2012.by.rajah.மர்மப்பொருள் வெடித்ததில் ஒருவர் பலியானதுடன் மேலும் நால்வர் படுகாயமடைந்த சம்பவமொன்று புத்தளம் கற்பிட்டி கந்தக்குளி பகுதியில் இன்று 3.30 மணியளவில் இடம்பெற்றது.

குறித்த சம்பவத்தினால் 17 வயதுடைய ருவான் அபயகோண் என்ற இளைஞனே பலியாகியுள்ளதுடன் படுகாயமடைந்த நால்வரும் கற்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்

சிறுப்பிட்டி கிராம இரு பெரியார் {கவுரவிப்பு }


05.09.2012.BY,rajah.சிறுப்பிட்டி  கிராமஇரு பெரியவர்களை மதிப்பளிக்க முன் வந்த சிறுப்பிட்டி மக்களுக்கும் சிறுப்பிட்டி இணையத்திற்கும் மற்றும் இவர்களை மதிக்கும் நண்பர்கள் அனைவர்க்கும் நவற்கிரிஇணையங்கள்சார்பாகமிகுந்த நன்றியும் வாழ்த்துக்களும் என்றும் உரித்தாகுக
 
சின்னையா வைத்திலிங்கம்
தம்பு இராமநாதன்
வாழ்க வாழ்வீர்பல்லாண்டு
 

வேம்படி கல்லூரி விவகாரம்! அரசியல் தலையீடு காரணமாக அதிகாரிகள் கைவிரிப்பு! அரச அதிபரிடம் மகஜர்

 
05.09.2012.BYrajah.
யாழ்.வேம்படி மகளிர் கல்லூரிக்கு ஒரு அதிபரை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி வேம்படி மகளிர் கல்லூரி பழைய மாணவிகள் அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகத்திற்கு மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர்.
இன்று காலை வேம்படி மகளிர் கல்லூரி முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இவர்கள் அதனைத் தொடர்ந்து யாழ்.அரச அதிபரைச் சந்தித்து மகஜர் ஒன்றையும் கையளித்தனர்.
இதன்போது அரச அதிபரிடம் கருத்து தெரிவித்த பழைய மாணவர் சங்கச் செயலாளர் திருமதி ஆனந்தகுமாரசாமி,
வேம்படி மகளிர் கல்லூரி விவகாரத்தில் அரசியல் தலையீடு இருப்பதால் தம்மால் எதுவும் செய்ய முடியாது என அரச அதிகாரிகள் கைவிரித்து விட்டதாக வெளிப்படையாக குற்றஞ்சாட்டினார்.
இதற்கு பதிலளித்த அரச அதிபர் இவ்விடயத்தில் உரிய கவனம் எடுத்து சம்பந்தப்பட்ட சகலருடனும் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
 

இலங்கையில் இன்னும் போர் சூழ்நிலையில் மாற்றம் இல்லை: சிங்கள ஊடகவியலாளர்

 
 
 
05.09.2012.BYrajah.
அவுஸ்திரேலியாக்கு செல்லும் இலங்கை அகதிகள் அனைவரையும் திருப்பியனுப்ப வேண்டும் என்று அந்த நாட்டின் எதிர்க்கட்சி கோரியுள்ள நிலையில், அதற்கு எதிராக பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஏபிசி வானொலி இந்தப் பிரசாரத்துக்காக இலங்கையில் இருந்து வெளியேறி கடந்த 5 வருடங்களாக ஐரோப்பாவில் தங்கியுள்ள சிங்கள ஊடகவியலாளரான பாஸன அபேவர்தனவை செவ்வி கண்டுள்ளது.
இலங்கையின் போர் முடிவுற்ற போதும் அங்கு இன்னும் போர் நடைபெற்ற சூழ்நிலைகள் மாறவில்லை என்று அவர் தனது செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை மக்களை இன்னும் பயபீதியில் வைத்திருப்பதையே இலங்கை அரசாங்கம் செய்து கொண்டிருக்கிறது. அங்கு மூடப்பட்ட ஒரு பயங்கரமான நிர்வாகம் ஆட்சி செய்து கொண்டிருக்கிறது.
அண்மையில் வெளியான ஒரு செய்தியின்படி, இலங்கையில் ஐந்து நாட்களுக்கு ஒருவர் காணாமல் போகும் தகவல் வெளியாகியுள்ளது. இது இலங்கையில் தொடர்ந்தும் போர் சூழ்நிலை இருப்பதையே காட்டுகிறது.
இலங்கை அரசாங்கம், இலங்கையில் போர் முடிந்து விட்டது. ஜனநாயகம் உருவாக்கப்பட்டு விட்டது என்று கூறினாலும், அங்கு அவ்வாறான ஒரு சூழ்நிலை இல்லை என்பதை அனைவரும் அறிவர்.
இலங்கையில் எந்த செய்தி வெளியாக வேண்டும் எது வெளியாகக்கூடாது என்பதைக்கூட இன்னும் இலங்கையின் ஆட்சி நிர்வாகமே தீர்மானிக்கும் நிலை உள்ளதாக பாஸன அபேவர்த்தன குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் இயல்பு திரும்பிவிட்டதாக தெரியவரும் போது அடுத்தநாளே இலங்கை அகதிகள் நாடு திரும்பிவிடுவர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதார அகதிகளே அரசியல் அடைக்கலம் கோருவதாக அவுஸ்திரேலிய எதிர்க்கட்சியின் கருத்தை நிராகரித்த அவர், பொருளாதாரத்தை மையமாகக் கொண்டு மாத்திரம் எவரும் அவுஸ்திரேலியாவுக்கு செல்லவில்லை.
இலங்கையில் எந்த ஒரு துறையிலும் ஈடுபடமுடியாத நிலை ஏற்பட்டுள்ளமையை அடுத்தே அவர்கள் அகதிகளாக செல்கின்றனர் என்று குறிப்பிட்டுள்ளார்.

பில்லா-2 ரெக்கார்டை பீட் செய்தது ‘நீதானே என் பொன்வசந்தம்’ டிரெய்லர்

05.09.2012.BYrajah.தமிழ் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்டுக் கொண்டிருக்கும் படம் “நீதானே என் பொன்வசந்தம்” என்பது நிரூபணமாகியிருக்கிறது.


கவுதம் மேனன் இயக்கத்தில் ஜீவா, சமந்தா நடிப்பில் உருவாகியிருக்கும் ‘நீதானே என் பொன்வசந்தம்’ படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்ட 2 நாட்களில் அதனை பார்வையிட்டோர் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? கொஞ்சம் வெயிட்…
அஜித்தின் பில்லா-2 படத்தின் டிரெய்லரை இணையதளத்தில் 2 நாட்களில் பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை 5.15 லட்சம். இதுதான் அப்போதைய ரெக்கார்ட்!
இந்த ரெக்கார்டை கடந்த 48 மணி நேரத்தில் தூக்கி சாப்பிட்டிருக்கிறது “நீதானே என் பொன்வசந்தம்”! எத்தனை லட்சமா? வெயிட்…
2.26 நிமிடங்கள் ஓடும் இந்த படத்தின் டிரெய்லரில் ஜீவா, சமந்தா, சந்தானம் ஆகியோர் தோன்றுகின்றனர்.

இப்ப கணக்கைச் சொல்றோம்..
“நீதானே என் பொன்வசந்தம்’ படத்தின் டிரெய்லரை 48 மணி நேரத்தில் பார்வையிட்டோரின் எண்ணிக்கை 7,03,659! அப்படிப் போடுங்க என்கிறீர்களா

௭கிப்திய தொலைக்காட்சியில் முதல் தடவையாக முக்காடு அணிந்து தோன்றிய அறிவிப்பாளர்

05.09.2012.BY.rajah.௭கிப்திய அரசாங்க தொலைக்காட்சியில் பெண் அறிவிப்பாளர் ஒருவர் இஸ்லாமிய முக்காடு அணிந்து தோன்றி புதுமை படைத்துள்ளார்.

1960 ஆம் ஆண்டு மேற்படி தொலைக்காட்சி சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டது முதற்கொண்டு பெண் அறிவிப்பாளர் ஒருவர் தலைக்கு முக்காடு அணிந்து கொண்டு பங்கேற்பது இதுவே முதல் தடவையாகும்.

பாத்திமா நபில் ௭ன்ற மேற்படி பெண் அறிவிப்பாளர் முக்காடு அணிந்தவாறு செய்தியொன்றை வாசித்தார்.





முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக்கின் ஆட்சிக்காலத்தில் பெண் அறிவிப்பாளர்கள் தமது தலையை மூடி முக்காடு அணிவதற்கு உத்தியோகபூர்வமற்ற தடை நிலவியமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் முஸ்லிம் சகோதரத்துவ கட்சி தலைமையிலான புதிய அரசாங்கமானது சுமார் 70 சதவீத ௭கிப்திய பெண்கள் தலைக்கு முக்காடு அணிவதாக தெரிவித்து புதிய சட்டவிதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்நிலையில் பாத்திமா நபில் ஞாயிற்றுக்கிழமை பகல் நேர செய்தியை வாசித்தார். இது தொடர்பில் பாத்திமா நபில் விபரிக்கையில், ஏனைய அறிவிப்பாளர்களும் தன்னைப் பின்பற்றி முக்காடுகளை அணிவார்கள் ௭ன ௭திர்பார்ப்பதாக அவர் தெரிவித்தார்

இலங்கையைர்கள் சென்ற பஸ் மீது கல்வீச்சு: திருச்சி காட்டூரில் பரபரப்பு

04.09.2012.BY.rajah.வேளாங்கண்ணியில் நடந்த தேவாலயப் பெருவிழாவில் கலந்து கொள்ள இலங்கையில் இருந்து சென்றுள்ள பக்தர்கள் பயணித்த பஸ்கள் மீது கல் வீசி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

திருச்சி விமான நிலையத்திற்கு செல்லும் வழியில் காட்டூரில் வைத்தே மேற்படி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனையடுத்து இப்பகுதியில் பெரும் பரபரப்புநிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனிடையே திருச்சி பால்பண்ணை என்ற இடத்தில், இலங்கை பக்தர்கள் வந்த பஸ்ஸை வழிமறித்து மறியல் போராட்டம் செய்ய முயன்ற சுமார் 60 பேரை பொலிசார் கைது செய்துள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன